ரஜினி ரசிகர்களுக்கு ஆறுதலான அறிவிப்பு...
சங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புதிய படம் ‘2.ஓ’. இப்படத்தை லைக்கா நிறுவனம் ரூ.350 கோடி பட்ஜெடடில் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வருகிற நவம்பர் 20-ந் தேதி ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை மும்பையில் பிரம்மாண்டமாக நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இந்த பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் ரஜினி, சங்கர், அக்ஷய்குமார், ஏ.ஆர்.ரகுமான், எமி ஜாக்சன் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியை பாலிவுட்டின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்க இருக்கிறார்.
பிரம்மாண்டமான நடைபெறும் இந்த விழாவை உலகில் உள்ள அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியை யூடியூப்பில் நேரடியாக வெளியிடவிருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு ஓரளவுக்கு திருப்தியை கொடுத்தாலும், தங்கள் அபிமான நடிகர், இயக்குனரை நேரில் பார்க்க முடியாதே என்ற கவலையும் ரசிகர்களிடையே இருக்கிறது.
அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் லைக்கா நிறுவனம் மற்றொரு விஷயத்தையும் கூறியுள்ளது. இதுகுறித்து லைக்கா நிறுவனத்தை சேர்ந்த ராஜு மகாலிங்கம் கூறும்போது, ‘2.ஓ’ படத்தின் பர்ஸ்ட் லுக் மட்டும்தான் மும்பையில் வெளியிடப்படுகிறது. மற்றபடி, இப்படத்தின் டீசர், பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை தென்னிந்தியாவில் நடத்தவிருக்கிறோம். இதனால் ரசிகர்கள் வருத்தப்பட வேண்டாம். இது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.
உண்மையில் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்துதான்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment