குத்துச்சண்டை வீரர் தாரா சிங் வாழ்க்கை வரலாறு படமாகிறது

No comments
ஓட்டப் பந்தய வீரர் மில்கா சிங் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோரைத் தொடர்ந்து பிரபல குத்துச்சண்டை வீரர் தாரா சிங்கின் வாழ்க்கை வரலாறும் ஹிந்தியில் திரைப்படமாகிறது.

இந்தப் படத்தில் தாராசிங் கேரக்டரில் அக்‌ஷய் குமார் நடிக்க, ரோஹித் ஜுக்ராஜ் இயக்க இருக்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த தாரா சிங், இந்தியாவின் பிரபல பாக்ஸிங் வீரராக விளங்கியவர். ‘மகாபாரதம்’ தொடர், ‘தாதா’, ‘ருஸ்தம் இ பாக்தாத்’, ‘சிக்கந்த் இ அசம்’ என பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ள தாராசிங், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர் என சினிமாவின் பல துறைகளில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment