மரபணு சோதனைக்கு மறுக்கும் தனுஷ்? வெளிச்சத்துக்கு வந்த உண்மை....

No comments

பணம் பறிக்கும் நோக்கத்திலேயே நடிகர் தனுஷ் மீது மேலூர் தம்பதி அபாண்டமாக வழக்கு தொடுத்துள்ளதாக வழக்கறிஞர் சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

நடிகர் தனுஷிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கத்திலேயே மேலூர் தம்பதி வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், மருத்துவ அறிக்கை தனுஷுக்கு சாதகமாக இருப்பதாகவும் வழக்கறிஞர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி மேலூர் தம்பதி கதிரேசன் - மீனாட்சி குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடலில் இல்லை என குறிப்பிட்ட அவர், சிறிய மச்சங்களை அழிக்க முடியும் என்றுதான் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் தனது உடலில் மச்சங்களை அழித்துவிட்டதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றார். மேலூர் தம்பதியின் இந்த நடவடிக்கைகள் தனுஷிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கமாக கூட இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே கதிரேசனின் வழக்கறிஞர் டைட்டஸ், நடிகர் தனுஷின் மருத்துவ அறிக்கையில் அங்க அடையாளம் அழிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் மரபணு சோதனைக்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த சோதனைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால், தனுஷ் தரப்பில் மறுக்கப்படுகிறது. அடுத்த விசாரணையின்போது எங்கள் தரப்பு இறுதி வாதத்தை எடுத்து வைப்போம் என்றார்.

கதிரேசன் தரப்பில் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பராமரிப்புச் செலவு கோரிய வழக்கின் விசாரணைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவும், விரைவில் விசாரணையை முடிக்கவும் கோருவோம் என்றார்.

No comments :

Post a Comment