மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா

No comments
கௌதம் மேனனுடன் மீண்டும் கூட்டணி சேர்வதற்கு ரெடியாகிவிட்டாராம் நடிகர் சூர்யா. கௌதம் மேனன் இயக்கவிருந்த துருவநட்சத்திரம் படத்தில் சூர்யா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின.

 ஆனால் துருவநட்சத்திரம் படம் டிராப் ஆனதைத் தொடர்ந்து லிங்குசாமி படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தாலும் கதை ஒத்துவரவில்லையாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் பலரிடமும் கதை கேட்டு வருகிறார் சூர்யா. பீட்சா இயக்குனர், சூது கவ்வும் இயக்குனர், என்று கதை வேட்டையில் ஈடுபட்டிருந்த சூர்யா கடைசியாக மவுன குரு பட இயக்குனரான சாந்த குமாரிடமும் கதையை கேட்டிருக்கிறாராம்.

 இதற்கிடையில் ஆரம்பத்தில் வந்து கதை சொல்லி, பாதியிலேயே கழற்றிவிடப்பட்ட கவுதம் மேனனை சில தினங்களுக்கு முன் வரவழைத்து பேசியிருக்கிறார் சூர்யா.

 இந்த சந்திப்பு கூட முக்கியமில்லை. இந்த சந்திப்புக்கு பின்பு வெளியே வந்த கவுதம் மேனன் முகத்தில் அவ்வளவு பூரிபுடன் தனது உதவி இயக்குனர்களுக்கு போன் அடித்து நாம பரபரப்பா இயங்க வேண்டிய நேரம் வந்துருக்கு என்றாராம்.

 இதையெல்லாம் சூர்யா வாயிலிருந்து கேட்டால்தான் இன்னும் சரியாக இருக்கும் என்கின்றனர் சினிமா வட்டாரங்கள்.



No comments :

Post a Comment