ஆர்யாவின் இரண்டாம் உலகம்' படத்தின் இசை வெளியீடு

No comments
செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'இரண்டாம் உலகம்'. இந்த படத்தில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஜோடியாக நடித்திருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற 4-ஆம் தேதி நடைபெறவிருக்கிற நிலையில் படத்தின் இரண்டு பாடல் டிராக்கை இன்று சூரியன் எஃப்.எம் மூலம் வெளியிட்டுள்ளனர்.

சூரியன் எஃப்.எம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் ஆர்யா கலந்துக்கொண்டு பேசும்போது, இன்று வெளியாகியிருக்கும் இரண்டு பாடல்களில் ஒரு பாடல் தனுஷ் பாடியது. இந்தப் பாடலை தெலுங்கில், முதலில் நான்கு பேரை பாட வைத்தும் எதிர்பார்த்தது மாதிரி அமையவில்லை.

 பிறகு ஐந்தாவது ஒருவரை பாட வைத்தபோதுதான் தமிழில் தனுஷ் பாடியிருக்கும் பாடலோடு ஒத்துபோனது’’ என்று கூறியுள்ளார்.


No comments :

Post a Comment