ஆபத்தான சூழலில் சினிமா இருக்கிறது
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு வழங்கும் படம், நேர் எதிர். ரிச்சர்ட், பார்த்தி, வித்யா, எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ராசாமதி. இசை, சதீஷ் சக்ரவர்த்தி. இயக்கம், எம்.ஜெயபிரதீப். இதன் பாடல்கள் மற்றும் டிரைலரை ஏ.ஆர்.முருகதாஸ் முன்னிலையில் பி.வாசு வெளியிட, கவுதம் வாசுதேவ் மேனன் பெற்றார். அப்போது இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் பேசியதாவது: எந்த படம் ஓடும், எந்த கதை ஜெயிக்கும் என்பதை சரியாகக் கணிப்பவர் கலைப்புலி எஸ்.தாணு.
அவர் இந்தப் படத்தை வாங்கி வெளியிடுகிறார் என்றால், அதில் ஏதோ ஒரு விஷயம் இருக்கும். இப்போது சினிமா ஆபத்தான சூழலில் சிக்கியிருக்கிறது. சின்ன பட்ஜெட் படங்கள் ஓடுவதே இல்லை. அவை வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை.
நல்ல கதை கொண்ட பல சின்ன பட்ஜெட் படங்கள் வருகின்றன. ஆனால், நல்ல கதை இருந்தால் கூட அந்த படங்கள் வெற்றி பெறுவதில்லை.
இப்படியொரு காலகட்டத்தில் வெளியாகும் இந்தப் படம், நல்ல கதையுடன் கூடிய சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையை ஆரம்பித்து வைக்க வேண்டும். வைக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார். ஆர்.கே.செல்வமணி, பார்த்தி, தாயன்பன், ஆர்.டி.ராஜசேகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment