ஹாலிவுட் படம் ‘மெட்ரோ’ தமிழில் வருகிறது
ஹாலிவுட்டில் தயாரான ஆங்கில படம் ‘மெட்ரோ’. தமிழில் அதே பெயரில் வருகிறது. உலகில் மெட்ரோ ரெயில் திட்டம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் கடந்து விட்டது. நாட்டில் நடக்கும் ஊழல் மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் ஊடுருவினால் என்ன ஆகும் என்பதே கதை.திகில், திரில்லிங் காட்சிகளுடன் இதை படமாக்கியுள்ளார் டைரக்டர் ஆண்டன் மெகர்டிச்வ். மெட்ரோ ரெயில் பயணம் என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர்.
செர்கே புஷ்கே பாலிஸ், அனாடோனி பிலியூ, அலெக்ஸி பர்ட் யூகோவ், கேத்ரினா ஆகியோர் நடித்துள்ளனர். மெட்ரோ இண்டோ ஓவர்சிஸ் பிலிம்ஸ் பெரோஸ் இலியாஸ் தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment