‘கபாலி’ உருவத்தில் 36 விதமாக மாறும் ரஜினி சிலையை உருவாக்கிய மலேசியா ரசிகர்....

No comments

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே, இப்படத்திற்காக செய்யப்பட்ட புரோமோஷன்கள் இதுவரை எந்த தமிழ் சினிமாவுக்கும் இல்லாத அளவுக்கு நடைபெற்றது. இந்நிலையில், ‘கபாலி’ படம் வெளிவந்த பிறகும்கூட அந்த படத்திற்கு புரோமோஷன்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக, ‘கபாலி’ ரஜினியின் உருவம் பதித்த சிலை ஒன்றை ரஜினி ரசிகரும், மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் உரிமத்தை பெற்ற டத்தோ மாலிக் என்பவர் சென்னையில் வெளியிட்டுள்ளார். இதன் முதல் சிலையை ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டுள்ளார். ‘கபாலி’ படம் 2016-ஆம் ஆண்டில் வெளியானதால், மொத்தத்தில் இந்த உருவச்சிலை 2016 மட்டுமே தயாரிக்கவுள்ளனர்.

இந்த உருவம் மலேசியாவில் வடிவமைக்கப்பட்டு ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளில் உள்ள திரைப்பட தொழில்நுட்ப நிபுணர்கள், அதிநவீன மூலப் பொருட்களுடன் தயாராகி கொண்டேயிருக்கிறது. இதனை பெற்றுக்கொள்ள உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மாலிக் ஸ்டிரீம்ஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் (Malik Streams Production & Distribution) பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

இந்த உருவச்சிலையின் சிறப்பம்சம் என்னவென்றால், இந்த சிலையை 36 விதமாக எப்படி வேண்டுமானாலும் ரஜினி ரசிகர்கள், ரஜினி ஸ்டைலில் தங்களுக்கேற்றார்போல் மாற்றியமைத்துக் கொள்ளலாம். மேலும், இந்த உருவச் சிலையில் ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்தில் பயன்படுத்திய கைக்காப்பு, துப்பாக்கி, கோர்ட் ஆகிய பொருட்களும் உள்ளதாம்.

இதன் மொத்த எண்ணிக்கை வெறும் 2016 மட்டுமே என்பதால், உலகம் முழுவதும் உள்ள ரஜினியின் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு பெற்றுக் கொள்ளுவார்கள் என்றும், இதற்கு நல்ல வரவேற்பு உள்ளதாகவும் மாலிக் கூறினார். இந்த உருவச் சிலையை ரஜினிகாந்த் தொட்டுப் பார்த்து பிரமித்து போனாராம். மேலும், அந்த சிலையை பார்த்து மிகுந்த மகிழ்ச்சியும் அடைந்தாராம். 

இதுவரை யாரும் செய்யாத இந்த செயலை டத்தோ மாலிக், ரஜினிகாந்த் மீது வைத்துள்ள பாசத்திற்காகவும், சமீபத்தில் மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் எனும் ஷோ ரூமை திறந்து வைத்த பெருமைக்காகவும், டத்தோ மாலிக் நன்றி கூறினார். இந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த தயாரிப்பாளர் தாணுவிற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

No comments :

Post a Comment