ஆடிப்போயிருக்கோம் அம்மா உதவுங்க : விஜய் வீடியோ அறிக்கை(Video)

No comments
தலைவா திரைப்படம் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும்.. அதுவரை இரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அம்மா தலைவா பட விவகாரத்தில் தலையிட்டு வெளியிட உதவ வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக நேற்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது,

எல்லோருக்கும் வணக்கம்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர்.

அதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம்... மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம்.. ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...

தமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க.. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க..

தமிழக மக்களுக்கு இவ்ளோ நல்லது செய்யுறவங்க தலைவா பட விவகாரத்திலும் தலையிட்டு ரிலீஸுக்கு உதவ வேண்டும். சென்னை, கோயம்புத்தூர், சேலம் ஆகிய இடங்களில் தலைவா படத்தின் டிவிடிக்கள் பிடித்திருக்கிறீர்கள்.

உங்களுக்கும் பொலிசாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் இன்னிக்கு ரிலீஸ் .நாளைக்கு ரீலீஸ்னு காத்திகிட்டு இருக்கிறோம்... நிச்சயமாக ஓரிரு நாட்களில் தலைவா படம் வெளியாகிவிடும். அதுவரை பொறுமையாக இருக்க வேண்டுகிறேன் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.

No comments :

Post a Comment