தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் அனிரூத்
தன் மீது புகார் கொடுத்த தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் இசை அமைப்பாளர் அனிரூத். மம்முட்டி மகன் துல்கர் சல்மான், நஸ்ரியா நடிக்கும் படம் வாய் மூடி பேசவும். இப்படத்தை பாலாஜி மோகன் டைரக்டு செய்கிறார். வருண் மணியன் தயாரிக்கிறார். இவர் சமீபத்தில் இசை அமைப்பாளர் அனிரூத் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு புகார் செய்தார். அதில்,எங்கள் படத்துக்கு இசை அமைப்பதாக அனிரூத் ஒப்புக்கொண்டார்.
ஆனால் திடீரென்று இசை அமைக்க மறுத்துவிட்டார். குறிப்பிட்ட கால அளவிற்குள் பணியை அனிரூத் தொடங்காததால் படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் எங்களிடம் வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் அவர் திருப்பி தரவில்லை.
போன் செய்தபோது அதற்கு பதில் அளிக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து அனிரூத் தனது செயலுக்கு தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
அவர் கூறும்போது,உங்களிடம் பெற்ற அட்வான்ஸ் பணத்தை தயாரிப்பாளர் சங்கம் மூலம் திருப்பி தந்துவிடுகிறேன். படத்திற்கு இசை அமைக்க முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.
இந்த விஷயத்தை சமாதானமாக முடித்துக்கொள்ளுங்கள். என் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் உங்கள் படத்தில் பணியாற்ற விரும்புகிறேன். நீங்கள் தயாரிக்கும் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று அவர் கூறி உள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment