ஆகஸ்ட் 9-ம் தேதி 'தலைவா' ரிலீஸ்!

No comments
விஜய் - அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தலைவா.' 'தெய்வத் திருமகள்', 'தாண்டவம்' படங்களின் இயக்குநர் விஜய் இந்தப் படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

சத்யராஜ், சந்தானம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கு அச்சாரமிடும் படம் என்று சொல்லப்படுவதாலும், பாடல்கள் ஹிட்டாகி இருப்பதாலும் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 படத்தை இந்த மாதத்தில் வெளியிட எண்ணி விளம்பரப்படுத்தி வந்தனர். ஆனால், ரிலீஸ் தேதியை மட்டும் தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என்று நினைத்தனர்.

 படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஆனால், 'யு' சான்றிதழ் கிடைத்தால் 30 சதவிகிதம் வரிவிலக்கு கிடைக்கும் என்பதால், மறுதணிக்கைக்கு அனுப்பினர்.

 காரணம், மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது இந்தப் படம். வரிவிலக்கு கிடைத்தால் நன்றாக இருக்கும் எனக் கருதினாராம் தயாரிப்பாளர். சமீபத்தில் வெளியான 'மரியான்' படத்துக்கு முதலில் 'யு/ஏ' சான்றிதழ் தரப்பட்டது. அவர்கள் மறுதணிக்கைக்கு அனுப்பியதும் 'யு' சான்றிதழ் கிடைத்தது.

 அவர்கள் நினைத்தது போலவே சிறிய திருத்தங்களுக்குப் பின் 'யு' சான்றிதழ் கிடைத்துள்ளது. எனவே, ஆகஸ்ட் 9-ம் தேதி உலகம் முழுவதும் 'தலைவா' ரிலீஸாகிறது.

No comments :

Post a Comment