விஜய் குறித்து பிரபலங்கள் கூறுவது என்ன? பிறந்தநாள் ஸ்பெஷல்
இளைய தளபதி தற்போது தளபதி விஜய்யாக புது அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே மெர்சல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப ஆரம்பித்துவிட்டது. விஜய் பெயரிலேயே வெற்றியை மறைத்து வைத்திருப்பவர்.22-06-2017
பல அவமானங்களை தாண்டி இன்று அரியணையில் ஏறும் வரை உயர்ந்தது விஜய்யின் கடின உழைப்பே காரணம், இந்நிலையில் விஜய் குறித்து திரையுலக பிரபலங்கள் என்ன கூறியுள்ளார்கள் தெரியுமா? பார்ப்போம்.
ரஜினிகாந்த்: விஜய் படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார் என்று சொல்லி கேள்வி பட்டுள்ளேன், ஆனால், திரையில் அவரின் நடிப்பு என்னை பிரமிக்க வைக்கும்.
முருகதாஸ்: விஜய் சாரை நான் எப்போதுமே பிரமிப்புடன் தான் பார்ப்பேன், ஏனெனில் அவர் ஒரு மாஸ் ஹீரோ என்று அவருக்கு தெரியுமா? என்று தெரியவில்லை, அத்தனை அமைதியாக தான் படப்பிடிப்பில் இருப்பார், கத்தி படத்தில் அவர் பேசியதை உண்மையாகவே அவர் மக்கள் முன்னால் பேச வேண்டும், அதுதான் என் விருப்பம்
சூர்யா: விஜய்யை பார்த்து பிரமித்துவிட்டேன், கல்லூரி நாட்களில் இருந்து எனக்கு விஜய்யை தெரியும், அதனால், அவருடைய வளர்ச்சி கூடவே இருந்து பார்த்து வருகிறேன், அவருடன் நடனமாட யாராலுமே முடியாது.
விஷால்: விஜய்யின் வளர்ச்சியை யாரிடமும் ஒப்பிட முடியாது, அவர் நடிக்க வந்த போது பல பத்திரிகைகள் கிண்டல் செய்தது, ஆனால், இன்று அந்த பத்திரிகையில் அட்டைப்படமாக விஜய் உள்ளார்.
சூரி: விஜய் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர், எல்லோருக்குமே மரியாதை கொடுக்க தெரிந்தவர்.
அனுஷ்கா: விஜய் போல் நேரத்திற்கு சரியாக வரும் ஹீரோவை நான் பார்த்தது இல்லை, சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார்.
எஸ்.ஜே.சூர்யா: ரஜினிக்கு பிறகு சொன்ன நேரத்திற்கு சரியாக படப்பிடிப்பிற்கு வருவது விஜய் தான்.
விக்ரம்: விஜய் என்னுடைய ஸ்வீட் ப்ரண்ட்
தனுஷ்: விஜய் சாருக்கு இணையாக நடனமாட யாருமே இங்கு இல்லை.
ஜுனியர் என்.டி.ஆர்: என்னை விட விஜய் தான் தென்னிந்தியாவிலேயே சிறப்பாக நடனமாடுபவர்.
சிவகார்த்திகேயன்: இன்றும் நான் நடனமாடும் போது விஜய் சார் போல் முகத்தை சிரித்தப்படி வைத்து ஆட முயற்சி செய்வேன், அவர் போல் கிரேஸாக யாராலும் நடனமாட முடியாது.
ஷங்கர்: முதல்வன் படத்தை முதலில் நான் ரஜினியை வைத்து எடுக்கவிருந்தேன், அவர் மறுத்தவுடன் அடுத்த என்னுடைய சாய்ஸ் விஜய் தான் இருந்தார்.
கமல்ஹாசன்: இவர் பார்க்க தான் சைலண்ட், ஆனால், திரையில் இவரின் எனர்ஜி எனக்கு மிகவும் பிடிக்கும், அதை விட அவரின் உழைப்பு மிக பிடிக்கும். அமைதியாக உழைப்பவர்.
அஜித்: விஜய் எனக்கு நல்ல நண்பர், சிறு வயதில் விஜய்யின் அம்மா கையால் பல முறை சாப்பிட்டுள்ளேன்.
சாந்தனு: விஜய்யின் ரசிகன் என்று நான் சொன்னதே இல்லை, அவரின் தம்பி தான் நான், என்னை அப்படி தான் அவர் பார்க்கின்றார்.
விஜய் சேதுபதி: விஜய் சாரோட நடனத்திற்கு நான் பெரிய ரசிகன்.
சிம்பு: நான் தல அஜித்திற்கு ரசிகன், ஆனால், தளபதி விஜய்க்கு ஒரு தம்பி
விஜய்யின் வெற்றி பயணம் இன்று போல் என்றுமே நிலைத்திருக்க சினிஉலகம் அவரின் பிறந்தநாளான இன்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment