நடிகை ஸ்ரீதேவி வைத்தியாசலையில் அனுமதி!!

No comments
நடிகை ஸ்ரீதேவி கணவர் போனிகபூர் மற்றும் மகள்களுடன் அமெரிக்கா சென்று இருந்தார்.

 அங்கு சில நாட்கள் ஓய்வு எடுத்து விட்டு இந்தியா திரும்ப தயாரானார். அப்போது திடீரென கீழே தவறி விழுந்தார்.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வலது கால் மூட்டிலும் பலத்த அடிப்பட்டது. வலியால் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். இதையடுத்து பயணத்தை இரத்து செய்து விட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

 எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்து பார்க்கின்றனர். சில நாட்கள் வைத்தியசாலையிலேயே இருப்பார் என தெரிகிறது.

 ஸ்ரீதேவியின் 50–வது பிறந்த நாளை அடுத்த மாதம் 13–ம் திகதி மும்பையில் பிரமாண்டமாக கொண்டாட போனிகபூர் திட்டமிட்டு இருந்தார். ஸ்ரீதேவி வைத்தியசாலையில் இருப்பதால் விழாவை இரத்து செய்யலமா? என்று யோசிக்கிறாராம்.

No comments :

Post a Comment