இந்தி கற்கும் தனுஷ்!
தனுஷ் நடித்த முதல் இந்திப் படம் 'RAANJHANAA'. இந்தப் படத்தில் தனுஷ் ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில், ஆனந்த் எல்.ராய் இயக்கியிருந்தார்.இந்தியில் ஆனந்த் எல்.ராய் மிக முக்கிய இயக்குனராவார். ஏற்கெனவே 'TANU WEDS MANU' என்ற படத்தினை இயக்கி இருக்கிறார். மீண்டும் தனுஷ் - ஆனந்த் எல்.ராய் இருவரும் இணைந்து படம் பண்ண திட்டமிட்டு இருந்தார்கள்.
இதுகுறித்து தனுஷ், " 2014-ல் மீண்டும் நான் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிக்க இருக்கிறேன். இந்தி மற்றும் தமிழ் என இருமொழிகளிலும் அப்படம் தயாராக இருக்கிறது. அப்படத்தினை எனது WUNDERBAR நிறுவனம் மற்றும் ஆனந்த் இருவருமே இணைந்து தயாரிக்க இருக்கிறோம் "
என்று அறிவித்து இருந்தார். 'RAANJHANAA' 100 கோடியையும் தாண்டி வசூலாகிக் கொண்டிருப்பதால், ஏராளமான இந்தி வாய்ப்புகள் தனுஷுக்கு வருகிறதாம். எனவே, முதலில் ஆனந்த் எல்.ராய் படத்தை முடித்துவிட்டு, பிறகு வேறு இந்திப் படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.
இதற்காக தீவிரமாக இந்தி கற்று வருகிறாராம் தனுஷ். மொழியை நன்கு தெரிந்து கொண்டால்தான் உச்சரிப்பு நன்றாக வரும் என நினைக்கிறாராம். இதேபோல் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்துக்காக ஷாருக் கானும் தமிழ் கற்று வருகிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment