ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்......
ஸ்பைடர்மேன் ஹோம்கமிங்....
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. அந்த படத்தின் தொடர்ச்சியாக `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது.
அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை போலீசில் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார்.
இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார் பீட்டர் பார்க்கர்.
அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.
ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு சூட்டை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.
ஸ்பைடர் மேன் சூட் இல்லாமல், கடத்தல் கும்பலை எப்படி முறியடித்தார்? அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா? அவஞ்சர்ஸ் குழுவில் இடம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முந்தைய பாகங்களில் நடித்திருந்த ஸ்பைடர் மேன் போல, இந்த பாகத்தில் நடித்திருக்கும் டாம் ஹோலண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பள்ளி செல்லும் ஒரு இளைஞனுக்கு உண்டான துடிப்புடனும், காதல், சண்டை, நகைச்சுவை என அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
ஐயர்ன் மேனாக வரும் ராபர்ட் டவுனி எப்போதும் போல ஒரு சூப்பர் ஹீரோவுக்கு உண்டான கெத்துடன் வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. முன்னாள் பேட்மேனான மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ். ஜேக்கப் பேட்டலான் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. முக்கியமான காட்சியிலும் காமெடி செய்து சிரிக்க வைக்கும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மற்றபடி ஜான் பேவ்ரியூ, செண்டயா, டொனால்டு க்ளோவர், டைன் டேலி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
சூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே ஸ்பைர் மேன் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வந்து கொண்டிருக்கும் படங்களில், ஏலிகன்களின் வருகையால் ஏற்பட்ட பிரச்சனையால் கிளம்பும் புதிய பிரச்சனையை ஸ்பைடர் மேன் எப்படி முறியடிக்கிறார் என்பதை திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூப்பர் ஹீரோ படங்கள் பெரும்பாலும் அதிகளில் சீரியசாக இருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களை பெருமளவில் சிரிக்க வைப்பது சிறப்பு. குறிப்பாக தமிழ் டப்பிங்கும், அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் ரசிக்கும் படி இருக்கிறது.
மைக்கேல் ஜியேசினோவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். சால்வடோர் டோடினோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' காமெடி சீரியஸ்
- நடிகர் டாம் ஹொலண்ட்
- நடிகை செண்டாயா
- இயக்குனர் ஜான் வாட்ஸ்
- இசை மைகேல் ஜியாச்சினோ
- ஓளிப்பதிவு சல்வடோர் டோடினோ
கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் படத்தில் ஒரு முக்கிய காட்சியில் பீட்டர் பார்க்கர் எனப்படும் ஸ்பைடர் மேன் பங்கேற்றிருப்பார். அதில் அவெஞ்சர்கள் எனப்படும் சூப்பர் ஹீரோசுடன் இணைந்து பல்வேறு சாதனைகளை படைத்திருந்தார் என்பது நாம் அறிந்ததே. அந்த படத்தின் தொடர்ச்சியாக `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' உருவாகியிருக்கிறது.
அந்த சாதனைக்கு பிறகு அடுத்த வேலை வரும் வரை மக்களோடு மக்களாக வாழும் படி அறிவுறுத்துகிறார் ஐயர்ன் மேன் எனப்படும் ராபர்ட் டவுனி. இதையடுத்து, பள்ளி செல்லும் பீட்டர் பார்க்கர் மீண்டும் பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்போது திருட்டு உள்ளிட்ட சிறிய குற்றங்கள் செய்பவர்களை போலீசில் மாட்டிவிடுகிறார். அப்போது அவர்களிடம் அதிபயங்கரமான ஆயுதங்கள் இருப்பதையும் பார்க்கிறார்.
இதையடுத்து, அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சப்ளை செய்வது யார் என்பதை கண்டுபடிக்கும் முயற்சியிலும் ஈடுபடுகிறார். இதனை ஐயர் மேனிடம் சொல்கிறார். ஆனால் ஸ்பைடர் மேனின் பேச்சை ஐயர்ன் மேன் பொருட்படுத்தாததால், அந்த ஆயுதங்கள் சப்ளை செய்பவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் களமிறங்குகிறார் பீட்டர் பார்க்கர்.
அப்போது, அந்த ஆயுதங்களை கைமாற்றும் கும்பல் கப்பலில் இருப்பதாக கிடைக்கும் தகவலை அடுத்து, அவர்களை பிடிக்க ஸ்பைடர் மேன் அந்த கப்பலுக்கு செல்கிறார். அப்போது, ஸ்பைடர் மேன் மீது நடத்தப்படும் தாக்குதலில், அந்த கப்பல் இரண்டாக உடையும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து தனது சக்தியின் மூலம் அந்த கப்பலை மீண்டும் ஒட்ட வைக்க முயற்சிக்கிறார். இதையடுத்து அங்கு வந்த ஐயர்ன் மேன், இரண்டாக பிளந்த கப்பலை ஒன்றிணைத்து, அதில் இருந்த மக்களையும் காப்பாற்றுகிறார்.
ஆனால் தனது பேச்சை கேட்காமல், அதிகப்பிரசங்கித்தனமாக ஈடுபடுவதால், தான் கொடுத்த ஸ்பைடர் மேன் சிறப்பு சூட்டை அவரிடமிருந்து ஐயர்ன் மேன் திரும்பப் பெற்று விடுகிறார். மேலும் பீட்டர் பார்க்கரை அவரது குழுவில் இருந்தும் நீக்கி விடுகிறார். அதுவே உனது அதிகப்பிரங்கித்தனத்துக்கான தண்டனை என்றும் கூறிவிடுகிறார்.
ஸ்பைடர் மேன் சூட் இல்லாமல், கடத்தல் கும்பலை எப்படி முறியடித்தார்? அவருக்கு மீண்டும் சூட் கிடைத்ததா? அவஞ்சர்ஸ் குழுவில் இடம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முந்தைய பாகங்களில் நடித்திருந்த ஸ்பைடர் மேன் போல, இந்த பாகத்தில் நடித்திருக்கும் டாம் ஹோலண்டும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பள்ளி செல்லும் ஒரு இளைஞனுக்கு உண்டான துடிப்புடனும், காதல், சண்டை, நகைச்சுவை என அனைத்து பரிணாமங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
ஐயர்ன் மேனாக வரும் ராபர்ட் டவுனி எப்போதும் போல ஒரு சூப்பர் ஹீரோவுக்கு உண்டான கெத்துடன் வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு முக்கியமானதாக அமைகிறது. முன்னாள் பேட்மேனான மைக்கேல் கீட்டன் வில்லனாக நடித்திருப்பது படத்திற்கு ப்ளஸ். ஜேக்கப் பேட்டலான் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. முக்கியமான காட்சியிலும் காமெடி செய்து சிரிக்க வைக்கும் ஜேக்கப்பின் கதாபாத்திரம் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. மற்றபடி ஜான் பேவ்ரியூ, செண்டயா, டொனால்டு க்ளோவர், டைன் டேலி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
சூப்பர் ஹீரோக்கள் படங்களிலேயே ஸ்பைர் மேன் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று சொல்லலாம். அந்த வகையில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வந்து கொண்டிருக்கும் படங்களில், ஏலிகன்களின் வருகையால் ஏற்பட்ட பிரச்சனையால் கிளம்பும் புதிய பிரச்சனையை ஸ்பைடர் மேன் எப்படி முறியடிக்கிறார் என்பதை திரைக்கதையில் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சூப்பர் ஹீரோ படங்கள் பெரும்பாலும் அதிகளில் சீரியசாக இருக்கும் நிலையில், இந்த படம் ரசிகர்களை பெருமளவில் சிரிக்க வைப்பது சிறப்பு. குறிப்பாக தமிழ் டப்பிங்கும், அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள வசனங்களும் ரசிக்கும் படி இருக்கிறது.
மைக்கேல் ஜியேசினோவின் இசை படத்திற்கு கூடுதல் பலம். சால்வடோர் டோடினோவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.
மொத்தத்தில் `ஸ்பைடர்மேன்: ஹோம்கம்மிங்' காமெடி சீரியஸ்
குள்ள நடிகரின் கின்னஸ் சாதனையின் சோகமான பின்னணி...! மகளுக்கு இன்றும் விளையாட்டு தோழன்??
புகழ்பெற்ற நடிகரான கின்னஸ் பக்ரு 30 வருடங்களாக சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ள பக்ரு, தன்னுடைய மகளுக்கு அப்பா என்பதைவிட விளையாட்டு தோழன் என்றே குறிப்பிடுகிறார்.
மேலும் அவர், எனது 10 வயதில் பள்ளி விடுமுறை நாட்களின் போது, 1986–ல் நான் ‘அம்பிலிஅம்மாவன்’ என்ற முதல் திரைப்படத்தில் நடித்தேன்.
அந்த படத்தில் எனது பெயர் உண்ட பக்ரு. அதன் பின்பு தான் கின்னஸ் சாதனையாளராக, நான் கின்னஸ் பக்ருவாக மாறினேன், அற்புத தீவு எனும் படம் தான் எனக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது.
எனது திருமண வாழ்க்கை இரண்டு வருடம் கூட ஓடாது என்று சிலர் சொன்னார்கள். ஆனால் எங்கள் திருமணம் நடந்து 12 வருடங்கள் ஆகிவிட்டது.
எனது மூத்த மகள் இறந்த போதும், எனது கழுத்து அறுவை சிகிச்சையின் போதும், என்னுடைய மனைவியும், தாயும் எனக்கு தைரியம் கொடுத்தார்கள்.
என்னுடைய மனைவி தனது குடும்பத்தை கவனித்துக் கொள்வதுடன் மட்டுமில்லாமல், சொந்தமாக தொழிலும் செய்து வருவதாக கூறியுள்ளார்.
பிக்பாஸ் செலவு 70 கோடி! வரவு 1180 கோடி! கமலுக்கு மட்டும் எவ்வளவு தெரியுமா??
விஜய் டிவியை ஆன் பண்ணினாலே முட்டைக்கண்ணை உருட்டியபடி கமல்ஹாசன் பயமுறுத்திக் கொண்டிருந்தார் – கடந்த சில வாரங்களாக. கமல்ஹாசனை ஏறக்குறைய பூச்சாண்டியாக மாற்றிய பிக் பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக விஜய் டிவியில் நேற்று தொடங்கிவிட்டது.
எதிர்பார்த்ததுபோலவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமில்லை, தவிர கமல்ஹாசனின் தொகுப்புரை படு செயற்கை.
மயிலாப்பூர் அம்பிகளின் அமெச்சூர் நாடகத்தைப்பார்ப்பதுபோல் படு நான்சென்ஸாக இருந்தது.
வேறு எதையும் யோசிக்கவிடாமல் சுவாரஸ்யமாக இருந்திருந்தால் பார்வையாளனின் கவனம் நிகழ்ச்சியில் நிலைத்திருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் மட்டுமல்ல நம்பகத்தன்மையும் மிஸ்ஸிங்.
இதன் காரணமாகவோ என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூகவலைத்தளங்களில் கன்னாபின்னா கமெண்ட்ஸை தெறிக்கவிடுகிறார்கள். பிக் பாஸ்
ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும்போதே மீம்களும் வலம்வரத்தொடங்கிவிட்டன. குறிப்பாக கட்டிப்புடி சினேகன் பங்கேற்பாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததுமே… கற்பை பறி கொடுத்துவிட்டு ஒரு பெண் கண்ணை கசக்குவதுபோல் மீம்ஸ் வர ஆரம்பித்துவிட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் டிவி செய்த செலவு என்ன? இந்த நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவிக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு போன்ற விஷயங்களும் வாட்அப்பில் வரத்தொடங்கிவிட்டன.
இந்த புள்ளி விவரம் எந்தளவுக்கு உண்மையோ… ஒருவேளை உண்மையாக இருந்தால் விஜய் டிவிக்கு கொள்ளை லாபம்தான்.
ஸ்டுடியோ செட்டிங் செலவு – 20 கோடி.
நிகழ்ச்சி ஆங்கர் கமலுக்கு – 20 கோடி.
மற்ற 15 பேருக்கு – 2 கோடி
100 நாள் படப்பிடிப்பு செலவு – 25 கோடி
முதல் நாள் மற்றும் கடைசி நாள் விழாச் செலவு – 3 கோடி
மொத்த செலவு -70 கோடி
இனி வரவு!
விளம்பரம் மட்டும் 30 வினாடிக்கு- 25 லட்சம்
ஒரு நாளின் மொத்த வியாபார நிமிடங்கள் 25 (x 60 விநாடி = 1500/30 = 50x.25) = 12.5 கோடி
100 நாட்களுக்கு வரவு – 1250 கோடி
மொத்த லாபம் = 1180 கோடிகள்!
விஜய் குறித்து பிரபலங்கள் கூறுவது என்ன? பிறந்தநாள் ஸ்பெஷல்
இளைய தளபதி தற்போது தளபதி விஜய்யாக புது அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே மெர்சல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ஆரம்பித்துவிட்டது. விஜய் பெயரிலேயே வெற்றியை மறைத்து வைத்திருப்பவர்.22-06-2017
பல அவமானங்களை தாண்டி இன்று அரியணையில் ஏறும் வரை உயர்ந்தது விஜய்யின் கடின உழைப்பே காரணம், இந்நிலையில் விஜய் குறித்து திரையுலக பிரபலங்கள் என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா? பார்ப்போம்.
ரஜினிகாந்த்: விஜய் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார் என்று சொல்லி கேள்வி பட்டுள்ளேன், ஆனால், திரையில் அவரின் நடிப்பு என்னை பிரமிக்க வைக்கும்.
முருகதாஸ்: விஜய் சாரை நான் எப்போதுமே பிரமிப்புடன் தான் பார்ப்பேன், ஏனெனில் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்று அவருக்கு தெரியுமா? என்று தெரியவில்லை, அத்தனை அமைதியாக தான் படப்பிடிப்பில் இருப்பார், கத்தி படத்தில் அவர் பேசியதை உண்மையாகவே அவர் மக்கள் முன்னால் பேச வேண்டும், அதுதான் என் விருப்பம்
சூர்யா: விஜய்யை பார்த்து பிரமித்துவிட்டேன், கல்லூரி நாட்களில் இருந்து எனக்கு விஜய்யை தெரியும், அதனால், அவருடைய வளர்ச்சி கூடவே இருந்து பார்த்து வருகிறேன், அவருடன் நடனமாட யாராலுமே முடியாது.
விஷால்: விஜய்யின் வளர்ச்சியை யாரிடமும் ஒப்பிட முடியாது, அவர் நடிக்க வந்த போது பல பத்திரிகைகள் கிண்டல் செய்தது, ஆனால், இன்று அந்த பத்திரிகையில் அட்டைப்படமாக விஜய் உள்ளார்.
சூரி: விஜய் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர், எல்லோருக்குமே மரியாதை கொடுக்க தெரிந்தவர்.
அனுஷ்கா: விஜய் போல் நேரத்திற்கு சரியாக வரும் ஹீரோவை நான் பார்த்தது இல்லை, சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார்.
எஸ்.ஜே.சூர்யா: ரஜினிக்கு பிறகு சொன்ன நேரத்திற்கு சரியாக படப்பிடிப்பிற்கு வருவது விஜய் தான்.
விக்ரம்: விஜய் என்னுடைய ஸ்வீட் ப்ரண்ட்
தனுஷ்: விஜய் சாருக்கு இணையாக நடனமாட யாருமே இங்கு இல்லை.
ஜுனியர் என்.டி.ஆர்: என்னை விட விஜய் தான் தென்னிந்தியாவிலேயே சிறப்பாக நடனமாடுபவர்.
சிவகார்த்திகேயன்: இன்றும் நான் நடனமாடும் போது விஜய் சார் போல் முகத்தை சிரித்தப்படி வைத்து ஆட முயற்சி செய்வேன், அவர் போல் கிரேஸாக யாராலும் நடனமாட முடியாது.
ஷங்கர்: முதல்வன் படத்தை முதலில் நான் ரஜினியை வைத்து எடுக்கவிருந்தேன், அவர் மறுத்தவுடன் அடுத்த என்னுடைய சாய்ஸ் விஜய் தான் இருந்தார்.
கமல்ஹாசன்: இவர் பார்க்க தான் சைலண்ட், ஆனால், திரையில் இவரின் எனர்ஜி எனக்கு மிகவும் பிடிக்கும், அதை விட அவரின் உழைப்பு மிக பிடிக்கும். அமைதியாக உழைப்பவர்.
அஜித்: விஜய் எனக்கு நல்ல நண்பர், சிறு வயதில் விஜய்யின் அம்மா கையால் பல முறை சாப்பிட்டுள்ளேன்.
சாந்தனு: விஜய்யின் ரசிகன் என்று நான் சொன்னதே இல்லை, அவரின் தம்பி தான் நான், என்னை அப்படி தான் அவர் பார்க்கின்றார்.
விஜய் சேதுபதி: விஜய் சாரோட நடனத்திற்கு நான் பெரிய ரசிகன்.
சிம்பு: நான் தல அஜித்திற்கு ரசிகன், ஆனால், தளபதி விஜய்க்கு ஒரு தம்பி
விஜய்யின் வெற்றி பயணம் இன்று போல் என்றுமே நிலைத்திருக்க சினிஉலகம் அவரின் பிறந்தநாளான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
மெர்சல்’ ஆக காளையுடன் களமிறங்கும் விஜய்....
விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘தளபதி 61’ படத்தை அட்லி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை விஜய்யின் பிறந்தநாளான நாளை (ஜுன் 22) அன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், அதன்பின்னர் ஒருநாள் முன்னதாகவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிடப்போவதாக அறிவித்தனர்.
இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் ரொம்பவும் எதிர்பார்ப்போடு காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், தலைப்பையும் படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் தலைப்பாக ‘மெர்சல்’ என்று சென்னை பாஷையில் பெயர் வைத்துள்ளனர். பனியனுடன் விஜய் முறுக்கு மீசையுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர். பின்னணியில் காளைகள் பாய்ந்து வருவது போலவும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்துள்ளனர்.
இப்படத்தில் விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கதாநாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தன்னுடைய 100-வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறது.
தீபாவளிக்கு இப்படம் வெளியாகிறது. அதற்கு முன்னதாக வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் ஆடியோ வெளியீடு நடைபெறவிருக்கிறது. இந்த விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
2017-ல் இதுவரை வெளிவந்த படங்களில் ஹிட் மற்றும் தோல்வியடைந்த படங்கள் லிஸ்ட்....
2017-ம் வருடம் 6 மாதம் முடிவடையும் நேரத்தில் இதுவரை 100 படங்கள் வரை ரிலிஸாகிவிட்டது. இதில் நமக்கு தெரிந்து 50 படங்கள் கூட அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்று அடைந்திருக்காது.
- #Kavan#Baahubali - The Conclusion#Bairavaa#S3 (Singam 3)#Adhe Kangal#Sathriyan#Rangoon#Saravanan Irukka Bayamaen#Maanagaram#Sangili Bungili Kadhava Thorae#Pa Paandi#Kadamban#Motta Shiva Ketta Shiva
- அதே கண்கள்
- எமன்
- குற்றம்-23
- மாநகரம்
- கவண்
- பாகுபலி-2
- சங்கிலி புங்கிலி கதவ தொற
- சுமாராக வரவேற்பு பெற்ற படங்கள்
- பைரவா (படத்தின் பட்ஜெட் அதிகம் அதனால் ரூ 100 கோடி வசூல் செய்தும் பெரிய லாபம் வரவில்லை)
- சிங்கம்-3
- காஸி
- கடுகு
- பா.பாண்டி
- சரவணன் இருக்க பயமேன்
- தொண்டன்
- 8 தோட்டக்கள்
- ரங்கூன்
- தோல்வி படங்கள்
- கோடிட்ட இடங்களை நிரப்புக
- எனக்கு வாய்த்த அடிமைகள்
- போகன்
- ரம்
- முப்பரிமாணம்
- யாக்கை
- மொட்ட சிவா கெட்ட சிவா
- கட்டப்பாவ காணோம்
- புரூஸ்லீ
- தாயம்
- பாம்பு சட்டை
- என்கிட்ட மோதாதே
- நாலு பேருக்கு நல்லதுனா எதுமே தப்பில்லை
- டோரா
- காற்று வெளியிடை
- சிவலிங்கா
- கடம்பன்
- நகர்வலம்
- எங்க அம்மா ராணி
- எய்தவன்
- பிருந்தாவனம்
- போங்கு
- முன்னோடி
- சத்ரியன்
- அட்டு
சச்சின் பல கோடி கனவுகள் திரை விமர்சனம்....
இந்திய கிரிக்கெட் உலகின் கடவுள் என்று வர்ணிக்கப்படுபவர் சச்சின். இந்தியா மட்டுமின்றி உலகமே தலையில் தூக்கி கொண்டாடும் ஒரு சரித்திர நாயகன் சச்சின். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை கிரிக்கெட் என்ற ஒரு சொல் தெரியும் என்றால் அதற்கு பெரும்பங்கு சச்சின் என்ற பெயருக்கே உள்ளது. சாதனைகளே அசந்துவிடும் இவரின் சாதனைகளை அறிந்தால், அவரின் வாழ்க்கையை நாம் அறிய சரியான தருணம் தான் இந்த சச்சின் திரைப்படம்.
சச்சின் பல கோடி கனவுகள் இப்படத்தின் கதை, படத்தை பற்றிய அலசல் என்பதை எல்லாம் தாண்டி சச்சின் என்ற ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கையில் கடந்து வந்த சாதனைகள் மற்றும் சோதனைகள் என்ன என்பதன் ஒரு டாக்குமெண்ட்ரி என கூறிவிடலாம்.
இந்தியா 1983-ம் ஆண்டு உலக கோப்பை வெற்றி பெற்ற போது கிரிக்கெட் மீது ஒரு சிறுவனுக்கு ஆர்வம் வர, அதன் பின் தன் அண்ணன் அஜித்தின் மேற்பார்வையில் கிரிக்கெட் விளையாட தொடங்குகின்றார்.
இதை அனைத்தும் 10-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் நாம் படித்தே தெரிந்து கொண்டிருப்போம். ஆனால், இதில் என்ன புதியதை காட்டப்போகிறார்கள் என்றால், கிரிக்கெட் என்றாலே நமக்கு சச்சின் என்று தெரியும். ஆனால், சச்சினுக்கு கிரிக்கெட் எத்தனை முக்கியத்துவம் என்பதை இயக்குனர் James Erskine அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.
சச்சின் என்றாலே அமைதி என்று நமக்கு தெரிந்த முகம். இதற்கு அப்படியே எதிர்மறையாக தன் சிறுவயதில் செம்ம கலாட்டா செய்யும் சுட்டி. அந்த தருணத்தில் அவரை கிரிக்கெட் எப்படி நல்வழிப்படுத்துகின்றது என்பதை காட்டியவிதம் ரசிக்க வைக்கின்றது.
அவரை கிரிக்கெட் மைதானத்தில் பார்த்து வந்த நமக்கு, சச்சின் தன் குடும்பத்தினரிடம் எப்படி நடந்துக்கொள்வார், அவர்களுக்காக நேரம் ஒதுக்குவாரா? தன் நண்பர்களுடன் எப்படி நேரத்தை செலவிடுவார் என நமக்கு தெரியாத பல முகங்களை படம்பிடித்து காட்டியுள்ளனர்.
அதிலும் யாருமே பார்த்திராத, தன் குழந்தைகளுடன் சச்சின் விளையாடுவது, அர்ஜுனிடம் அடிவாங்குவது, நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் கலாட்டா செய்வது என சச்சின் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் விஷயங்கள் அடங்கியிருக்கும்.
அதேபோல் தனக்கு கேப்டன் பதவி எத்தனை பாரமாக இருந்தது. இதனால், தன் அணிக்கு வந்த பிளவுகள் என பல விஷயங்களை தைரியமாக காட்டியுள்ளனர். கிரேக் சாப்பலின் கோச்சிங் நேரம் தான் இந்தியாவின் மிக மோசமான தருணம்.
அவரின் குண நலன்கள் குறித்தும், சீனியர் வீரர்களை அவர் ஒதுக்கியது குறித்தும் பலருக்கும் தெரியாத தகவல்களை காட்டியுள்ளனர். ஆனால், தோனியை கேப்டன் ஆக்கியதே சச்சின் தான்.
இவை தோனி படத்தில் வரவில்லை, ஒருவேளை சச்சின் படத்தில் வரும் என்று நினைத்தால், இதிலும் அதைப்பற்றி ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. 24 வருட கனவாக சச்சின் உலககோப்பையை கையில் ஏந்துவதுடன் படம் நிறைவடைகின்றது.
சச்சினின் கிரிக்கெட் மட்டுமின்றி அவருடைய வாழ்க்கையையும் மிக அருகில் இருந்து பார்த்தது போன்ற உணர்வு. இப்படி பல சாதனைகளை இந்தியாவிற்காக படைத்த ஒரு ஜாம்பவானின் படம், தோனி படத்தை போல் கொஞ்சம் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி எடுத்திருக்கலாம். டாக்குமெண்ட்ரி போல் எடுத்தது வருத்தம் தான். இதன் காரணமாகவே ரகுமான் இசையும் பெரிதும் கவரவில்லை.
எது எப்படியோ மைதானம் மட்டுமின்றி அரங்கமும் அதிர்கின்றது சச்சின்...சச்சின் என்ற வார்த்தையால். மார்க் (Rating) மொத்தத்தில் இந்த படம் என்ன என்பதை எல்லாம் தாண்டி சாதனை நாயகனை கொண்டாட இதுவே சரியான தருணம், கண்டிப்பாக சச்சினின் வாழ்க்கை பயணத்தில் நீங்களும் பங்கு பெறலாம்.
ரஜினியின் காலா தலைப்புக்கு புதிய சிக்கலா...ஒரு பார்வை
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து பா.ரஞ்சித் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்திற்கு 'காலா' என பெயரிட்டு, First Look போஸ்டர்கள் வெளியானபோது இணையமே அதிர்ந்தது.
இந்த நிலையில் காலா என்ற தலைப்புக்கு புதிய சிக்கல் வந்துள்ளது. அந்த தலைப்பை யாரோ ஒரு தயாரிப்பாளர் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ளாராம், அது தெரியாமல் அந்த தலைப்பை வைத்துவிட்டனர்.
அந்த தயாரிப்பாளரிடமிருந்து காலா டைட்டிலை வாங்க தற்போது, தயாரிப்பாளர் தனுஷ் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.
புதுப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே தனது 164வது படத்தின் பெயரை அறிவித்துவிட்டார் ரஜினி. காலா கரிகாலன் என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டது.
இந்த நிலையில் இப்படத்தில் தேசிய விருது வாங்கிய நான்கு பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
தனுஷ்- நடிகர் ஆடுகளம், தயாரிப்பாளர் காக்கா முட்டை, விசாரணை
ஸ்ரீகர் பிரசாத்- சிறந்த எடிட்டர் (7 முறை)
சமுத்திரக்கனி- சிறந்த துணை நடிகர் (விசாரணை)
அஞ்சலி படில்- ஸ்பெஷலாக நா பங்காரு தல்லி (தெலுங்கு)
இப்படி படத்தில் தேசிய விருது வாங்கிய கலைஞர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களை
ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் இன்று ரஜினி படத்தின் பெயர் வெளியாகி இருந்தது. ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு காலா கரிகாலன் என்று பெயரிட்டுள்ளனர்.
படத்திற்கு ஏன் இப்படி ஒரு பெயர் என ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கம் கொடுத்துள்ளார் ரஞ்சித்.
அவர் கூறியதாவது, காலா என்றால் காலன், எமன் என்று பொருள். கரிகாலன் என்பதன் சுருக்கமே 'காலா' என்று வைக்கப்பட்டுள்ளது. நெல்லை வட்டாரங்களில் எமனை 'காலா' சாமியாக வழிபடுவார்கள். மும்பையில் வசிக்கும் நெல்லை வட்டார மக்களின் வாழ்க்கையை சொல்வது தான் காலா படத்தின் கதை என்றார்.
ரஜினிக்கு மிகவும் பிடித்த பெயர் கரிகாலன். இந்த தலைப்பை நான் அவரிடம் தெரிவித்ததும் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது என்றும் கூறினார்.
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்....
திரைப்பட நடிகர் வினுசக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.
1945-ம் ஆண்டு மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் பிறந்த வினுசக்கரவர்த்தி, கோபுரங்கள் சாய்வதில்லை, குரு சிஷ்யன், ராஜாதி ராஜா போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர்.
தென்னிந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் வினுசக்கரவர்த்தி நடித்துள்ளார்.
இவர், 'வண்டிச்சக்கரம்' படத்தின் மூலம் நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகப்படுத்தினார். கடைசியாக 2014-ம் ஆண்டு வெளிவந்த 'வாயை மூடி பேசவும்' படத்தில் நடித்திருந்தார்.
ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு....
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படம்தான் மலையாளத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவானது. அப்படம் சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானது. வசூலில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வசூலைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி ரூ.600 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த படத்தில் மோகன்லால் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாளர் இந்த நாவலை படமாக தயாரிக்க முன்வந்துள்ளார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகப்போவதாக கூறப்பட்ட இந்த படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. மகாபாரத்தில் பஞ்ச பாண்டவர்களில் இரண்டாவதாக வரும் பீமனின் பார்வையில் வைத்து இந்த கதையை எழுதியுள்ளாராம்.
ஸ்ரீகுமார் மேனன் இப்படத்தை இயக்கவுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாக்கவுள்ளனர். இதுதவிர, பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடவுள்ளனர். இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவில் உள்ள கலைஞர்கள் இப்படத்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் படப்பிடிப்பை 2018 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி, 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கவுள்ளதாகவும், முதல் பாகம் வெளிவந்த அடுத்த 3 மாதங்களுக்குள் இரண்டாம் பாகத்தை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மோகன்லால் நடிக்கவுள்ள இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்பலாம்.
வடிவேலுவுடன் ஜோடி சேர்ந்து கலக்கியவர்களின் கதை தெரியுமா?
வடிவேலுவுடன் இணைந்து வயிறு குலுங்க சிரிக்கவைத்த இவர்களின் முகங்கள் நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இவர்கள் பின்னால் இருக்கும் கதைகள் தெரியுமா? தெரிஞ்சுக்குவோமா....
வடிவேலு காமெடியில் வெங்கல் ராவ்
வெங்கல் ராவ் :-
கழுத்திலிருந்து கையை எடுத்தால் சங்கைக் கடிக்கும் வினோத வியாதி கொண்டவராக நடித்தவர் வெங்கல் ராவ். திரையில் வடிவேலுவுடன் இணைந்து கலகலப்பூட்டும் இவருக்குப் பின்னால் பெரும் சோகக்கதை இருக்கிறது. விஜயவாடாவைச் சேர்ந்த வெங்கல் ராவின் அப்பா, வெங்கல் ராவ் சிறுவனாக இருக்கும்போதே காலமாகிவிட்டார். குடும்பச் சூழ்நிலை காரணமாக சிறுவயதிலேயே ஒன்றரை ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்தார். அப்போது, அந்த ஊரில் இருந்த குஸ்தி வாத்தியார் குஸ்தி போடுவதை, சிலம்பம் சுற்றுவதைப் பார்த்து அதில் ஆர்வமான வெங்கல் ராவ், கற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார். 10 வருடங்கள் குஸ்திப் பயிற்சி பெற்றவர், ஸ்டன்ட் நடிகராக ஆசைப்பட்டு சென்னைக்கு ரயிலேறினார். சினிமாவில் பல வருடங்களாக ஸ்டன்ட் நடிகராக நடித்த வெங்கலுக்கு வயதாக ஆக வாய்ப்புகள் குறைந்துவிட்டன. அந்தச் சமயத்தில் வடிவேலுவிடம் தனது கஷ்டத்தை எடுத்துக் கூற, அவரும் தான் நடிக்கும் படங்களில் சில சீன்களில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்துள்ளார். `தலைநகரம்', `வேல்', `கந்தசாமி' எனப் பல படங்கள் வடிவேலுவுடன் நடித்த வெங்கல் ராவ் `வடிவேலுதான் எனக்கு வாழ்க்கை கொடுத்த தெய்வம்' என நெகிழ்ச்சியாகக் கூறுவாராம்.
முத்துக்காளை :
`சிக்கன் 65-ல் அஞ்சு இங்கே இருக்கு. மிச்சம் அறுபது எங்கடா போச்சு?' என கோக்குமாக்காய் கேள்விகேட்டு வடிவேலுவை கதிகலங்க வைத்தவர். நெற்றியில் எலும்புக்கூடு படம் வரைந்துகொண்டு வடிவேலுவின் காதைத் தொட தெருத்தெருவாக துரத்தியே பிரபலமானவர் முத்துக்காளை. `இம்சை அரசன்', `திவான்', `என் புருஷன் குழந்தை மாதிரி' என பல படங்கள் வடிவேலுடன் இணைந்து நடித்திருக்கிறார். ராஜபாளையம் அருகிலுள்ள சங்கம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்த முத்துக்காளை, இளம் வயதிலேயே தற்காப்பு கலைகள், ஜிம்னாஸ்டிக்ஸ், சிலம்பம் ஆகியவை கற்றவர். சினிமாவில் ஸ்டன்ட் நடிகராக ஆசைப்பட்டு சென்னைக்கு பஸ் ஏறியவர், விஜய் நடித்த `காதலுக்கு மரியாதை' படம் மூலம் ஸ்டன்ட் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் `பொன்மனம்' என்ற திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்த முத்துக்காளைக்குத் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. காமெடிக் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துவரும் இவர் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார்.
அல்வா' வாசு :
மதுரையை சொந்த ஊராகக் கொண்ட `அல்வா' வாசுவின் முழுப்பெயர் வாசுதேவன். `அல்வா' எனும் அடைமொழி `அமைதிப்படை' படத்தால் வந்தது. அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்ததும் சென்னையைச் சுற்றிப்பார்க்க பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பிடித்திருக்கிறார். சென்னைக்கு வந்து இறங்கியதும் சினிமாத் துறையில் இருக்கும் தனது நண்பனை சந்திக்கச் சென்ற `அல்வா' வாசுவும் `சினிமாதான் இனி வாழ்க்கை' என அங்கேயே தங்கிவிட்டார். அதன் பின்பு மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தவர், `வாழ்க்கை சக்கரம்' படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் தொடர்ந்து நடித்துவந்த `அல்வா' வாசு, வடிவேலுவுடன் இணைந்து `இங்கிலீஷ்காரன்', `கருப்புசாமி குத்தகைதாரர்' , `எல்லாம் அவன் செயல்' என நிறையப் படங்களில் நடித்திருக்கிறார்.
`போண்டா' மணி :
ஊரணிக்குள் இருந்து எழுந்து வந்து `அடிச்சுக்கூட கேட்பாங்க. அப்பவும் எதையும் சொல்லிடாதீக' என ஒரே ஒரு டயலாக்கைப் பேசிய பிரபலமானவர் `போண்டா' மணி. இலங்கையை சொந்த ஊராகக் கொண்ட இவரது இயற்பெயர் கேதீஸ்வரன். பள்ளிக்காலங்களில் இருந்தே மேடை நாடகங்களில் நடித்து வந்தவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க ஆசை. 80-களின் ஆரம்பத்தில் சிங்கப்பூருக்கு வேலையாக சென்றிருந்த `போண்டா' மணி அங்கே இயக்குநர் பாக்யராஜை சந்தித்திருக்க்கிறார். அவரிடம், தனது கனவையும் கூறியிருக்கிறார். பின்னர், இலங்கையில் பிசினஸ் செய்துகொண்டிருந்தவருக்கு காலில் அடிபட்டு விட, மருத்துவம் பார்க்க தமிழகத்திற்கு வந்துள்ளார். அப்போது மறுபடியும் பாக்யராஜை சந்திக்க வாய்ப்பு கிடைக்க, கூடவே `பவுனு பவுனுதான்' படத்தில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அங்கு ஆரம்பித்த பயணம் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.
செல்லதுரை :
பிரபா ஒயின்ஷாப் காமெடியில் வடிவேலுவுடன் இணைந்து கலக்கியவர். `தாஸ்',` தலைநகரம்' எனப் பல படங்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறார். பாக்யராஜ் இயக்கிய `தூறல் நின்னுப் போச்சு' படத்தில் அறிமுகமானவர், கிட்டதட்ட 300 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
கிரேன் மனோகர் :
'ரெண்டு' படத்தில் `என் கூட சரசம் பண்றதுக்குனே கிளம்பி வர்றீங்களடா, ஏன்டா இப்படி பட்ட இடத்துல வந்தே பன்ச் பண்றீங்க?' என வடிவேலுவைக் கதறவைத்தவர். `நாட்டாமை' படத்தில் அறிமுகமானவர், அதன் பிறகு, `முத்து' படத்தில் டீக்கடைக்காரராக நடித்தார். அதன் பின்னர் `பாட்டாளி',`ஏய்',`வின்னர்' எனப் பல படங்கள் வடிவேலுவுடன் இணைந்து நடித்தார்.
இன்னும் இந்த லிஸ்டில் `நெல்லை' சிவா, பெஞ்சமின், `சூப்பர் குட்' லெஷ்மன், அமிர்தலிங்கம் என நிறையப் பேர் இருக்கிறார்கள்.
மரபணு சோதனைக்கு மறுக்கும் தனுஷ்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை....
பணம் பறிக்கும் நோக்கத்திலேயே நடிகர் தனுஷ் மீது மேலூர் தம்பதி அபாண்டமாக வழக்கு தொடுத்துள்ளதாக வழக்கறிஞர் சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
நடிகர் தனுஷிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்திலேயே மேலூர் தம்பதி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், மருத்துவ அறிக்கை தனுஷுக்கு சாதகமாக இருப்பதாகவும் வழக்கறிஞர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி மேலூர் தம்பதி கதிரேசன் - மீனாட்சி குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இல்லை என குறிப்பிட்ட அவர், சிறிய மச்சங்களை அழிக்க முடியும் என்றுதான் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனுஷ் தனது உடலில் மச்சங்களை அழித்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றார். மேலூர் தம்பதியின் இந்த நடவடிக்கைகள் தனுஷிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கமாக கூட இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே கதிரேசனின் வழக்கறிஞர் டைட்டஸ், நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கையில் அங்க அடையாளம் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனால் மரபணு சோதனைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த சோதனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், தனுஷ் தரப்பில் மறுக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது எங்கள் தரப்பு இறுதி வாதத்தை எடுத்து வைப்போம் என்றார்.
கதிரேசன் தரப்பில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பராமரிப்புச் செலவு கோரிய வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், விரைவில் விசாரணையை முடிக்கவும் கோருவோம் என்றார்.
ரஜினி, கமல், அஜித் செய்ததை, முதன் முதலாக செய்யும் விஜய்....
ரஜினி, கமல், அஜித் ஆகியோர் செய்ததை தனது படத்தில் முதன்முதலாக விஜய் செய்யவிருக்கிறாராம். அது என்னவென்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஜய் 61’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் மூன்று கெட்டப்புகளில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன் ‘மூன்று முகம்’ படத்தில் ரஜினி மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதுபோல், ‘அபூர்வ சகோதர்கள்’ படத்தில் கமல் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். அஜித்தும் ‘வரலாறு’ படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். ஆனால், இதுவரை விஜய் 3 வேடங்களில் எந்த படத்திலும் நடித்தது கிடையாது. இந்த படத்தில்தான் முதன்முதலாக விஜய் 3 வேடங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு முதல் ஆஸ்கர்....
ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசானுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
கடந்த 1960ம் ஆண்டு முதல் கலைத்துறையில் பணியாற்றி வரும் ஜாக்கி சானுக்கு இதுவரை ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்தநிலையில், அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலிஸ் நடந்துவரும் 89ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் ஜாக்கிசானுக்கு கௌரவ ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. சுமார் 200 படங்களுக்கு மேல் பணிபுரிந்துள்ள ஜாக்கிசான் பெரும் முதல் ஆஸ்கர் விருது இதுவாகும்.
பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்....
பிரபல நகைச்சுவை நடிகர் தவக்களை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் இன்று காலமானார்.
ஏவி.எம். நிறுவனம் தயாரிப்பில் கே.பாக்கியராஜின் இயக்கி, கடந்த1983 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ’முந்தானை முடிச்சு’. இந்த படத்தில் நடிகை ஊர்வசியுடன் ரகளை செய்யும் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகர் தவக்களை. உயரம் குறைவாக இருந்தாலும், இவரது வசன உச்சரிப்பும், குரலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. முந்தானை முடிச்சு படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர்தான் ‘தவக்களை’. பின்னாளில் அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது. அதனைத்தொடர்ந்து காக்கிசட்டை உட்பட பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர், நெஞ்சுவலி காரணமாக இன்று காலை வடபழனியில் உள்ள வீட்டில் உயிரிழந்தார்.
முந்தானை முடிச்சு படம் மூலம் காமெடி நடிகரான அறிமுகமாக நடிகர் தவக்களை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42. இவர் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். சென்னை வடபழனியில் வசித்து வந்த அவர் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார்.
எம்.ஜி.ஆர் இறந்தபோது சிறப்பு மருத்துவர் என்ன சொன்னார் தெரியுமா?
எம்.ஜி.ஆர் மறைவில் சந்தேகம் இருப்பதாகவும் தனி நீதிபதி அமைத்து விசாரிக்க இருப்பதாகவும் கூறிய ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆரின் சிறப்பு மருத்துவர் பி.ஆர்.எஸ் சுப்ரமணியம் விரிவான விளக்கம் அளித்திருந்தார்.
எம்.ஜி.ஆர் மறைவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை மோரில் விஷம் வைத்து கொன்று விட்டதாகவும் கடந்த 1988 ஆம் ஆண்டு ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த அன்றைய அறநிலையத்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் புரட்சித்தலைவரை மருத்துவமனையில் சேர்க்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது. அதற்கு முன் அவர் யார் யார் வீட்டுக்கெல்லாம் சென்றார். அங்கு அவருக்கு உணவில் என்ன கலந்துகொடுக்கப்பட்டது. அதை கொடுத்தவர்கள் யார் என பதிலடி கொடுத்தார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் சிறப்பு மருத்துவர் பி.ஆர்.எஸ் சுப்ரமணியம் தனியார் பத்திரிகைக்கு விரிவான விளக்கம் ஒன்றை அளித்தார், எம்.ஜி.ஆர் இரண்டாவது முறை அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்காக சென்றுவந்தபின் அவரை தொடர்ந்து கண்காணிக்க 8 மணிநேரத்துக்கு ஒரு மருத்துவர் என முத்துசாமி, சந்திரமோகன், மகாலிங்கம் என 3 மருத்துவர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வந்தனர். வீட்டிலேயே ஒரு மருத்துவமனைக்குரிய அத்தனை உபகரணங்களும் பராமரிக்கப்பட்டன.
எம்.ஜி.ஆர் இறப்பதற்கு முன்தினமான 23-ம் திகதி வழக்கம்போல் அவரை பரிசோதிக்கச் சென்றேன். எல்லாம் நார்மலாக இருந்தது. என்னுடன் எம்.ஜி.ஆர் உற்சாகமாக சிரித்துப் பேசினார். பிறகு வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டேன்.
அன்று மாலை 5 மணிக்கு பாத்ரூம் சென்ற எம்.ஜி.ஆருக்கு சோர்வு ஏற்பட்டு என்னை வரச்சொன்னதாக போன் வந்தது. போனேன். நான் போவதற்கு முன்பே எம்.ஜி.ஆரின் இதயத்துடிப்பை சரிபார்த்தபோது அது வழக்கத்தும் குறைவாக இருந்தது. ரத்தஓட்டமும் குறைந்திருந்ததாக டாக்டர் முத்துசாமி சொன்னார்.
30 ஆண்டுகளுக்கு மேலாக அவருடன் இருக்கிறேன். எம்.ஜி.ஆருக்கு அதுவரை இதயக்கோளாறு வந்ததில்லை. முதல்முறை அப்போலோவில் சேர்க்கப்பட்டபோதே அவருக்கு இதயக்கோளாறு என்றதை மறுத்தேன். பரிசோதனையிலும் அது உறுதியானது.
இந்த முறை எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்தபோது, எனக்கு வியர்க்கிறதா என்ன அதெல்லாம் வேண்டாம் என மறுத்துவிட்டார். பின்னர் சகஜமாகி இரவு 10 மணிவரை எங்களுடன் சிரித்துப் பேசியபடி இருந்தார்.
நடுவே 8 மணிக்கு கஞ்சி குடித்தார். 10 மணிக்கு மோர் வாங்கி குடித்தார். இடையே அறைக்குள் இருந்த பாத்ரூமில் சிறுநீர் கழித்தார். பின்னர் நீங்கள் போய்ப் படுங்கள் என்றார். கிளம்பிவந்துவிட்டோம். அப்போது முத்துசாமி, கல்யாண்சிங் என்ற 2 மருத்துவர்கள் அவருடன் இருந்தனர்.
நள்ளிரவு 12-30 மணிக்கு முத்துசாமி ஓடிவந்து எம்.ஜி.ஆருக்கு ஈ.சி.ஜி முறையாக இல்லை என்றார்.
பதறியபடி ஓடினேன். நாங்கள் மேலே செல்வதற்குள் எம்.ஜி.ஆரின் இடதுபக்க இதய அறையில் துடிப்பு சீராக இல்லாமல் போய் துடிப்பு நின்றுவிட்டது. ஒரு கணம் உறைந்துபோனோம் நாங்கள்.
ஆனாலும் மாரடைப்பு உள்ளவர்களை காக்கும் இறுதி வாய்ப்பாக அவரது மார்பை டாக்டர்கள் இருவரும் பிசைந்து இதயத்தை இயங்க வைக்க முயன்றனர்.
இடையில் இருமுறை பலனளித்தது. ஆனால் 3 மணிக்கு நிரந்தரமாக இதயம் நின்றுபோனது. அதன்பின்னரே அதிகாரபூர்வமாக எம்.ஜி.ஆரின் மரணத்தை அறிவித்தோம். இவ்வாறு மருத்துவர் பி.ஆர்.எஸ் சுப்ரமணியம் பதிலளித்திருந்தார்.
யாருக்கு விருது கொடுத்தது யார்? - ஆனந்த விகடன் சினிமா விருதுகள் எக்ஸ்க்ளூசிவ் ----AnandaVikatanCinemaAwards
வெறும் சினிமாவுக்கான விழாவாக மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு பற்றியும், தமிழர் பண்பாட்டை காக்க வேண்டும் என்பது குறித்தும் கலைத்துறையினர் பல்வேறு கருத்துக்களை பிரகடனம் செய்ய, வரலாற்று சிறப்புடன் 'ஆனந்த விகடன் சினிமா விருது' விழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. சமூகப் பொறுப்பு கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையின் பெருமை மிகு பெருமித விழாவில் தான் இத்தகைய விஷயங்களை பதிவு செய்ய முடியும் என்பதை ஜனவரி 13 மாலை நடந்த விகடன் விழா நிரூபித்தது.
அன்றைய தினம் விஜய்யின் கெட் அப்புக்கே அதிர்ந்தது ட்விட்டர். ரஜினி, கமல் ஒரே மேடையில் நிற்க ஆன்லைன் ரசிகர்களின் ஹார்ட்பீட்டோ எகிறியது! ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவானது, வரும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஞாயிறு அன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் விகடன் விருது வழங்கும் விழாவில் யாருக்கு யார் விருது வழங்கினார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. சரி, விழாவில் நடந்தது என்ன?
1. சிறந்த குணச்சித்திர நடிகர் :-
விசாரணை படத்தில் அருமையாக நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர விருது சமுத்திரகனிக்கு வழங்கப்பட்டது. சமுத்திரகனிக்கு இந்த விருதை பாலா வழங்கினார்.
2. சிறந்த கலை இயக்கம் :-
24 படத்தின் கலை இயக்கத்துக்கு ஏகத்துக்கும் மெனக்கட்டு சிறப்பாகச் செயல்பட்ட அமித்ராய், சுப்ரதா சக்ரபோர்ட்டி இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இயக்குநர் ராம் விருது வழங்கினார்.
3. சிறந்த ஒப்பனை : -
காஷ்மோரா படத்தில் ஒவ்வொரு கெட் அப்புக்கும் ஒப்பனையில் கவனம் செலுத்தி உழைத்த ரோஷன், இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் விருது பெற்றார்.
4. சிறந்த நடன இயக்கம் :-
’வா மச்சானே...’ பாட்டுக்காக மாஸ்டர் தினேஷ் விருது பெற்றார். பாக்யராஜ் விருது தரப்போகிறார் என அறிவிக்கப்பட அரங்கமே கைத்தட்டி ஆர்ப்பரித்தது. மேடையேறிய பாக்யராஜ் தனது கவுண்டர்களால் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதை நிரூபித்தார். இந்த தருணங்களை சன்டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது மிஸ் செய்து விடாதீர்கள்.
5. சிறந்த சண்டைப் பயிற்சி :-
விஜய்யின் தெறி படத்திற்கு சிறந்த சண்டைப் பயிற்சி விருது வழங்கப்பட்டது. ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடிகர் சசிகுமாரிடம் விருது பெற்றார். தெறிக்கு விருது என்றவுடன் அரங்கம் அதிர்ந்தது.
6. சிறந்த ஆடை வடிவமைப்பு :-
இந்த விருது கபாலி படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தின் ஆடைவடிவமைப்பாளர்கள் நிரஞ்சனி அகத்தியன், அனுவர்தான் இருவரும் மேடையேற, இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் விருது வழங்கி கவுரவித்தார்.
7. சிறந்த பாடலாசிரியர் :-
தள்ளிப் போகாதே பாடல் தெறி ஹிட் என்பது உலகமறிந்தது. அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின் தள்ளிப் போகாதேவில் ஹைக்கூக்களால் இனிய தமிழ் பாய்ச்சிய தாமரை சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். இயக்குநர் கே.வி ஆனந்த் தாமரைக்கு விருது வழங்கி கவுரவித்தார். தாமரை ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றியதையும், தற்போது ஆனந்த விகடனில் இருந்தே விருது கிடைத்திருப்பதையும் சொல்லி பூரித்தார்.
8. சிறந்த பின்னணிப் பாடகர் ;-
மாய நதி பாட்டில் மயக்கிய பிரதீப் குமார் இந்த விருதை வென்றார். அவருக்கு இளைய திலகம் பிரபு விருது வழங்கினார்.
Vikatan Awards
9. அதிக கவனம் ஈர்த்த படம் :-
கடந்த ஆண்டில் அதிக கவனம் ஈர்த்த கபாலி திரைப்படமே இந்த விருதை ஜெயித்தது , தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் பா.இரஞ்சித்தும் விருது வாங்க மேடையேறினார். இவர்களுக்கு சசிகுமாரும், சமுத்திரகனியும் விருது வழங்கினர்.
10. சிறந்த கதை :-
ஆதிக்கச் சாதி ஆணவத்தை நேர்மையாக சொன்ன, மாவீரன் கிட்டுக்கு சிறந்த கதை விருது கிடைத்தது. இந்த படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான சுசீந்திரன், இயக்குநர் மகேந்திரன் கையால் விருது வாங்கினார்.
11. சிறந்த வில்லன் :-
கிடாரியில் மிரட்டிய வேல.ராமமூர்த்தி சிறந்த வில்லன் விருதை வென்றார். நடிகர் அருண்விஜய் விருது வழங்கினார். ஆனந்த விகடனில் எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டத்தையும், தற்போது நடிப்பிற்கு விகடன் அங்கீகரித்ததையும் குறிப்பிட்டு பெருமிதப்பட்டார் வேல.ராம மூர்த்தி.
12. சிறந்த வில்லி :-
வெற்றிவேலில் அசத்திய வில்லியான விஜி சந்திரசேகர் இந்த விருதை பெற்றார். ஆர்.கே. சுரேஷ் இந்த விருதை வழங்கினார்.
13. சிறந்த நகைச்சுவை நடிகர் :-
ஆண்டவன் கட்டளை படத்தில் கிச்சுகிச்சு மூட்டிய யோகி பாபு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்றார். நடிகை குஷ்பூ இவருக்கு விருதை வழங்கினார். விருது வாங்கிய போது உணர்ச்சிவசப்பட்டு பேசினார் யோகி பாபு.
14. சிறந்த நகைச்சுவை நடிகை :-
ஆண்டவன் கட்டளையில் இயல்பான காமெடியை வெளிப்படுத்திய நடிகை வினோதினிக்கு குஷ்பு விருதை வழங்கினார். ஆனந்த விகடன் சிறுவயதில் இருந்தே படித்து வளர்ந்தேன், "சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி கொண்டிருந்தாலும், மிகக்கவனமாக கண்டுபிடித்தது என்னை அங்கீகரித்திருக்கிறது ஆனந்த விகடன். மறக்க முடியாத தருணமிது" எனச் சொல்லி நெகிழ்ந்தார் வினோதினி.
15. சிறந்த புதுமுக நடிகர் :-
உறியடி படத்துக்காக சிறந்த புதுமுக நடிகர் விருதை ஜெயித்தார் விஜயகுமார். இவர் தான் இந்த படத்தின் இயக்குநரும் கூட. இவருக்கு இயக்குநர் நலன் குமாரசாமி விருது வழங்கினார். உறியடிக்கு ஆனந்த விகடன் தக்க நேரத்தில் தந்த மரியாதையைக் குறிப்பிட்டு மகிழ்ந்தார் விஜயகுமார்.
16. சிறந்த திரைக்கதை :-
விசாரணை படத்திற்காக வெற்றிமாறன் இந்த விருதை வென்றார். அவருக்கு இயக்குநர் வசந்த் விருதை வழங்கினார்.
17. சிறந்த படக்குழு :-
இறுதிச்சுற்று படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இறுதிச்சுற்று டீம் முழுவதுமாக மேடைக்கு வந்து ஆனந்த கண்ணீருடன் விருது வாங்கியது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் விருதை வழங்கினார்.
18. சிறந்த வசனம் :-
ஜோக்கர் படத்தில் வசனத்தில் முத்திரை பதித்த ராஜூமுருகன், முருகேஷ் பாபு இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இயக்குனர் லிங்குசாமி விருது வழங்கினார்.
19. சிறந்த குழந்தை நட்சத்திரம் :-
தெறி படத்தில் க்யூட்டாக அசத்திய தெறி பேபி நைனிகா தான் இந்த விருதை வென்றார். முதன் முறையாக ஒரு பிரமாண்ட அரங்கில் விருது பெரும் மகிழ்ச்சியில் வந்திருந்தார். நைனிகாவின் வேண்டுகோளின் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விருதை வழங்கினார்.
Vikatan Awards
20. சிறந்த புதுமுக இயக்குநர் :-
கிடாரி படத்தில் மேக்கிங்கில் அசத்திய பிரசாத் முருகேசன் இந்த விருதை ஜெயித்தார். அவருக்கு இயக்குநர் விக்ரமன் விருதை வழங்கி கவுரவித்தார்.
21. சிறந்த குணச்சித்திர நடிகை :-
குற்றமே தண்டனை படத்தில் நடித்திருந்த பூஜா தேவரையா இந்த விருதை ஜெயித்திருந்தார். இவருக்கு இயக்குநர் பாலா விருதை வழங்கினார்.
22. சிறந்த ஒளிப்பதிவு :-
கிடாரி படத்திற்காக எஸ்.ஆர். கதிருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்த விருதை வழங்கினார்.
23. சிறந்த VFX :-
24 படத்திற்காக ஜோலியன் டிராசெல்லியர் விருது ஜெயித்தார். அவருக்கு பதிலாக 2D புரொடக்ஷன்ஸ் இணைத்தயாரிப்பாளர் ராஜசேகர் விருது வாங்கினார். அவருக்கு பி.சி.ஸ்ரீராம் விருதை வழங்கினார்.
24. சிறந்த இசையமைப்பாளர் :-
சந்தோஷ் நாராயணன் கபாலி, இறுதிச்சுற்று திரைப்படங்களில் அருமையாக இசையமைத்ததால், கடந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜெயித்தார். இயக்குநர் பாரதிராஜா இந்த விருதை வழங்கி கவுரவித்தார்.
25. சிறந்த படம் :-
விசாரணை சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் மேடையேறி விருது பெற்றார். அவருக்கு பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் விருது வழங்கினார்.
26. சிறந்த தயாரிப்பு : -
ஜோக்கர் படத்தை தயாரித்த டிரீம்வாரியர் பிக்சருக்கு விருது கிடைத்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபுவும் அவரது சகோதரர் எஸ்.ஆர். பிரகாஷும் விருது பெற்றனர். சசிகுமாரும், சமுத்திரகனியும் இந்த விருதை இணைந்து வழங்கினார்கள்,
27. சிறந்த எடிட்டர் :-
விசாரணை படத்தில் பணிபுரிந்த எடிட்டர் கிஷோர் மற்றும் ஜிபி வெங்கடேஷ் விருது வென்றனர். கிஷோர் மறைவையொட்டி அவரது தந்தை வந்திருந்தார். இயக்குநர் வெற்றிமாறன் விருது வழங்கினார்.
28. சிறந்த இயக்குநர் : -
சிறந்த இயக்குநர் விருதை இயக்குநர் வெற்றிமாறன் விசாரணை திரைப்படத்திற்காக பெற்றார். இவருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா விருது வழங்கினார்.
29. சிறந்த நடிகை : -
ரித்திகா சிங், இறுதிச் சுற்று படத்துக்காக இந்த விருதை ஜெயித்தார். பாக்ஸர் மதி இறுதிச்சுற்று டீமுடன் அமர்ந்திருந்தார். விருது அறிவிக்கப்பட்டவுடன் மேடையேற அவருக்கு எஸ்.பி. முத்துராமன் விருது வழங்கினார்.
30. சிறந்த நடிகர் :
'கபாலி' தான் இந்த விருதை ஜெயித்தார். கெத்து டானாக, காதல் கசிய மனைவியைத் தேடும் அன்பான கணவனாக, மகள் மீது பெரும் பாசம் வைத்திருக்கும் தந்தையாக என வெரைட்டி காட்டி ஒவ்வொருச் சின்ன அசைவிலும் பின்னியெடுத்த நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை ஜெயித்திருந்தார். ரஜினிக்கு இளைய தளபதி விஜய் விருதை வழங்க அரங்கமே அதிர்ந்தது.
Vikatan Awards
31. எஸ்.எஸ்.வாசன் விருது : -
ஆனந்த விகடனின் பெருமை மிகு எஸ்.எஸ்.வாசன் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அபூர்வ கலைஞன் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் விருது வழங்கினார். ரஜினி, கமல் இரண்டு பேரையும் மேடையில் பார்க்க நெஞ்சம் குளிர்ந்தனர் ரசிகர்கள். ரஜினி, கமல், வைரமுத்து மூவரும் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் மேடையில் நின்ற அந்த செஷன் விழாவின் ஹைலைட்.
விகடன் சினிமா விருதுகள் 2016 விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்துகொண்டார். Cannot compromise Jallikattu for
தனுஷின் நிஜ பெற்றோர் யார்? மதுரை உயர் நீதிமன்றத்தில் களமிறங்கினார் தனுஷ்...
நடிகர் தனுஷ் தங்களது மகன் என கதிரேசன், மீனாட்சி ஆகியோர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
திரைப்பட நடிகர் தனுஷ் எங்கள் மகன். அவரது இயற்பெயர் கலைச்செல்வன். மேலூரிலும், திருப்பத்தூரிலும் படிக்க வைத்தோம். சென்னை சென்ற அவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டார். அவரை எங்களுடன் வருமாறு அழைத்தோம். ஆனால் அவர் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்.
மேலும் எங்களுக்கு வயதாகிவிட்டது. மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. அவர் எங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடவேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தனுசை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் நடிகர் தனுஷ், மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். அந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
சோகத்தில் ஆழ்த்திய மரணம்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் இளம் நடிகர் ஸ்ரீராம். குழந்தை நட்சத்திரமாக பசங்க படத்தில் அறிமுகமானவர்.
கோலி சோடா, பாபநாசம் படங்களில் நடித்து சில மாதங்களுக்கு முன் வெளியான பைசா படத்தில் சோலா ஹீரோவாக மாறிவிட்டார்.
இவரின் சகோதரர் அர்ஜுன் ராம் சாலை விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். புகைப்படக்கலைஞராக வர விரும்பிய இவரின் இழப்பு ஸ்ரீராமின் குடும்பத்துக்கு மாபெரும் இழப்பு தான். இவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
பாண்டுவிற்கு பிரபுதேவா செய்யும் மரியாதை..!
உலகநாயகன் கமல்ஹாசன் தான் தன் வாழ்நாளில் 50 வருடங்களை சினிமாவிற்காக அர்ப்பணித்த முதல் மனிதர். அவருக்கு அடுத்து அந்த பாக்கியம் நடிகர் பாண்டுவிற்கு கிடைக்கப்போகிறது. பாண்டு சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக சேர்த்து, பின்னர் நடிகராக இருந்து வருகிறார்.
அடுத்த வருடத்தோடு பாண்டு சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் நிறைவு பெறுகிறதாம். இதனை அவர் ஏதார்த்தமாக பிரபுதேவாவிடம் கூற, ‘இதை பெரிய விழாவாக கொண்டாடவேண்டும். அதனை நானே செய்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
செயற்கை மார்பக சிகிச்சை செய்து கொண்ட நடிகைகள்....
செயற்கை மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டால் எந்த அளவுக்கு அழகு இருக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்தும் இருக்கிறது.
சிலிக்கான் பயன்படுத்தி செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சை நாளடைவில் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
இந்த அறுவை சிகிச்சையை அதிகமாக செய்பவர்கள் நடிகைகள் தான். அப்படி, செயற்கை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நடிகைகள் இவர்கள்தான்.
சுஷ்மிதாசென்
சுஷ்மிதாசென் தான் இந்திய நடிகைகள் மத்தியில் இந்த டிரெண்டை கொண்டு வந்தார். மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்ற இவர் தான் முதலில் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.
பிபாஷாபாசு
பாலிவுட்-ன் செக்ஸி நடிகை என பெயர்பெற்ற பிபாஷாபாசுவும் செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் தான்.
ஆயிஷா
முதலில் ஆயிஷா ஒல்லியான உடல்வாகு தான் கொண்டிருந்தார். இவர் கடுமையான செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டார். இதனால் பெரியளவில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தார்.
மல்லிகா ஷெராவத்
இந்தியாவின் ஹாட் நடிகை மல்லிகா ஷெராவத் ஜாக்கியுடன் கைக்கோர்த்து ஹாலிவுட் வரை கலக்கியவர். இவரும் செயற்கை மார்பக சிகிச்சை செய்துக் கொண்டார்.
ஸ்ரீதேவி
அன்று முதல் இன்று வரை சிக்கென்ற அழகுடன் திகழ்ந்து வரும் மயிரு செயற்கை மார்பக சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என கூறப்படுகிறது.
ஷில்பாஷெட்டி
உடலை வடிவமாக வைத்துக் கொள்ள மார்பகம், புட்டம் மற்றும் மூக்கு போன்ற பகுதிகளில் செயற்கை உடல் வடிவ மாற்ற சிகிச்சை செய்துக் கொண்டவர்.
என் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லை: தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா உருக்கமான பேச்சு....
தனுஷ் வேறு யாருடைய மகனும் கிடையாது, அவன் என்னுடைய மகன்தான் என இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
சென்னை வடபழனியில் நடைபெற்ற ‘பார்க்க தோணுதே’ என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தனுஷின் தந்தையும், இயக்குனருமான கஸ்தூரிராஜா கலந்து கொண்டார்.
அப்போது தனுஷ் பற்றி எழுந்துள்ள சர்ச்சைக்கு விளக்கம் அளித்து கஸ்தூரிராஜா பேசியதாவது, “நடிகர் தனுஷ் எனது மகன்தான். இதில் சந்தேகம் இல்லை. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.
அப்போது எனக்கு 4 ஆயிரம் ரூபாய்தான் சம்பளம் கிடைத்தது. குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்தது. எங்களுக்கு செல்வராகவனும் தனுஷிடம் மகன்களாக பிறந்தார்கள். ஒரு மகளும் உள்ளார். செல்வராகவனுக்கு நடிக்க ஆசை இருந்தது. ஆனால் அவர் இயக்குனராகி விட்டார்.
பள்ளியில் தனுஷ் படித்துக்கொண்டு இருந்தபோது ‘துள்ளுவதோ இளமை’ படத்தை எடுக்க தயாரானேன். அந்த படத்தில் தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்தேன். தனுஷிடம் அதில் நடிக்கும் படி கேட்டபோது எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்று சொல்லி ஒதுங்கினார். ஆனாலும் வற்புறுத்தி அந்த படத்தில் நடிக்க வைத்தேன்.
சினிமாவுக்கு வருவதற்கு முன்பு என் வாழ்க்கையில் இருந்த சந்தோஷம் இப்போது இல்லை. பெயர் புகழ். பணம் எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் அப்போதைய மகிழ்ச்சி இல்லை. யாரோ ஒருத்தர் தனுஷை எனது மகன் என்கிறார். தனுஷ் எனது மகன். என்னுடைய மகனேதான் என்று கூறியுள்ளார்.
பல்வேறு விருதுகளை குவித்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா மரணம்
பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
தேசிய விருதுகள், பத்ம விபூஷண், செவாலியே, சங்கீத கலாநிதி உட்பட பல விருதுகளை வென்றவர் இவர்.
சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது.
கர்நாடக இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது உடல் சென்னை கோபாலபுரம் கதீட்ரல் சாலையில் உள்ள கனகஸ்ரீ நகரில் இருக்கும் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிலையில், இன்று மாலை அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று அவரது வீட்டார் தெரிவித்திருந்தனர். அதன்படி, இன்று மாலை 3 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் தொடங்கியது.
இந்த இறுதி ஊர்வலம் பெசன்ட் நகர் நோக்கி நகர்ந்து 3.50 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்தது. பின்னர், அவரது உடலை மின் மயானத்தில் எரியூட்டினர். பால முரளி கிருஷ்ணாவின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதலான அறிவிப்பு...
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படம் ‘2.ஓ’. இப்படத்தை லைக்கா நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெடடில் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற நவம்பர் 20-ந் தேதி ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை மும்பையில் பிரம்மாண்டமாக நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் ரஜினி, சங்கர், அக்ஷய்குமார், ஏ.ஆர்.ரகுமான், எமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்க இருக்கிறார்.
பிரம்மாண்டமான நடைபெறும் இந்த விழாவை உலகில் உள்ள அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியை யூடியூப்பில் நேரடியாக வெளியிடவிருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு ஓரளவுக்கு திருப்தியை கொடுத்தாலும், தங்கள் அபிமான நடிகர், இயக்குனரை நேரில் பார்க்க முடியாதே என்ற கவலையும் ரசிகர்களிடையே இருக்கிறது.
அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் லைக்கா நிறுவனம் மற்றொரு விஷயத்தையும் கூறியுள்ளது. இதுகுறித்து லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ராஜு மகாலிங்கம் கூறும்போது, ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும்தான் மும்பையில் வெளியிடப்படுகிறது. மற்றபடி, இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை தென்னிந்தியாவில் நடத்தவிருக்கிறோம். இதனால் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம். இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்துதான்.
ஆமாம்.. அதில் நானும் ஒருவர்! கலங்கிய நடிகை கவுதமி...
பிரபல நடிகையான கவுதமி சென்னை விமான நிலையத்தில் நடந்த மார்ப புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டார்.
இந்த விழாவிற்கு தலைமை தாங்கிய இவருடன் நடிகை பூர்ணிமா பாக்யராஜ், சவுமியா அன்புமணி, சியாமவுலி சாஸ்திரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் கலந்து கொண்ட நடிகை கவுதமி பேசுகையில், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதால் புற்றுநோயை தடுக்கலாம்.
தற்போது புற்றுநோயை குணப்படுத்த மருந்துகளும், பல்வேறு சிகிச்சை முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் நானும் ஒருவர் தான்.
பெண்கள் ஆரம்ப கட்டத்திலே புற்றுநோய் தாக்கத்தை கண்டுபிடித்து உடனடி சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts
(
Atom
)