கஸ்தூரி ராஜாவின் படம் அசுரகுலம் தலைப்பு மாற்றம்

No comments
கானா பாடலின் வரிகளை படத்துக்கு தலைப்பாக்கினார் இயக்குனர் கஸ்தூரி ராஜா. துள்ளுவதோ இளமை, எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா.

அடுத்து அசுர குலம் என்ற படத்தை எழுதி இயக்குகிறார். தற்போது காசு பணம் துட்டு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சூது கவ்வும் என்ற படத்தில் கானா பாடலாக ஒலித்த வரிகளே படத்தின் தலைப்பாக மாறி இருக்கிறது.

இதுபற்றி அவர் கூறுகையில், குடிசை பகுதியில் வாழும் மக்களின் மீது சமூகத்தின் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும், வாழ்க்கையில் தவறுகள் இல்லை.

ஆனால், அந்த வாழ்க்கையே தவறாகிவிடுவது எப்படிப்பட்ட கொடுமையானது என்பதை யதார்த்தமாக சொல்லும் கதை என்றார்.

இதில் மித்ரன், சானியா தாரா, சுமேசா, சாவந்த், அஜீத்ராஜ், பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பிரசாத் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்கிறார். சாஜித் இசை அமைக்கிறார்.

No comments :

Post a Comment