அமலா பால் உறுதி காதல் திருமணம்தான்

No comments
முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று அமலா பால் கூறினார். இதுபற்றி அவர் கூறியதாவது: மைனா படம் வெளியாகி வருடங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் நான் மைனா நாயகியாகவே அறியப்படுகிறேன். அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து அதே போல கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன.

 ஒரே மாதிரி நடிக்க விருப்பம் இல்லாததால் அவற்றைத் தவிர்த்தேன். சின்ன பட்ஜெட்டோ பெரிய பட்ஜெட்டோ வித்தியாசமான கதையம்சமுள்ள படங்களில் நடிக்கவே எப்போதும் விரும்புகிறேன். இப்போது நான் சரியான பாதையில் போய் கொண்டிருப்பதாகவே நினைக்கிறேன். எனக்குள்ளும் ஒரு கனவு இருக்கிறது. அது ஒரு வரலாற்றுப் படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பது. அது எப்போது நிறைவேறும் என்று தெரியவில்லை.

 எனது திருமணம் பற்றி கேட்கிறார்கள். எனக்கு 22 வயதுதான் ஆகிறது. இப்போது திருமணத்துக்கு அவசரம் இல்லை. ஆனால் அது எப்போது நடந்தாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்காது. திருமணம் செய்யப் போகிறவர், முன்பே எனக்கு அறிமுகமானவராக இருக்கவேண்டும். முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்துகொண்டு என்னால் வாழ முடியாது. இவ்வாறு அமலா பால் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment