அமிதாப்புடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் டைட்டானிக் ஹீரோ!

No comments
நடிகர் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்க தான் ஆர்வமுடன் இருப்பதாக டைட்டானிக் பட ஹீரோவான லியோனார்டோ டி கேப்ரியோ தெரிவித்துள்ளார். 


இந்தி நடிகர் அமிதாப் பச்சன் முதன்முறையாக இந்தி மொழி தவிர்த்து ஹாலிவுட் படமான தி கிரேட் கேட்ஸ்பை படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் டைட்டானிக் பட ஹீரோவான டி கேப்ரியோவும் நடித்திருந்தார். படத்தை பாஸ் லஹ்ர்மான் இயக்கியிருந்தார். படத்தில் மேயர் உல்ப்ஷெய்ம் என்ற கதாபாத்திரத்தை அமிதாப் ஏற்று நடித்திருந்தார்.

எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்டு எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு படமானது எடுக்கப்பட்டு உள்ளது. நாவலின் பெயரையே படத்திற்கு வைத்திருந்தனர்.

படத்தில் நடித்துள்ள கேப்ரியோ சமீபத்தில் நடித்திருந்த தி உல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் என்ற படம் குறித்து பேட்டியளித்திருந்தார்.

அந்த பேட்டியின்போது அமிதாப் பச்சனுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பீர்களா? என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், அவரது தனித்திறமை மற்றும் நடிக்கும் ஆற்றல் தவிர்த்து ஒரு ஜென்டில்மேனாக எனக்கு அவர் தெரிகிறார்.

அவருடன் பணிபுரிந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். சிறிய கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கூட அவர் காட்டிய ஆர்வம் என்னை கவர்ந்தது.

வருங்காலங்களில் அவருடன் நடிக்க நான் ஆர்வமுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment