அலியா பட் என்னுடன் நடிக்கவில்லை: தனுஷ்

No comments
அலியா பட் என்னுடன் ஜோடி சேரவில்லை என்று கூறியுள்ளார் தனுஷ். கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் இடம் பிடித்த பரபரப்புச் செய்தி அடுத்து வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அலியா பட் நடிக்கிறார் என்பது. 

 ஆனால் அலியாவுடன் எந்த படத்திலும் தான் நடிக்கவில்லை, வரும் செய்திகளில் உண்மையில்லை என்று தனுஷ் டுவீட் செய்து அந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

 கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அனேகன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க முதலில் அழைக்கப்பட்டவர் அலியா பட். ஆனால் கே.வி.ஆனந்த் கேட்ட திகதிகளில் அலியா கைவசம் கால்ஷீட் இல்லாததால் ‘அனேகனி’ல் தனுஷுக்கு ஜோடியாகும் வாய்ப்பை இழந்துள்ளார். இப்போது அனேகன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஆமிரா நடித்து வருகிறார்.

No comments :

Post a Comment