ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகள்
ஹாலிவுட் பட உலகில் கடந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகைகள் குறித்த விவரத்தை நியூயார்க்கில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.அதில் நடிகை ஏஞ்சலீனா ஜோலி முதல் இடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய வருமானம் 33 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.185 கோடி) ஆகும். 38 வயதாகும் இவர் சமீபத்தில் மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றார்.
இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘மேல்பிசியன்ட்’ சினிமாப்படம் அடுத்த கோடைகாலம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து 2-வது இடத்தில் 26 மில்லியன் டாலர் (ரூ.150 கோடி) வருமானத்துடன் ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சும், 3-வது இடத்தை 22 மில்லியன் டாலர் (ரூ.125 கோடி) வருமானத்துடன் நடிகை கிறிஸ்டின் ஸ்டுவார்டும் பெற்று இருக்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment