Showing posts with label ஹாலிவுட் Hollywood. Show all posts

ரூ.1000 கோடி பட்ஜெட்டில் 5 மொழிகளில் உருவாகும் மகாபாரத கதை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு....

No comments

மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படம்தான் மலையாளத்திலேயே அதிக பட்ஜெட்டில் உருவானது. அப்படம் சுமார் ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானது. வசூலில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வசூலைத் தொடர்ந்து மலையாளத்தில் பெரிய பட்ஜெட்டில் படங்கள் தயாரிக்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மலையாளத்தின் மூத்த எழுத்தாளரும், கதாசிரியருமான எம்.டி.வாசுதேவநாயரின் ‘இரண்டாம் ஊழம்’ என்ற நாவலை மையப்படுத்தி ரூ.600 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கப்போவதாக அறிவித்திருந்தனர். இந்த படத்தில் மோகன்லால் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளிவந்தது. தற்போது அந்த செய்தியை உறுதிப்படுத்தும்விதமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

பி.ஆர்.ஷெட்டி என்ற தயாரிப்பாளர் இந்த நாவலை படமாக தயாரிக்க முன்வந்துள்ளார். ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகப்போவதாக கூறப்பட்ட இந்த படத்தை ரூ.1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளார்களாம். இப்படத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்திற்கு ‘மகாபாரதா-ரெண்டாம் ஊழம்’ என்று பெயர் வைத்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திகள் வெளிவந்துள்ளது. மகாபாரத்தில் பஞ்ச பாண்டவர்களில் இரண்டாவதாக வரும் பீமனின் பார்வையில் வைத்து இந்த கதையை எழுதியுள்ளாராம்.

ஸ்ரீகுமார் மேனன் இப்படத்தை இயக்கவுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் படமாக்கவுள்ளனர். இதுதவிர, பிற இந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் இப்படத்தை டப் செய்து வெளியிடவுள்ளனர். இந்திய சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாவில் உள்ள கலைஞர்கள் இப்படத்தில் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் படப்பிடிப்பை 2018 செப்டம்பர் மாதத்தில் தொடங்கி, 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை இரண்டு பாகமாக எடுக்கவுள்ளதாகவும், முதல் பாகம் வெளிவந்த அடுத்த 3 மாதங்களுக்குள் இரண்டாம் பாகத்தை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

மோகன்லால் நடிக்கவுள்ள இப்படத்தில் ஏற்கெனவே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரும் இணையப்போவதாக செய்திகள் வெளிவந்தது. அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால், அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. கூடிய விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என நம்பலாம்.



ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க பிரபல நடிகருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

No comments

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் மீண்டும் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கிரேய்க்கிற்கு ரூ.2188 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த DanielCraig(48) என்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கடந்த 1992ம் ஆண்டு ’The Power of One’ என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்தடு 34 படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை ஹாலிவுட்டில் தக்க வைத்துள்ளார்.

இந்த 34 படங்களில் முதன் முறையாக கடந்த 2006ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ‘Casino Royale’ என்ற படத்தில் நடித்து அசத்தினார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2008-ல் ‘Quantum of Solace’, 2012-ல் ‘Skyfall’ மற்றும் 2015-ல் ‘Spectre’ என 4 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

’Spectre’ படம் வெளியானதும் ‘இனி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை. எனது கையை கூட நான் உடைத்துக்கொள்ள தயார்.

ஆனால், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்’ என அதிரடியாக பேட்டியளித்தார்.

மேலும், ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் இறுதியாக நடித்த ’Spectre’ படத்தில் அவருக்கு 65 மில்லியன் டொலர் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான சோனி டேனியல் கிரேய்க்கை மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறது.

இதுமட்டுமில்லாமல், சோனி தயாரிப்பில் அடுத்து வெளியாகும் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் டேனியல் கிரேய்க் நடித்தால் அவருக்கு 150 மில்லியன் டொலர்(21,88,50,00,000 இலங்கை ரூபாய்) சம்பளமாக வழங்க தயார் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், டேனியல் கிரேய்க் இந்த வாய்ப்பை நிராகரித்தால், இவருக்கு அடுத்த நிலையில் உள்ள Idris Elba என்ற நடிகர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


‘கபாலி’ உருவத்தில் 36 விதமாக மாறும் ரஜினி சிலையை உருவாக்கிய மலேசியா ரசிகர்....

No comments

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே, இப்படத்திற்காக செய்யப்பட்ட புரோமோஷன்கள் இதுவரை எந்த தமிழ் சினிமாவுக்கும் இல்லாத அளவுக்கு நடைபெற்றது. இந்நிலையில், ‘கபாலி’ படம் வெளிவந்த பிறகும்கூட அந்த படத்திற்கு புரோமோஷன்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, ‘கபாலி’ ரஜினியின் உருவம் பதித்த சிலை ஒன்றை ரஜினி ரசிகரும், மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் உரிமத்தை பெற்ற டத்தோ மாலிக் என்பவர் சென்னையில் வெளியிட்டுள்ளார். இதன் முதல் சிலையை ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டுள்ளார். ‘கபாலி’ படம் 2016-ஆம் ஆண்டில் வெளியானதால், மொத்தத்தில் இந்த உருவச்சிலை 2016 மட்டுமே தயாரிக்கவுள்ளனர்.

இந்த உருவம் மலேசியாவில் வடிவமைக்கப்பட்டு ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளில் உள்ள திரைப்பட தொழில்நுட்ப நிபுணர்கள், அதிநவீன மூலப் பொருட்களுடன் தயாராகி கொண்டேயிருக்கிறது. இதனை பெற்றுக்கொள்ள உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மாலிக் ஸ்டிரீம்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் (Malik Streams Production & Distribution) பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த உருவச்சிலையின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த சிலையை 36 விதமாக எப்படி வேண்டுமானாலும் ரஜினி ரசிகர்கள், ரஜினி ஸ்டைலில் தங்களுக்கேற்றார்போல் மாற்றியமைத்துக் கொள்ளலாம். மேலும், இந்த உருவச் சிலையில் ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்தில் பயன்படுத்திய கைக்காப்பு, துப்பாக்கி, கோர்ட் ஆகிய பொருட்களும் உள்ளதாம்.

இதன் மொத்த எண்ணிக்கை வெறும் 2016 மட்டுமே என்பதால், உலகம் முழுவதும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பெற்றுக் கொள்ளுவார்கள் என்றும், இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் மாலிக் கூறினார். இந்த உருவச் சிலையை ரஜினிகாந்த் தொட்டுப் பார்த்து பிரமித்து போனாராம். மேலும், அந்த சிலையை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தாராம். 

இதுவரை யாரும் செய்யாத இந்த செயலை டத்தோ மாலிக், ரஜினிகாந்த் மீது வைத்துள்ள பாசத்திற்காகவும், சமீபத்தில் மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் எனும் ஷோ ரூமை திறந்து வைத்த பெருமைக்காகவும், டத்தோ மாலிக் நன்றி கூறினார். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளர் தாணுவிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

தேடிச்சென்ற அஜீத்...

No comments

அஜீத் எந்த டைரக்டரையும் தேடிப் போனதில்லை. அவரிடம் கதை சொல்வதற்காகதான் காத்திருக்கிறார்கள் பலரும். பில்லா, மங்காத்தா வெற்றிகளுக்கு பின்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை. கடந்த பல வருடங்களாகவே இதுதான் நிலைமை. கவுதம் மேனன் ஆகட்டும், வெங்கட் பிரபு ஆகட்டும், வீரம் சிவா ஆகட்டும்… அஜீத் வீட்டு கேட் திறந்தால்தான் எல்லாம் நடக்கும். ஆனால் அவரே ஐதராபாத் சென்று டைரக்டர் விக்ரம் குமாரை சந்தித்து விட்டு வந்தார் என்றால் நம்பவா முடிகிறது? நம்பிதான் ஆக வேண்டும்.

யாவரும் நலம் சமயத்திலேயே அஜpத்திடம் ஒரு கதையை சொல்லி சம்மதம் வாங்கி வைத்திருந்தார் விக்ரம் குமார். அதன்பின்னர் என்னென்னவோ காரணங்கள், ஏராளமான தயக்கங்கள்… அந்த படத்தை தொட(ர) முடியாமலே போனது இருவராலும்.

இப்போது மீண்டும் அதே கதையை படமாக்கலாம் என்று நினைத்திருந்தாராம் அஜீத். முதல் கட்ட பேச்சு வார்த்தைகளை போனில் பேசி முடித்தவர், சட்டென்று ஒரு நாள் கிளம்பி ஐதரபாத் சென்று அவரை சந்தித்துவிட்டு வந்தாராம். இருவர் மனசும் க்ளியர்.

அதேநேரம் இந்த பக்கம் தன்னை வைத்து படம் தயாரிக்க தயாராக இருக்கும் சத்யஜோதி பிலிம்சுடன் பேசி முடித்துவிட்டாராம் அஜpத். கே.வி.ஆனந்த் கேட்ட சம்பளம், கிறுகிறுக்க வைப்பதால், அவர் வேணாம் என்று கம்பெனி முடிவெடுத்திருப்பதாக கேள்வி. அந்த இடத்தில்தான் விக்ரம் குமாரை உட்கார வைக்க பேச்சு நடக்கிறதாம். விக்ரம் குமாரின் பணத்தாசையை பொறுத்துதான் இதுவும் நடக்குமா, படுக்குமா என்பது புரியும்.

மணிரத்னத்துக்கு லண்டனில் விருது...

No comments

இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு லண்டன் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சாதனையாளர் (ஐகான்) விருது வழங்கப்பட்டது.

பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் அண்மையில் நடைபெற்ற இந்தப் பட விழாவில் மணிரத்னத்தின் ரோஜh, பம்பாய் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. படங்களின் திரையிடலுக்குப் பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தனித்தன்மை மிக்க திரைப்படங்களை இயக்கியதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விருதை பெற்ற பின்னர் இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது:

இந்த விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறேன். லண்டனில் இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவது இந்த நூற்றாண்டின் புதிய அத்தியாயம். தற்போதைய சு+ழலில் இந்திய சினிமா புதிய பரிமாணங்களைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற விருதுகள் அடுத்தடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். இந்த விருதை இனி வரும் காலங்களில் திறமை வாய்ந்த இளம் இயக்குநர்கள் பெறுவார்கள் என நம்புகிறேன் என்றார்.

நடிகை மனீ'h கொய்ராலாவுக்கு மனிதநேயமிக்க உணர்வுகளை

சினி உலகம் நடத்திய ’மாஸ் இடைவேளை காட்சி’ கருத்து கணிப்பில் வென்றது யார்? ரிசல்ட் இதோ...

No comments

சினி உலகம் கடந்த வாரம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ‘மாஸ் இடைவேளை காட்சி’ என்ற கருத்து கணிப்பை நடத்தியது.
இதில் ‘துப்பாக்கி’ விஜய், ’மங்காத்தா’ அஜித், ‘சிவாஜி’ ரஜினி, ’சிங்கம்-2’சூர்யா போட்டியில் இடம்பெற்றனர்.
இதன் ரிசல்ட் இதோ உங்களுக்காக...
  •  விஜய்- 29,218 லைக்ஸ் 
  • அஜித்- 25,367 லைக்ஸ்
  •  ரஜினி- 4,568 லைக்ஸ்
  •  சூர்யா- 489 லைக்ஸ்
 இதன் அடிப்படையில் இந்த வார கருத்து கணிப்பில் 'I am waiting' என்ற ஒரே வார்த்தையில் ரசிகர்களின் விசில் சத்தத்தால் திரையரங்கை அதிர வைத்த இளைய தளபதி தான் இந்த வார வெற்றியாளர்.
 (இந்த கருத்து கணிப்பு கடந்த வாரம் 29.05.2015 அன்று தொடங்கி 01.06.2015 காலை 10.25 மணியளவில் முடிக்கப்பட்டுள்ளது.)

லோக்கல் தமிழ் பேசுகிறார் டோனி ஜா

No comments
ஆங்கில படங்கள் சமீபகாலமாக தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் ஹாலிவுட், வெளிநாட்டு நடிகர்கள் லோக்கல் தமிழ் பேசும்போது ரசிகர்கள் தமாஷாக உணர்கின்றனர். அப்படங்களுக்கு தமிழ் படங்களின் பெயரையும் வைக்கின்றனர்.

 அந்த வரிசையில் விக்ரம் பிரபு நடித்த கும்கி பட டைட்டிலுடன் வீரன் என்ற வார்த்தையை சேர்த்து கும்கி வீரன் என்ற டைட்டில் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டோனி ஜா நடிக்கும் டாம் யம் கூங் 2 என்ற படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. 

 டோனி ஜா ஏற்கனவே நடித்து வெளியான ஓங் பேக் 1 என்ற படம் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த படத்தில் இணைந்த இயக்குனர் பிரச்சாய் பிங்கே, ஸ்டன்ட் இயக்குனர் கிட்டி கேரி, டோனி ஜா மூவரும் டாம் யம் கூங் 2 படத்தில் இணைந்திருக்கின்றனர்.

 இப்படத்துக்காக பைக் சேசிங் காட்சி ஒன்று 20 நிமிடம் ஓடும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. இண்டோ ஓவர்சிஸ் நிறுவனம் சார்பில் பிரோஸ், ஆர்ட் ஸ்டுடியோ வெளியிடுகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே ஜாக்கிசான் நடித்த சிஇசட் 12 என்ற படத்தை வெளியிட்டுள்ளது.

நிழல் வேட்டை

No comments
அதீத கற்பனை கலந்த ஆக்ஷன் சாகச படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்ணை மூடிக் கொண்டு ‘த மார்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ்’ (The Mortal Instruments: City of Bones) ஹாலிவுட் படத்துக்கு செல்லுங்கள். திகட்டத் திகட்ட புது அனுபவத்தை ருசிப்பீர்கள். படம் வெளியாவதற்கு முன்பே இப்படி அறுதியிட்டு சொல்லக் காரணம், ஒன்றே ஒன்றுதான். அது ‘த மார்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’ பாகங்கள். டீன் ஏஜ் இளைஞர்களுக்காக மொத்தம் ஆறு பாகங்களில் உருவான நாவல் இது. இதில் ஐந்து பாகங்கள் வெளியாகிவிட்டன.

ஆறாவது பாகம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என முகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ள நேரத்தில்தான், முதல் பாகம் திரைப்படமாக வெளிவருகிறது.
கிளாரி என்ற இளம்பெண் தன் நண்பர்களுடன் நைட் கிளப்புக்கு செல்கிறாள். அங்கு ஒரு கொலையை பார்க்கிறாள். அதிர்கிறாள். காரணம், அவள் அருகில் அவளது நண்பர்கள் இருந்தபோதும் அவளுக்கு மட்டும்தான் அந்தக் கொலை தெரிகிறது. அவள் மட்டும்தான் அதற்கு சாட்சி. கொலையை செய்தவன், நிழல்களை வேட்டையாடுபவன். அவன் கிளாரியின் அம்மாவையும் கடத்தி விடுகிறான். ஏனெனில், அவள் அம்மாவுக்குத்தான் ‘மார்டல்’ கோப்பை இருக்கும் இடம் தெரியும். திகைக்கும் கிளாரிக்கு மெல்ல மெல்ல பல உண்மைகள் தெரிய வருகின்றன. அதற்கு அந்தக் கொலைகாரன் போலவே இருக்கும் நிழல் வேட்டைக்காரர்களில் சிலர் உதவுகிறார்கள். அறியும் நிஜங்கள் கிளாரியை பதற வைக்கின்றன. அவள் அம்மாவும் ஒரு நிழல் வேட்டைக்காரிதான். எதன் காரணமாகவோ தன் மகள் கடந்தகாலத்தையோ அல்லது தங்கள் குடும்ப பாரம்பரியத்தையோ தெரிந்து கொள்ளக் கூடாது என்று மறைத்திருக்கிறாள்...
வெலவெலத்துப் போகும் கிளாரி, அடுத்த பயங்கரத்தை நேருக்கு நேர் சந்திக்கிறாள். அது அவளை அப்படியே புரட்டிப் போடுகிறது. யெஸ், அவளும் ஒரு நிழல் வேட்டைக்காரிதான்! அதாவது, பாதி தேவதை... பாதி மனித வீரர்... இப்போது கடத்தப்பட்ட தாயையும் மீட்க வேண்டும். கூடவே அம்மா மறைத்து வைத்திருக்கும் மார்டல் கோப்பையை எதிரிகள் கைப்பற்றி விடாமலும் பாதுகாக்க வேண்டும். அதற்கு ஒரே வழி, தன்னுள் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக்கொண்டு வருவது, பயிற்சி பெறுவது, கூர் தீட்டுவது. இதற்கு கிளாரியின் நிழல் வேட்டைக்கார நண்பர்கள் உதவுகிறார்கள். இதன் பிறகு என்ன நடக்கிறது... என்பதுதான் இந்த முதல் பாகத்தின் கதை.

ஹைவேஸில் ஸ்பீட் பிரேக்கர் இன்றி பறப்பது போல் வேகமாகச் செல்லும் இந்த ஃபேன்டஸி ஆக்ஷன் நாவலின் பாகங்களை எழுதியிருப்பவர் ஜூடித் ரம்மெல்ட். இப்படி சொன்னால் ஈ, எறும்புக்குக் கூட தெரியாது. அதுவே இவரது புனைப் பெயரான கசன்ட்ரா க்ளாரி (Cassandra Clare) என்று குறிப்பாகச் சொன்னால் சட்டென்று ஆங்கில வாசகர்கள் துள்ளிக் குதிப்பார்கள். ‘அட’ என வியப்பார்கள். காரணம், நாவல்களை இவர் எழுதியது புனைப்பெயரில்தான். இதற்குப் பின்னால் பல சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. ஈரானில் வசித்த அமெரிக்க தம்பதிகளுக்கு பிறந்தவர் ஜூடித். அப்பா, பிசினஸ் காலேஜில் பேராசிரியர். தாத்தா, திரைப்படத் தயாரிப்பாளர். யூத குடும்பம். ஆனால், மதப்பற்று கிடையாது. சிறுவயதில் ஸ்விட்சர்லாந்து, இங்கி லாந்து, பிரான்ஸ் என சுற்றியிருக்கிறார். ஆனால், மேல்நிலைக் கல்வியை அமெரிக்காவில்தான் படித்தார். கல்லூரி நாட்களிலேயே பத்திரிகையாளராக வேண்டும் என்றுதான் ஜூடித் விரும்பினார். அதற்கு ஏற்ப வேலையும் கிடைத்தது. ‘ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ உட்பட பல பத்திரிகைகளில் வேலை பார்த்தார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்தபோதுதான் அந்த விபரீத ஆசை வந்தது. இவருக்குப் பிடித்த இரு நாவல்கள், ‘ஹாரி பாட்டரு’ம், ‘த லார்ட் ஆஃப் ரிங்’ஸும்.
அமெரிக்காவில் ஒரு வழக்கம் உண்டு. யாருக்காவது ஒரு நாவல் பிடித்துவிட்டால் போதும். அந்த நாவலின் கதாபாத்திரங்களையும், சம்பவங்களையும் வைத்து சொந்தமாக ஒரு நாவலை எழுதலாம். அதை இணையதளத்திலும் வெளியிடலாம். இதற்கு குறிப்பிட்ட அந்த எழுத்தாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்று அவசியமில்லை. சும்மா ஜாலிக்காக தொடங்கப்பட்ட இந்த பழக்கம் இப்போது ஜுரம் போல் பலரையும் தொற்றியிருக்கிறது. இதிலிருந்து ஜூடித்தும் தப்பவில்லை. கசன்ட்ரா க்ளாரி என்னும் புனைப்பெயரில் இணையதளத்தில் ஒரு வலைப்பக்கத்தை தொடங்கினார். ஹாரி பாட்டரை மையமாகக் கொண்டு ‘த டிராகோ டிரையாலஜி’ என்னும் நாவலையும், ‘த லார்ட் ஆஃப் ரிங்ஸை’ அடிப்படையாகக் கொண்டு ‘த வெரி சீக்ரெட் டைரிஸ்’ என்னும் புதினத்தையும் அதில் எழுதினார். படித்தவர்கள் பாராட்டினார்கள். மறுமொழியில் உச்சி முகர்ந்தார்கள். நாலா திசையிலிருந்தும் இன்ப மழை பொழிந்தது. தன்னாலும் ஃபேன்டஸி நாவல்கள் எழுத முடியும் என்று மனதார நம்பினார்.

இந்த நேரத்தில் இவரது மனசாட்சி சரமாரி யாக கேள்விகளை கேட்டது. ‘என்னதான் இருந்தாலும் நீ எழுதினது இன்னொருவரின் கற்பனையை அடிப்படையாகக் கொண்டுதானே..?’ தலை குனிந்தவர், தன் தவறை உணர்ந்தார். அடுத்த நொடியே இணையத்தில், தான் எழுதிய அந்த இரு நாவல்களையும் அழித்தார்! அதே சமயம், இப்படி எழுதிப் பழகியதுதான் தனக்கு கை கொடுக்கப் போகிறது என்பதையும் துல்லியமாக உணர்ந்தார். அதுவேதான் நடந்தது. மடமடவென்று சொந்தக் கற்பனையில் 2004ம் ஆண்டு ஒரு நாவலை இவரால் எழுத முடிந்தது. அதுதான், ‘த மார்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ்’. படித்துப் பார்த்த பதிப்பகத்தின் நாசி வியர்த்தது. யாரும் சொல்லாமலேயே அது பொன்முட்டையிடும் வாத்து என்பது புரிந்தது. உடனே அச்சிட்டார்கள். 2007ம் ஆண்டு வெளியிட்டார்கள்.

பிறகென்ன... உலகமே பற்றி எரிந்தது. இளைஞர்கள் அந்த நாவலை கொண்டாடித் தீர்த்தார்கள். சூட்டோடு சூடாக அடுத்தடுத்த பாகங்களையும் வெளியிட்டு கல்லாவை நிரப்பிக் கொண்டார்கள். நிரப்பியும் வருகிறார்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று காத்திருந்த ஹாலிவுட், கப்பென்று ரைட்ஸ் வாங்கி திரைப்படமாக எடுக்க ஆரம்பித்து விட்டது. ஆனாலும் ஒரு சிக்கல். இந்த பாகங்களின் மையம் ஹீரோ அல்ல. ஹீரோயின். எனவே, கதாநாயகிக்கு
பதில், கதாநாயகன் என மாற்றிவிடலாமா என்று பல ஸ்டூடியோக்கள் கேட்டிருக்கின்றன. முடியவே முடியாது என்று மறுத்துவிட்டார் ஜூடித் என்கிற கசன்ட்ரா க்ளாரி. பிறகு ஒருவழியாக நாவலில் இடம்பெற்றது போலவே ஹீரோயின் படமாக எடுக்க முன்வந்தார்கள். நெதர்லாந்தில் பிறந்து நார்வேயில் வளர்ந்தHarald Zwart இப்படத்தை இயக்கியிருக்கிறார். 2010ல் வெளியான ‘த கராத்தே கிட்’, ‘த பிங்க் பேன்த்தர் 2’ உட்பட பல படங்களை இயக்கியிருக்கும் இவர் சோனி பிக்சர்ஸின் செல்லப் பிள்ளை! ஸோ, இந்தப் படத்தையும் சோனிதான் பிரபஞ்சம் எங்கும் வெளியிடுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை தொடங்கி நவம்பரில் முடித்துவிட்டார்கள். அதன் பின்னர் படத்துக்கு என்ன தேவை என்பதை கிராஃபிக்ஸ் பார்த்துக் கொள்ளும் என திடமாக நம்பினார்கள். நம்பினார் கெடுவதில்லை. படத்தில் சிஜி பிரமாதமாக வந்துள்ளதாம். படம் வெளியாவதை ஒட்டி செல்ஃபோனில் விளையாட்டுக்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த மார்க்கெட்டிங் உத்தி கைகொடுத்திருக்கிறது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் நாவலின் முதல் பாகத்தை இந்த மாதம் திரையிட்ட கையோடு அடுத்த மாதம் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை தொடங்குகிறார்கள். இந்த செகண்ட் பார்ட், அடுத்த வருடம் வெளியாகும். தேதியையும் அறிவித்துவிட்டார்கள்.

வேறு வழியில்லை. இப்படித்தான் நடக்கும். இனி வரும் ஆறு ஆண்டுகளுக்கு, வருடத்துக்கு ஒரு வைர முட்டை வீதம் ‘த மார்ட்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்’ பாகங்கள் போட்டபடியேதான் இருக்கும். பிரச்னைகள் தலைவிரித்தாடும் போதுதான் கற்பனை உலகில் மனிதர்கள் தஞ்சமடைவார்கள். சஞ்சரிப்பார்கள். இந்த நூற்றாண்டே சிக்கல்களின் காலமாகத்தான் இருக்கும் போலிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும், அடிப்படை உணவின் விலையேற்றமும், பொருளாதார மந்தமும் உலக மக்களை பிச்சைக்காரர்களாக்கி வருகின்றன. இதிலிருந்து தப்பிக்க மாயமான உலகை ஹாலிவுட் உருவாக்கி அதில் வசிக்கச் சொல்கிறது. கூரை இல்லாதவனுக்கு கனவில் கூரை கிடைத்த கதைதான். ரைட். பசி வந்திட பத்தும் பறந்து போகும். எனவே, அதீத கற்பனை கலந்த ஆக்ஷன் சாகச படங்களும் ஜெயிக்கும். ‘த மார்டல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்: சிட்டி ஆஃப் போன்ஸ்’ படம் ஒருவேளை அதற்கு உதாரணமாக அமையலாம்.


ஆப்பிளின் கதை

No comments
கடன் வாங்கியாவது இந்த ‘ஜாப்ஸ்’ (Jobs) ஹாலிவுட் படத்தை பார்த்துவிடுங்கள்.
தெரிந்த கதைதான். ஆப்பிள் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரும், கம்ப்யூட்டர் உலகின் ஜாம்பவானும், சில வருடங்களுக்கு முன் மறைந்தவருமான ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை அடியொற்றித்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். நண்பர்களுடன் இணைந்து ஓர் இளைஞன் ஒரு நிறுவனத்தை உருவாக்குகிறான். அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறான். மீண்டும் அந்த நிறுவனத்தை அடைகிறான். வெற்றிகரமாக நடத்துகிறான்.
அவ்வளவுதான் விஷயம்.
அவ்வளவுதானா விஷயம்?
இல்லை. அதனால்தான் எப்பாடுபட்டாவது இந்தப் படத்தை பார்த்துவிடச் சொல்லி உலகம் முழுக்க பரிந்துரை செய்கிறார்கள். சமகால வரலாற்றுப் படம் என்பதால் மட்டுமல்ல. இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சாதனத்தின் சாதனையை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணமும்தான் காரணம். ஒரு தோல்வி எந்தளவுக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்ததோ அந்தளவுக்கு ஒரு வெற்றி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது.
ஏற்கனவே ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாற்றை நிறைய பேர் எழுதியிருக்கிறார்கள். தமிழ், ஆங்கில இதழ்களிலும் கட்டுரைகளாக அவை வந்திருக்கின்றன. போதும் போதாததற்கு மைக்ரோ சாஃப்ட் அதிபரான பில் கேட்ஸுக்கும், ஆப்பிள் நிறுவனத்துக்கும் நடந்த சண்டையை மையமாக வைத்து 1999ல் ‘பைரேட்ஸ் ஆஃப் சிலிக்கான் வேலி’ (Pirates of Silicon Valley) என்ற ஹாலிவுட் படமும் வந்திருக்கிறது.



எனவே, எதையும் புதிதாக இந்த ‘ஜாப்ஸில்’ அவர்கள் சொல்லிவிடப் போவதில்லை. ஆனால், ஒரே படத்தில் முழுமையாக ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கையை சொல்லியிருக்கிறார்கள் பாருங்கள்... அது முக்கியம். ‘நெவர்வாஸ்’, ‘ஸ்விங் ஓட்’ ஆகிய படங்களை இதற்கு முன் இயக்கியிருக்கும் ஜோஷுவா மைக்கேல் ஸ்டர்ன் (Joshua Michael Stern) இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். Ashton Kutcher மற்றும் Josh Gad ஆகியோர், நண்பர்களாகவும் ஆப்பிள் நிறுவனத்தை உருவாக்கியவர்களாகவும் நடித்திருக்கிறார்கள்.

2009ல் ‘மில்க்’, 2011ல் ‘ஜெ எட்கர்’, ‘த அயர்ன் லேடி’, ‘மை வீக் வித் மர்லின்’, 2012ல் ‘லிங்கன்’... என கடந்த சில வருடங்களாகவே ஹாலிவுட்டில் தனி மனிதர்களின் வாழ்க்கையை படமாக்கி வருகிறார்கள். இந்தப் போக்கும் அமெரிக்காவில் வெடித்த பொருளாதார மந்தத்துக்கு பிறகே அதிகரித்திருக்கின்றன. ஒவ்வொரு சாதனையும் வேதனையும் எந்தவொரு சமூகத்தின் விளைவும் அல்ல.

அவை அனைத்துமே தனி மனிதர்களின் பலம், பலவீனங்களை சார்ந்ததுதான் என்பதை பதட்டத்துடன் வெவ்வேறு வகையில் வலியுறுத்த
ஆரம்பித்திருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாகத்தான் ‘ஜாப்ஸ்’ வெளியாகிறது.

மேக்கின்டோஷ் வரிசை மேஜை கம்ப்யூட்டர்கள், ஐ மேக் லேப்டாப்புகள், ஐ பாட், ஐ ஃபோன், ஐ பேட் கையடக்க கம்ப்யூட்டர்... என ரவுண்டு கட்டி ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பு கூகுளையும், மைக்ரோ சாஃப்டையும் சேர்த்தால் வரும் மதிப்பை விட பல மடங்கு அதிகம் என்கிறது புள்ளிவிவரம். இதைக் கணக்கில் கொண்டால் ஆப்பிள் சாம்ராஜ்ஜியத்தின் அசுர பலம் புரியும்.

அப்படிப்பட்ட பேரரசை நிறுவியவர்களுள் ஒருவரின் வாழ்க்கைதான் இந்தப் படம் என்பதால், கடன் வாங்கியாவது இந்தப் படத்தை பார்த்துவிடுங்கள். கூட்டு உழைப்பு அல்ல, தனிப்பட்ட ஒருவரின் மூளைதான் ஒரு சாம்ராஜ்ஜியம் உருவாகக் காரணம் என அமெரிக்கா உணர்த்த வருவது அப்போதுதான் புரியும்.

ஹாலிவுட் படம் ‘மெட்ரோ’ தமிழில் வருகிறது

No comments
ஹாலிவுட்டில் தயாரான ஆங்கில படம் ‘மெட்ரோ’. தமிழில் அதே பெயரில் வருகிறது. உலகில் மெட்ரோ ரெயில் திட்டம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் கடந்து விட்டது. நாட்டில் நடக்கும் ஊழல் மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் ஊடுருவினால் என்ன ஆகும் என்பதே கதை.

 திகில், திரில்லிங் காட்சிகளுடன் இதை படமாக்கியுள்ளார் டைரக்டர் ஆண்டன் மெகர்டிச்வ். மெட்ரோ ரெயில் பயணம் என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதை காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர்.



 செர்கே புஷ்கே பாலிஸ், அனாடோனி பிலியூ, அலெக்ஸி பர்ட் யூகோவ், கேத்ரினா ஆகியோர் நடித்துள்ளனர். மெட்ரோ இண்டோ ஓவர்சிஸ் பிலிம்ஸ் பெரோஸ் இலியாஸ் தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறார்.

ஹாலிவுட் போகிறது கோச்சடையான்

No comments
கோச்சடையான் படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து ஹாலிவுட்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் சவுந்தர்யா. இரட்டை வேடங்களில் ரஜினி நடித்திருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

படத்தின் டிரைலர் உருவாக்கப்பட்டுவிட்டது. பின்னணி இசையை முடிக்கும் கட்டத்தில் லண்டனில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஹாலிவுட் படமான அவதார் பாணியில் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் நடைபெறுவதால் அதற்கான பணிகள் கவனமாக செய்யப்படுகிறது. இதனால் காலதாமதம் ஆகிறது.

 தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உருவாகும் இப்படம் ஆங்கிலத்திலும் டப்பிங் ஆகிறது. ஹாலிவுட் தரத்துக்கு மோஷன் கேப்சர் முறையில் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள நிலவரப்படி இந்த ஆண்டின் இறுதியில்தான் படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலை உள்ளது.

ஆனாலும் ரஜினியின் பிறந்தநாளில் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுவதுபோல் எந்த அற¤விப்பும் இதுவரை இயக்குனர் சவுந்தர்யா வெளியிடவில்லை. மொத்த பணி நிறைவடைய இன்னும் 2 மாதங்களாவது தேவைப்படும் என்று பட குழுவினர் தெரிவிக்கின்றனர்


ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள்

No comments
ஹாலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம் 33 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.185 கோடி) ஆகும். 38 வயதாகும் இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார்.

இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘மேல்பிசியன்ட்’ சினிமாப்படம் அடுத்த கோடைகாலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து 2-வது இடத்தில் 26 மில்லியன் டாலர் (ரூ.150 கோடி) வருமானத்துடன் ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சும், 3-வது இடத்தை 22 மில்லியன் டாலர் (ரூ.125 கோடி) வருமானத்துடன் நடிகை கிறிஸ்டின் ஸ்டுவார்டும் பெற்று இருக்கிறார்கள்.


ஹாலிவுட்டுக்கு போகிறார் மாதவன்

No comments
3டியில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் மாதவன். அலைபாயுதே, தம்பி, ரன், யாவரும் நலம் என பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்திருப்பவர் மாதவன்.


இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 1968ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நைட் ஆப் தி லிவிங் டெட் என்ற படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதில்தான் மாதவன் நடிக்க உள்ளார். இவருடன் டேனியல் ஹாரிஸ், டாம் சிமோர், டோனி டோட், அலோனா டால், சாரா ஹபெல், பில் மோஸ்லே போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இது பற்றி மாதவன் கூறும்போது, 3டி ஹாலிவுட் படத்தில் நடிப்பதை நினைக்கும்போது த்ரில்லாக இருக்கிறது.

ஹாலிவுட்டில் அறிமுகமாக இதைவிட ஒரு நல்ல படம் எனக்கு கிடைக்காது. தயாரிப்பாளர் சிமன் வெஸ்ட் மற்றும் குழுவினருடன் பணியாற்றப்போகிறேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே சிமன் பல்வேறு த்ரில்லர் படங்களை ஹாலிவுட்டில் தயாரித்திருக்கிறார்.

அவர் என்னை தேர்வு செய்திருப்பது எனக்கு கிடைத்த கவுரமாக கருதுகிறேன். தமிழ் படமொன்றிலும் நடிக்க உள்ளேன். அது பற்றி விரைவில் தெரிவிக்கிறேன் என்றார். தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த் பிளட்ஸ்டோன் ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். அவருக்கு பிறகு கமல்ஹாசன் ஹாலிவுட் செல்ல முயன்றார். அவரை முந்திக்கொண்டு, ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் மாதவன்.

சூப்பர்மேன், பேட்மேன் ஹீரோக்கள் இணையும் படம்

No comments
ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களான சூப்பர்மேன், பேட்மேன் இணைந்து
நடிக்கவுள்ளனர். இப்படத்தினை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ‘வார்னர் பிராஸ் நிறுவனம்’ தயாரிக்க உள்ளது. இந்த இரண்டு ஹீரோக்களை ஒருங்கிணைத்து இயக்கவிருப்பவர் சமீபத்தில் வெளியாகிய ’மேன் ஆஃப் த ஸ்டீல்’ படத்தை இயக்கிய சாக் ஸ்னைடர். இவர் சமீபத்தில் இப்படம் குறித்து டுவீட் செய்து, படத்திற்கான லோகோவையும் வெளியிட்டுள்ளார். 2015ல் வெளியிட திட்டமிட்டு உருவாக்க இருக்கும் இப்படத்தில் தற்போதைய சூப்பர்மேன் வரிசை படங்களில் நடித்து வரும் ஹென்றி காவிலே சூப்பர் மேனாக நடிக்கிறார். ஆனால் ‘பேட்மேன்’ பட வரிசையில் கடைசி பேட்மேனாக நடித்த கிரிஸ்டன் பெயில் இனி தான் பேட்மேனாக நடிக்கப் போவதில்லை என்று அறிவித்திருப்பதால் பேட் மேனாக நடிக்க வேறு ஒருவரை தேடி வருகிறாராம் இயக்குனர் சாக் ஸ்னைடர்.