100 கோடி வசூலித்து சாதனை படைத்தது சென்னை எக்ஸ்பிரஸ்

No comments
ஷாருக்கான்- தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் படம் நான்கே நாட்களில் 100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஷாருக்கான்- தீபிகா படுகோன் இருவரும் ஜோடியாக நடித்திருக்கும் படம் சென்னை எக்ஸ்பிரஸ்.

 இப்படம் கடந்த 8ம் திகதி உலகம் முழுவதும் வெளியானது. மேலும் தமிழகம் உட்பட சில பகுதியில் ரம்ஜான் ஸ்பெஷலாக 9ம் திகதி வெளியானது.

 இதற்கிடையே விஜய்யின் தலைவா படமும், பவன் கல்யாண் நடிப்பில் உருவான தெலுங்கு படமும் சில காரணங்களால் வெளியாகவில்லை. இதனால் அந்த படங்களுக்காக புக் செய்து வைத்திருந்த திரையரங்குகளில் சென்னை எக்ஸ்பிரஸ் வெளியானது.

 அதாவது, உலகம் முழுவதும் 3500 அரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது. முதல் நாளில் 33.12 கோடியும், இரண்டாம் நாளில் 28.05 கோடியும், மூன்றாம் நாளில் 32.50 கோடியும் வசூலித்து 100 கோடியை எட்டியுள்ளது. இதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது சென்னை எக்ஸ்பிரஸ்.

No comments :

Post a Comment