மணிரத்னம் இயக்கத்தில் மகேஷ்பாபு, நாகார்ஜுனா

No comments
தெலுங்கு ஹீரோக்கள் மகேஷ்பாபு, நாகார்ஜுனா நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி மகன் கவுதம் அறிமுகமான கடல் படத்தை அடுத்து மணிரத்னம் இந்திப் படம் இயக்கப் போவதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால், இப்போது தெலுங்கு ஹீரோக்களான மகேஷ் பாபு மற்றும் நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். 

இதுபற்றி மணிரத்னம் தரப்பில் விசாரித்தபோது, ஆக்ஷன் கதையான இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கில் தயாராகிறது. தமிழ் மற்றும் மலையாள முன்னணி நடிகர்களும் இதில் நடிக்க இருக்கிறார்கள் என்றனர். படத்துக்கு தயாரிப்பாளர் இன்னும் முடிவாகவில்லை.

 நாகார்ஜுனா நடிப்பில் இதயத்தை திருடாதே படத்தை மணிரத்னம் ஏற்கனவே இயக்கி இருந்தார். விஜய் மற்றும் மகேஷ்பாபு நடிப்பில், கல்கியின் பொன்னியின் செல்வனை ஏற்கனவே படமாக்க இருந்தார் மணிரத்னம். சில காரணங்களால் அது நின்றுபோனது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment