பூனம் பாண்டே கைதுக்கு கோர்ட் இடைக்கால தடை

No comments
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டேவை கைது செய்ய கர்நாடக ஐகோர்ட் தடை விதித்தது. கடந்த 2011ம் ஆண்டு கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற்றால் கிரிக்கெட் மைதானத்தில் நிர்வாணமாக தோன்றத் தயார் என்று அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பெங்களூரை சேர்ந்த எஸ்.உமேஷ் என்பவர் பூனம் மீது வழக்கு தொடர்ந்தார்.

 மத ரீதியான உணர்வுகளை காயப்படுத்தும் அளவுக்கு பூனம் பாண்டே பேட்டி அளித்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பூனமிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. கடந்த புத்தாண்டு தினத்தன்று அவர் பெங்களூர் வந்தார். அப்போதும் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.

 எனவே அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்று வரும் பிப்ரவரி 12ம் தேதிக்குள் பூனம் பாண்டேவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி 6வது அடிஷ்னல் தலைமை மெட்ரோ பாலிட்டன் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதற்கு தடை விதிக்க கேட்டு பூனம் பாண்டே கர்நாடக உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை ஏற்று கீழ்கோர்ட்டின் கைது உத்தரவுக்கு நீதிபதி எச்.என்.நாகமோகன் தாஸ் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

No comments :

Post a Comment