Showing posts with label Bollywood. Show all posts

பூனம் பாண்டே கைதுக்கு கோர்ட் இடைக்கால தடை

No comments
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட் தடை விதித்தது. கடந்த 2011ம் ஆண்டு கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக தோன்றத் தயார் என்று அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெங்களூரை சேர்ந்த எஸ்.உமேஷ் என்பவர் பூனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

 மத ரீதியான உணர்வுகளை காயப்படுத்தும் அளவுக்கு பூனம் பாண்டே பேட்டி அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பூனமிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. கடந்த புத்தாண்டு தினத்தன்று அவர் பெங்களூர் வந்தார். அப்போதும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

 எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று வரும் பிப்ரவரி 12ம் தேதிக்குள் பூனம் பாண்டேவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி 6வது அடிஷ்னல் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்க கேட்டு பூனம் பாண்டே கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று கீழ்கோர்ட்டின் கைது உத்தரவுக்கு நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

காதலனை பிரியாதே... தோழிகள் அட்வைசால் தீபிகா குழப்பம்

No comments
காதலனை விட்டு பிரியாதே என்று தீபிகா படுகோனுக்கு தோழிகள் அட்வைஸ் தந்ததால் அவர் குழப்பத்தில் உள்ளார். கோச்சடையான் படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் தீபிகா படுகோன். பாலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக திகழ்கிறார். இவரும் ரன்வீர் சிங்கும் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றனர்.


 இந்த நட்பு காதலாக மலரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபிகாவோ ரன்வீர் சிங்கை கழற்றிவிட முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இவர்கள் ஜோடியாக நடித்த ராம் லீலா படம் திரைக்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் புத்தாண்டு தினத்தன்று ரன்வீர், தீபிகா இருவரும் இரவு விருந்துக்காக நட்சத்திர ஓட்டலில் சந்தித்தனர். அப்போது தீபிகாவிடம் ரன்வீர் மனம் விட்டு பேசினார். தனது காதலையும் அவரிடம் தெரிவித்தார். 

ஆனால் அதை கண்டுகொள்ளாமல் வேறு விஷயத்தைபற்றி பேசுவதற்காக பேச்சை திசை மாற்றினார் தீபிகா. இதை புரிந்து கொண்ட ரன்வீர் அத்துடன் பேச்சை முடித்துக்கொண்டார். இதையறிந்த தீபிகாவின் நெருங்கிய நண்பர் களும், தோழிகளும் அவருக்கு அறிவுரை வழங்கி உள்ளனர். ரன்வீர் உன் மீது பைத்தியமாக இருக்கிறார். அவரது காதல் உண்மையானது. 

அவர் காதலை நீ ஏற்க வேண்டும். அவரைவிட்டு பிரியக்கூடாது என்று வற்புறுத்தினர். மேலும் ஏற்கனவே தீபிகாவுடன் நெருக்கமாக இருந்த ரன்பீர் கபூர், சித்தார்த் மல்லையா, யுவராஜ் சிங், நிஹர் பாண்டியா போன்றவர்களுடான காதல் தோல்வி அடைந்ததையும் சுட்டிக்காட்டி, உனக்கு ஏற்ற காதலன் ரன்வீர் சிங்தான் என்று வலியுறுத்தினர். இதையடுத்து ரன்வீரின் காதலை ஏற்பதா? மறுப்பதா? என்ற குழப்பத்தில் தீபிகா இருப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது.

படப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கான் காயம்

No comments
ஹேப்பி நியூஇயர் என்ற படப்பிடிப்பின் போது பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் காயம் அடைந்தார். மும்பை புறநகரில் 5 நட்சத்திர ஓட்டலில் நடந்த படப்பிடிப்பின் போது ஷாருக்கான் காயமடைந்தார். 

காயமுற்ற ஷாருக்கான் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அமிதாப்புடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் டைட்டானிக் ஹீரோ!

No comments
நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க தான் ஆர்வமுடன் இருப்பதாக டைட்டானிக் பட ஹீரோவான லியோனார்டோ டி கேப்ரியோ தெரிவித்துள்ளார். 


இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முதன்முறையாக இந்தி மொழி தவிர்த்து ஹாலிவுட் படமான தி கிரேட் கேட்ஸ்பை படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் டைட்டானிக் பட ஹீரோவான டி கேப்ரியோவும் நடித்திருந்தார். படத்தை பாஸ் லஹ்ர்மான் இயக்கியிருந்தார். படத்தில் மேயர் உல்ப்ஷெய்ம் என்ற கதாபாத்திரத்தை அமிதாப் ஏற்று நடித்திருந்தார்.

எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டு எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு படமானது எடுக்கப்பட்டு உள்ளது. நாவலின் பெயரையே படத்திற்கு வைத்திருந்தனர்.

படத்தில் நடித்துள்ள கேப்ரியோ சமீபத்தில் நடித்திருந்த தி உல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் என்ற படம் குறித்து பேட்டியளித்திருந்தார்.

அந்த பேட்டியின்போது அமிதாப் பச்சனுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், அவரது தனித்திறமை மற்றும் நடிக்கும் ஆற்றல் தவிர்த்து ஒரு ஜென்டில்மேனாக எனக்கு அவர் தெரிகிறார்.

அவருடன் பணிபுரிந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கூட அவர் காட்டிய ஆர்வம் என்னை கவர்ந்தது.

வருங்காலங்களில் அவருடன் நடிக்க நான் ஆர்வமுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

குண்டு சட்டிக்குள் தொடரும் சாதனை...

No comments

அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. மிகச் சின்ன ஏரியா. மல்டி ப்ளக்ஸில் பெரும்பாலும் இந்தி, தமிழ், தெலுங்கு, ஹாலிவுட் படங்களே ஆக்ரமிக்கின்றன. எனவே சிங்கிள் ஸ்கிரீனில், குறிப்பாக பி, சி சென்டர்களை மட்டுமே நம்பி கன்னடப் படங்கள் தயாராகின்றன. எனவே இருக்கும் பட்ஜெட்டில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு நவீனமாக படம் எடுக்க இப்போது கன்னட திரையுலகம் கற்றிருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக நடைபோட்டு வரும் இந்தப் பாதையில்தான் இந்த வருடமும் சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறப் போகிறது.

பிள்ளையார் சுழி, வழக்கம்போல் சுதீப். ஸ்டைல், மேக்கிங், ஆக்ஷன், மசாலா, நடிப்பு என தனது பிராண்டை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். 2014ல் நம்ம கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் அதையே தொடரவும் போகிறார். ஏற்கனவே கிச்சா சுதீப்புக்கு அங்கு எவரெஸ்ட் உயர மார்க்கெட் உண்டு. இப்போது கமர்ஷியல் கிங் கே.எஸ்.ரவிக்குமாருடன் கைகோர்த்திருப்பதால் எதிர்பார்ப்பு செவ்வாய் கிரகம் வரை சென்றிருக்கிறது.

இதற்கு ஈடு கொடுக்க புனித் ராஜ்குமாரும் தயாராகிவிட்டார். ராஜ்குமார் குடும்பத்து கடைசி வாரிசான இவர், தன் குடும்ப பாரம்பரியம் கொண்ட படங்களில் நடித்தபடியே பரிசோதனை முயற்சிகளிலும் இறங்கக் கூடியவர். ரசிகர்களை திருப்திப்படுத்தும் அதே நேரம், தனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நடிகனுக்கும் தீனி போடும் வித்தை அறிந்தவர். அதனாலேயே தெலுங்கு தூகுடு ரீமேக் ஆன ராஜ்குமார் மற்றும் ரானா விக்ரமா ஆகிய இரு படங்களுக்காகவும் மாநிலமே வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறது.

இந்தப் போட்டியில் ஷிவ்ராஜ்குமாரும் தன் பங்குக்கு ஆர்யன், மனமோஹகா ஆகியப் படங்களை கொடுக்கப் போகிறார். கடந்த வருட இறுதியில் வெளியான இவரது பஜரங்கி வசூலில் இன்றும் பின்னிபெடல் எடுத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

என் வழி தனி வழி என்று அதகளம் செய்யும் உபேந்திரா, ஓம் 2, பிரம்மா, பாசுவனா ஆகியப் படங்களை கொடுக்கப் போகிறார். துனியா விஜய் கோப்ராவாக சீறப் போகிறார். கோல்டன் ஸ்டார் கணேஷ் ஷ்ரவானி சுப்ரமண்யா, தில் ரங்கீலா என வசீகரிக்கப் போகிறார். அரிவட்டா, அஸ்போட்டா என தர்ஷன் குதிக்கப் போகிறார்.

மொத்தத்தில் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக சுதீப் தலைமையில் இளம் நடிகர்கள் களம் இறங்கப் போகிறார்கள். இதற்கு மாற்றாக குடும்ப நடிகர்கள் தொடை தட்டப் போகிறார்கள். 2000க்கு பிறகு ஆண்டுதோறும் என்ன நடக்கிறதோ அதுவேதான் 2014லும் தொடரப் போகிறது. ப்ரியா மணி சலித்துவிட்ட நிலையில் தமிழ் - தெலுங்கில் விஆர்எஸ் வாங்கும் நிலையில் இருக்கும் நடிகைகளை கன்னட திரையுலகுக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கப் போகிறார்கள்.

இதிலெல்லாம் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஆனால், அதையும் மீறி தங்கள் திரையுலகை காப்பாற்றவும், அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் அனைவருமே முயலப் போகிறார்கள் பாருங்கள்...

அது முக்கியம். அதுதான் கன்னட திரையுலகைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசவும் காரணம். பலவீனங்களைத் தாண்டி பலம் பெற முயல்பவர்களை வாழ்த்துவதுதானே மரபு.
  

100 கோடி வசூலித்து சாதனை படைத்தது சென்னை எக்ஸ்பிரஸ்

No comments
ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படம் நான்கே நாட்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஷாருக்கான்- தீபிகா படுகோன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ்.

 இப்படம் கடந்த 8ம் திகதி உலகம் முழுவதும் வெளியானது. மேலும் தமிழகம் உட்பட சில பகுதியில் ரம்ஜான் ஸ்பெஷலாக 9ம் திகதி வெளியானது.

 இதற்கிடையே விஜய்யின் தலைவா படமும், பவன் கல்யாண் நடிப்பில் உருவான தெலுங்கு படமும் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனால் அந்த படங்களுக்காக புக் செய்து வைத்திருந்த திரையரங்குகளில் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியானது.

 அதாவது, உலகம் முழுவதும் 3500 அரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது. முதல் நாளில் 33.12 கோடியும், இரண்டாம் நாளில் 28.05 கோடியும், மூன்றாம் நாளில் 32.50 கோடியும் வசூலித்து 100 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது சென்னை எக்ஸ்பிரஸ்.