லோக்கல் தமிழ் பேசுகிறார் டோனி ஜா
ஆங்கில படங்கள் சமீபகாலமாக தமிழில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் ஹாலிவுட், வெளிநாட்டு நடிகர்கள் லோக்கல் தமிழ் பேசும்போது ரசிகர்கள் தமாஷாக உணர்கின்றனர். அப்படங்களுக்கு தமிழ் படங்களின் பெயரையும் வைக்கின்றனர்.
அந்த வரிசையில் விக்ரம் பிரபு நடித்த கும்கி பட டைட்டிலுடன் வீரன் என்ற வார்த்தையை சேர்த்து கும்கி வீரன் என்ற டைட்டில் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டோனி ஜா நடிக்கும் டாம் யம் கூங் 2 என்ற படத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.
டோனி ஜா ஏற்கனவே நடித்து வெளியான ஓங் பேக் 1 என்ற படம் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த படத்தில் இணைந்த இயக்குனர் பிரச்சாய் பிங்கே, ஸ்டன்ட் இயக்குனர் கிட்டி கேரி, டோனி ஜா மூவரும் டாம் யம் கூங் 2 படத்தில் இணைந்திருக்கின்றனர்.
இப்படத்துக்காக பைக் சேசிங் காட்சி ஒன்று 20 நிமிடம் ஓடும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது.
இண்டோ ஓவர்சிஸ் நிறுவனம் சார்பில் பிரோஸ், ஆர்ட் ஸ்டுடியோ வெளியிடுகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே ஜாக்கிசான் நடித்த சிஇசட் 12 என்ற படத்தை வெளியிட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment