ஹாலிவுட் போகிறது கோச்சடையான்
கோச்சடையான் படத்தை ஆங்கிலத்தில் டப்பிங் செய்து ஹாலிவுட்டில் வெளியிட முடிவு செய்திருக்கிறார் சவுந்தர்யா. இரட்டை வேடங்களில் ரஜினி நடித்திருக்கும் படம் கோச்சடையான். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.படத்தின் டிரைலர் உருவாக்கப்பட்டுவிட்டது. பின்னணி இசையை முடிக்கும் கட்டத்தில் லண்டனில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். ஹாலிவுட் படமான அவதார் பாணியில் விஷுவல் எபெக்ட்ஸ் பணிகள் நடைபெறுவதால் அதற்கான பணிகள் கவனமாக செய்யப்படுகிறது. இதனால் காலதாமதம் ஆகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் உருவாகும் இப்படம் ஆங்கிலத்திலும் டப்பிங் ஆகிறது. ஹாலிவுட் தரத்துக்கு மோஷன் கேப்சர் முறையில் படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள நிலவரப்படி இந்த ஆண்டின் இறுதியில்தான் படம் ரிலீஸ் ஆகும் என்ற நிலை உள்ளது.
ஆனாலும் ரஜினியின் பிறந்தநாளில் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுவதுபோல் எந்த அற¤விப்பும் இதுவரை இயக்குனர் சவுந்தர்யா வெளியிடவில்லை. மொத்த பணி நிறைவடைய இன்னும் 2 மாதங்களாவது தேவைப்படும் என்று பட குழுவினர் தெரிவிக்கின்றனர்
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment