நடிகை மீனா விரதமிருந்து நடித்துள்ள 'திருமலைவாசா' படம்

No comments
திருப்பதி பக்கத்திலுள்ள் தரிக்கொண்டா என்ற ஊரில் ஆச்சாரமான பிராமண குலத்தில் பிறந்து, வெங்கமாம்பா என்ற பெயரில் வளர்ந்து, இறுதியில் ஸ்ரீதேவியாக பெருமாளுடன் இணைந்த ஒரு தெய்வீக பெண்ணின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட தெலுங்கு படம் ‘வெங்கமாம்பா’.



தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப் படத்தை ‘திருமலைவாசா’ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது ’சக்ரா புரொடக்‌ஷன்ஸ்’ என்ற நிறுவனம்.

உதயபாஸ்கர் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அந்த தெய்வீக பெண்ணாக மீனா நடித்திருக்கிறார்.

இதற்காக அவர் கிட்டத்தட்ட 90 நாட்கள் விரதமிருந்து பயபக்தியோடு நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

No comments :

Post a Comment