யாருக்கு விருது கொடுத்தது யார்? - ஆனந்த விகடன் சினிமா விருதுகள் எக்ஸ்க்ளூசிவ் ----AnandaVikatanCinemaAwards

No comments


வெறும் சினிமாவுக்கான விழாவாக மட்டும் இல்லாமல் ஜல்லிக்கட்டு பற்றியும், தமிழர் பண்பாட்டை காக்க வேண்டும் என்பது குறித்தும் கலைத்துறையினர்  பல்வேறு கருத்துக்களை பிரகடனம் செய்ய, வரலாற்று சிறப்புடன்  'ஆனந்த விகடன் சினிமா விருது' விழா சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. சமூகப் பொறுப்பு கொண்டிருக்கும் ஒரு பத்திரிகையின் பெருமை மிகு பெருமித விழாவில் தான்  இத்தகைய விஷயங்களை பதிவு செய்ய முடியும் என்பதை  ஜனவரி 13 மாலை நடந்த விகடன் விழா நிரூபித்தது.

அன்றைய தினம்  விஜய்யின் கெட் அப்புக்கே அதிர்ந்தது ட்விட்டர். ரஜினி, கமல் ஒரே மேடையில் நிற்க ஆன்லைன் ரசிகர்களின் ஹார்ட்பீட்டோ எகிறியது! ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவானது, வரும் பிப்ரவரி மாதம் ஐந்தாம் தேதி ஞாயிறு அன்று  சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிலையில் விகடன் விருது வழங்கும் விழாவில் யாருக்கு யார் விருது வழங்கினார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. சரி, விழாவில் நடந்தது என்ன?


1. சிறந்த குணச்சித்திர நடிகர் :-

விசாரணை படத்தில் அருமையாக  நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர விருது சமுத்திரகனிக்கு வழங்கப்பட்டது. சமுத்திரகனிக்கு  இந்த விருதை பாலா வழங்கினார்.

2. சிறந்த கலை  இயக்கம் :-

24 படத்தின் கலை இயக்கத்துக்கு ஏகத்துக்கும் மெனக்கட்டு சிறப்பாகச் செயல்பட்ட அமித்ராய், சுப்ரதா சக்ரபோர்ட்டி இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இயக்குநர் ராம் விருது வழங்கினார்.

3. சிறந்த ஒப்பனை : -

காஷ்மோரா படத்தில் ஒவ்வொரு கெட் அப்புக்கும்   ஒப்பனையில் கவனம் செலுத்தி உழைத்த ரோஷன், இயக்குநர் கே.எஸ். ரவிகுமாரிடம் விருது  பெற்றார்.

4. சிறந்த நடன இயக்கம் :-

’வா மச்சானே...’  பாட்டுக்காக மாஸ்டர் தினேஷ் விருது பெற்றார். பாக்யராஜ் விருது தரப்போகிறார் என அறிவிக்கப்பட அரங்கமே கைத்தட்டி ஆர்ப்பரித்தது. மேடையேறிய பாக்யராஜ் தனது கவுண்டர்களால் எவ்வளவு பெரிய ஆளுமை என்பதை நிரூபித்தார். இந்த தருணங்களை சன்டிவியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது மிஸ் செய்து விடாதீர்கள்.

5. சிறந்த சண்டைப் பயிற்சி :-

விஜய்யின் தெறி படத்திற்கு சிறந்த சண்டைப் பயிற்சி விருது வழங்கப்பட்டது. ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், நடிகர் சசிகுமாரிடம் விருது பெற்றார்.  தெறிக்கு விருது என்றவுடன் அரங்கம் அதிர்ந்தது.

6.  சிறந்த ஆடை வடிவமைப்பு :-

இந்த விருது கபாலி படத்துக்கு வழங்கப்பட்டது. இந்த படத்தின் ஆடைவடிவமைப்பாளர்கள்   நிரஞ்சனி அகத்தியன், அனுவர்தான் இருவரும் மேடையேற, இயக்குநர் மற்றும் நடிகர் பார்த்திபன் விருது வழங்கி கவுரவித்தார்.

7.  சிறந்த பாடலாசிரியர் :-

தள்ளிப் போகாதே பாடல் தெறி ஹிட் என்பது உலகமறிந்தது. அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின்  தள்ளிப் போகாதேவில் ஹைக்கூக்களால்  இனிய தமிழ் பாய்ச்சிய தாமரை   சிறந்த பாடலாசிரியர் விருது பெற்றார். இயக்குநர் கே.வி ஆனந்த் தாமரைக்கு விருது வழங்கி கவுரவித்தார்.  தாமரை ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றியதையும், தற்போது ஆனந்த விகடனில் இருந்தே விருது கிடைத்திருப்பதையும் சொல்லி பூரித்தார்.

8. சிறந்த பின்னணிப் பாடகர் ;-

மாய நதி பாட்டில் மயக்கிய பிரதீப் குமார் இந்த விருதை வென்றார். அவருக்கு இளைய திலகம் பிரபு விருது வழங்கினார்.

Vikatan Awards

9. அதிக கவனம் ஈர்த்த படம் :-

கடந்த ஆண்டில் அதிக கவனம் ஈர்த்த கபாலி திரைப்படமே இந்த விருதை ஜெயித்தது , தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் பா.இரஞ்சித்தும் விருது வாங்க மேடையேறினார். இவர்களுக்கு சசிகுமாரும், சமுத்திரகனியும் விருது வழங்கினர்.

10. சிறந்த கதை :-

ஆதிக்கச் சாதி ஆணவத்தை நேர்மையாக சொன்ன, மாவீரன் கிட்டுக்கு சிறந்த கதை விருது கிடைத்தது.  இந்த படத்தின் கதாசிரியரும், இயக்குநருமான சுசீந்திரன், இயக்குநர் மகேந்திரன் கையால் விருது வாங்கினார்.

11. சிறந்த வில்லன் :-

கிடாரியில் மிரட்டிய வேல.ராமமூர்த்தி  சிறந்த வில்லன் விருதை வென்றார். நடிகர் அருண்விஜய் விருது வழங்கினார். ஆனந்த விகடனில் எழுத்தாளராக அங்கீகரிக்கப்பட்டத்தையும், தற்போது நடிப்பிற்கு விகடன் அங்கீகரித்ததையும் குறிப்பிட்டு பெருமிதப்பட்டார் வேல.ராம மூர்த்தி.

12. சிறந்த வில்லி :-

வெற்றிவேலில் அசத்திய வில்லியான விஜி சந்திரசேகர் இந்த விருதை பெற்றார். ஆர்.கே. சுரேஷ் இந்த விருதை வழங்கினார்.

13. சிறந்த நகைச்சுவை நடிகர் :-

ஆண்டவன் கட்டளை படத்தில் கிச்சுகிச்சு மூட்டிய யோகி பாபு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது பெற்றார். நடிகை குஷ்பூ இவருக்கு விருதை வழங்கினார். விருது வாங்கிய போது உணர்ச்சிவசப்பட்டு பேசினார் யோகி பாபு.

14. சிறந்த நகைச்சுவை நடிகை :-

ஆண்டவன் கட்டளையில் இயல்பான காமெடியை வெளிப்படுத்திய நடிகை வினோதினிக்கு குஷ்பு விருதை வழங்கினார். ஆனந்த விகடன் சிறுவயதில் இருந்தே படித்து வளர்ந்தேன், "சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி கொண்டிருந்தாலும், மிகக்கவனமாக கண்டுபிடித்தது என்னை அங்கீகரித்திருக்கிறது ஆனந்த விகடன். மறக்க முடியாத தருணமிது" எனச் சொல்லி நெகிழ்ந்தார் வினோதினி.

15. சிறந்த புதுமுக நடிகர் :-

உறியடி படத்துக்காக சிறந்த புதுமுக நடிகர் விருதை ஜெயித்தார் விஜயகுமார். இவர் தான் இந்த படத்தின் இயக்குநரும் கூட. இவருக்கு இயக்குநர் நலன் குமாரசாமி விருது வழங்கினார். உறியடிக்கு ஆனந்த விகடன் தக்க நேரத்தில் தந்த மரியாதையைக் குறிப்பிட்டு மகிழ்ந்தார் விஜயகுமார்.

16.  சிறந்த திரைக்கதை :-

விசாரணை படத்திற்காக வெற்றிமாறன் இந்த விருதை வென்றார். அவருக்கு இயக்குநர் வசந்த் விருதை வழங்கினார்.

17.  சிறந்த படக்குழு :-

இறுதிச்சுற்று படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இறுதிச்சுற்று டீம் முழுவதுமாக மேடைக்கு வந்து ஆனந்த கண்ணீருடன் விருது வாங்கியது. இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் விருதை வழங்கினார்.

18. சிறந்த வசனம் :-

ஜோக்கர் படத்தில் வசனத்தில் முத்திரை பதித்த ராஜூமுருகன், முருகேஷ் பாபு இருவருக்கும் விருது வழங்கப்பட்டது. இயக்குனர் லிங்குசாமி விருது வழங்கினார்.

19. சிறந்த குழந்தை நட்சத்திரம் :-

தெறி படத்தில் க்யூட்டாக அசத்திய தெறி பேபி நைனிகா தான் இந்த விருதை வென்றார். முதன் முறையாக ஒரு பிரமாண்ட அரங்கில் விருது பெரும் மகிழ்ச்சியில் வந்திருந்தார். நைனிகாவின் வேண்டுகோளின் படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த விருதை வழங்கினார்.

Vikatan Awards

20. சிறந்த புதுமுக இயக்குநர் :-

கிடாரி படத்தில் மேக்கிங்கில் அசத்திய பிரசாத் முருகேசன் இந்த விருதை ஜெயித்தார். அவருக்கு  இயக்குநர் விக்ரமன் விருதை வழங்கி கவுரவித்தார்.

21. சிறந்த குணச்சித்திர நடிகை :-

குற்றமே தண்டனை படத்தில் நடித்திருந்த பூஜா தேவரையா இந்த விருதை ஜெயித்திருந்தார். இவருக்கு இயக்குநர் பாலா விருதை வழங்கினார்.

22. சிறந்த ஒளிப்பதிவு :-

கிடாரி படத்திற்காக எஸ்.ஆர். கதிருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இந்த விருதை வழங்கினார்.

23. சிறந்த  VFX :-

24 படத்திற்காக ஜோலியன் டிராசெல்லியர் விருது ஜெயித்தார். அவருக்கு பதிலாக 2D புரொடக்ஷன்ஸ் இணைத்தயாரிப்பாளர் ராஜசேகர் விருது வாங்கினார். அவருக்கு பி.சி.ஸ்ரீராம் விருதை வழங்கினார்.

24. சிறந்த இசையமைப்பாளர் :-

சந்தோஷ் நாராயணன் கபாலி, இறுதிச்சுற்று திரைப்படங்களில் அருமையாக இசையமைத்ததால், கடந்த ஆண்டின்  சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜெயித்தார். இயக்குநர் பாரதிராஜா இந்த விருதை  வழங்கி கவுரவித்தார்.

25. சிறந்த படம் :-

விசாரணை சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறன் மேடையேறி விருது பெற்றார். அவருக்கு  பிரபல இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் விருது வழங்கினார்.

26. சிறந்த  தயாரிப்பு : -

ஜோக்கர் படத்தை தயாரித்த டிரீம்வாரியர் பிக்சருக்கு விருது கிடைத்தது. தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர். பிரபுவும் அவரது சகோதரர் எஸ்.ஆர். பிரகாஷும்  விருது பெற்றனர். சசிகுமாரும், சமுத்திரகனியும் இந்த விருதை இணைந்து வழங்கினார்கள்,

27. சிறந்த எடிட்டர் :-

விசாரணை படத்தில் பணிபுரிந்த எடிட்டர் கிஷோர் மற்றும் ஜிபி வெங்கடேஷ் விருது வென்றனர். கிஷோர் மறைவையொட்டி அவரது தந்தை வந்திருந்தார். இயக்குநர் வெற்றிமாறன் விருது வழங்கினார்.

28. சிறந்த இயக்குநர் : -

சிறந்த இயக்குநர் விருதை இயக்குநர் வெற்றிமாறன் விசாரணை திரைப்படத்திற்காக பெற்றார். இவருக்கு இயக்குநர் இமயம் பாரதிராஜா விருது வழங்கினார்.

29. சிறந்த நடிகை : -

ரித்திகா சிங், இறுதிச் சுற்று படத்துக்காக இந்த விருதை ஜெயித்தார். பாக்ஸர் மதி  இறுதிச்சுற்று டீமுடன் அமர்ந்திருந்தார். விருது அறிவிக்கப்பட்டவுடன் மேடையேற அவருக்கு எஸ்.பி. முத்துராமன் விருது வழங்கினார்.

30. சிறந்த நடிகர் :

'கபாலி' தான் இந்த விருதை ஜெயித்தார். கெத்து டானாக, காதல் கசிய மனைவியைத் தேடும் அன்பான கணவனாக, மகள் மீது பெரும் பாசம் வைத்திருக்கும் தந்தையாக என வெரைட்டி காட்டி ஒவ்வொருச் சின்ன அசைவிலும் பின்னியெடுத்த நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை ஜெயித்திருந்தார்.  ரஜினிக்கு இளைய தளபதி விஜய் விருதை வழங்க அரங்கமே அதிர்ந்தது.

Vikatan Awards

31. எஸ்.எஸ்.வாசன் விருது : -

ஆனந்த விகடனின் பெருமை மிகு எஸ்.எஸ்.வாசன் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்பட்டது. அபூர்வ கலைஞன் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் விருது வழங்கினார். ரஜினி, கமல் இரண்டு  பேரையும் மேடையில் பார்க்க நெஞ்சம் குளிர்ந்தனர் ரசிகர்கள். ரஜினி, கமல், வைரமுத்து மூவரும் கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் மேடையில் நின்ற அந்த செஷன் விழாவின் ஹைலைட்.


விகடன் சினிமா விருதுகள் 2016 விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் இமயம் பாரதிராஜா கலந்துகொண்டார்.  Cannot compromise Jallikattu for




No comments :

Post a Comment