தலைவா படத்துக்கு யு சான்று

No comments
விஜய் நடிக்கும் தலைவா படத்துக்கு தணிக்கை குழு யு சான்றிதழ் வழங்க மறுத்தது. ரிவைசிங் கமிட்டியில் தணிக்கை சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

விஜய் நடித்துள்ள படம் தலைவா. சத்யராஜ், அமலாபால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தெய்வத் திருமகள், மதராச பட்டணம் படங்களை இயக்கிய விஜய் இயக்கி உள்ளார். இப்படம் கடந்த வாரம் தணிக்கை சான்றிதழுக்காக சென்சார் குழுவினருக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்தனர்.

 ஆனால், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் யு சான்றிதழ் தரும்படி கேட்டார். அதை அதிகாரிகள் ஏற்கவில்லை. இதையடுத்து இப்படம் ரிவைசிங் கமிட்டிக்கு நேற்று திரையிடப்பட்டது.

படத்தை பார்த்து முடித்ததும் சில காட்சிகளை கட் செய்தால் யு சான்றிதழ் தருவதாக தெரிவித்தனர். இதை இயக்குனர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து யு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு பொழுதுபோக்கு வரி சலுகை பெற வேண்டுமென்றால் படத்துக்கு யு சான்றிதழ் தேவை.

மேலும் டிவி சேனல்களில் படத்தை ஒளிபரப்பவும் யு சான்று முக்கியம் என்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் யு சான்றிதழ் பெறவே எண்ணுகின்றனர்.


No comments :

Post a Comment