மூன்று மொழிகளில் உருவாகும் விஜய் ஆண்டனியின் சலீம்

No comments
‘நான்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆன்டனி ஹீரோவாக நடித்து வரும் படம் ‘சலீம்’. ‘ஸ்டுடியோ 9 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யும் திட்டத்தோடு படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார்கள்.

‘சலீம்’ குறித்து விஜய் ஆண்டனி கூறுகையில் ‘’படத்தின் ஐம்பது சதவிகித டாக்கி போர்ஷன் வேலைகள் முடிந்துவிட்டது. எடுத்த வரைக்கும் படம் நல்லா வந்திருக்கிறது.

மீதமுள்ள காட்சிகளின் படப்பிடிப்பு தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சலீம் நல்ல ஒரு படமாக வெளிவரும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக அக்‌ஷா பர்தசானி நடித்திருக்கிறார். இப்படத்திற்கு விஜய் ஆன்டனியே இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment