ஹாலிவுட்டுக்கு போகிறார் மாதவன்

No comments
3டியில் உருவாகும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் மாதவன். அலைபாயுதே, தம்பி, ரன், யாவரும் நலம் என பல்வேறு தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்திருப்பவர் மாதவன்.


இவர் ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். 1968ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நைட் ஆப் தி லிவிங் டெட் என்ற படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்படுகிறது.

இதில்தான் மாதவன் நடிக்க உள்ளார். இவருடன் டேனியல் ஹாரிஸ், டாம் சிமோர், டோனி டோட், அலோனா டால், சாரா ஹபெல், பில் மோஸ்லே போன்ற ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இது பற்றி மாதவன் கூறும்போது, 3டி ஹாலிவுட் படத்தில் நடிப்பதை நினைக்கும்போது த்ரில்லாக இருக்கிறது.

ஹாலிவுட்டில் அறிமுகமாக இதைவிட ஒரு நல்ல படம் எனக்கு கிடைக்காது. தயாரிப்பாளர் சிமன் வெஸ்ட் மற்றும் குழுவினருடன் பணியாற்றப்போகிறேன் என்று எண்ணும்போது மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கனவே சிமன் பல்வேறு த்ரில்லர் படங்களை ஹாலிவுட்டில் தயாரித்திருக்கிறார்.

அவர் என்னை தேர்வு செய்திருப்பது எனக்கு கிடைத்த கவுரமாக கருதுகிறேன். தமிழ் படமொன்றிலும் நடிக்க உள்ளேன். அது பற்றி விரைவில் தெரிவிக்கிறேன் என்றார். தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்த் பிளட்ஸ்டோன் ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தார். அவருக்கு பிறகு கமல்ஹாசன் ஹாலிவுட் செல்ல முயன்றார். அவரை முந்திக்கொண்டு, ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் மாதவன்.

No comments :

Post a Comment