சித்தார்த்தை பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை: சமந்தா கடுப்பு
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் சமந்தா. அவர் கூறியது: நீதானே என் பொன் வசந்தம் படத்துக்காக விருது கிடைத்தது சந்தோஷம். விருது விழாவில் சித்தார்த்தை மிஸ் செய்தது தொடர்பாக டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தேன். இதை மட்டும் எல்லோரும் ஏன் கேட்கிறார்கள் என்பது புரியவில்லை. கட்டியணைப்பது, முத்தம் ஆகியவற்றை நெருங்கியவர்களிடம் எதிர்பார்க்கிறேன். அதைத்தான் டுவிட்டரில் எழுதியிருந்தேன்.
இதுபோல் எனது குடும்ப உறுப்பினர்கள் பலரை பற்றி நான் குறிப்பிட்டுள்ளேன். அப்போதெல்லாம் அமைதியாக இருப்பவர்கள், சித்தார்த் பற்றி சொல்லும்போது மட்டும் கேள்வி கேட்கிறார்கள். சித்தார்த் எனக்கு நல்ல நண்பர். அதனாலேயே அப்படி சொல்லியிருந்தேன். மற்றபடி இது பற்றி மேலும் எதுவும் பேச விரும்பவில்லை. தமிழில் சூர்யாவுடன் நடிக்க உள்ளேன். லிங்குசாமி இயக்குகிறார். இந்த படத்துக்கு இடையே மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்கிறேன். ஷூட்டிங் பற்றி முறையான அறிவிப்பு வந்த பிறகே அந்த படத்தை சொல்லுவேன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment