விரைவில் ‘அரிமா நம்பி’

No comments
விரைவில் திரைக்கு வரவிருக்கிறது விக்ரம் பிரபுவின் ‘அரிமா நம்பி’. கலைப்புலி எஸ்.தாணுவின், ‘வி.கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் படம், ‘அரிமா நம்பி’. விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார்.

 படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கும் இப்படத்திற்கு ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைக்கிறார். இவர் இசை அமைக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 பரவலான ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஓடியோ மற்றும் டிரைலரை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு.

No comments :

Post a Comment