ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்க பிரபல நடிகருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

No comments

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் மீண்டும் நடிக்க பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் கிரேய்க்கிற்கு ரூ.2188 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய நாட்டை சேர்ந்த DanielCraig(48) என்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கடந்த 1992ம் ஆண்டு ’The Power of One’ என்ற படத்தின் மூலம் திரையில் அறிமுகமாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்தடு 34 படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை ஹாலிவுட்டில் தக்க வைத்துள்ளார்.

இந்த 34 படங்களில் முதன் முறையாக கடந்த 2006ம் ஆண்டு ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் ‘Casino Royale’ என்ற படத்தில் நடித்து அசத்தினார்.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 2008-ல் ‘Quantum of Solace’, 2012-ல் ‘Skyfall’ மற்றும் 2015-ல் ‘Spectre’ என 4 படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

’Spectre’ படம் வெளியானதும் ‘இனி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பவில்லை. எனது கையை கூட நான் உடைத்துக்கொள்ள தயார்.

ஆனால், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்’ என அதிரடியாக பேட்டியளித்தார்.

மேலும், ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் இறுதியாக நடித்த ’Spectre’ படத்தில் அவருக்கு 65 மில்லியன் டொலர் சம்பளம் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரபல தயாரிப்பு நிறுவனமான சோனி டேனியல் கிரேய்க்கை மீண்டும் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறது.

இதுமட்டுமில்லாமல், சோனி தயாரிப்பில் அடுத்து வெளியாகும் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் டேனியல் கிரேய்க் நடித்தால் அவருக்கு 150 மில்லியன் டொலர்(21,88,50,00,000 இலங்கை ரூபாய்) சம்பளமாக வழங்க தயார் என சோனி நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், டேனியல் கிரேய்க் இந்த வாய்ப்பை நிராகரித்தால், இவருக்கு அடுத்த நிலையில் உள்ள Idris Elba என்ற நடிகர் ஜேம்ஸ் பாண்டாக நடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments :

Post a Comment