பாவனாவின் அதிரடி கெட்டப்
முதன் முறையாக பொலிஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் நடிகை பாவனா. மிஷ்கினின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை பாவனா.இந்தப் படத்தைத் தொடர்ந்து வெயில், தீபாவளி போன்ற பல படங்களில் நடித்தவர், கடைசியாக அசல் படத்தில் நடித்தார். இதன் பின்பு மலையாளம் மற்றும் கன்னட படங்களில் பிசியான பாவனா, தற்போது நடித்துள்ள மலையாள படம் ஏழாமத்தெ வரவு.
இதன் கதையை மலையாளத்தின் பிரபல திரைக்கதை ஆசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதியிருக்க, பிரபல இயக்குனர் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.
விரைவில் வெளியாகவிருக்கும் இந்தப் படம் தனது சினிமா வாழ்க்கையில் குறிப்பிடும் படியான ஒரு படமாக அமையும் என்று கூறும் பாவனா, அடுத்து பொலிஸ் அதிகாரியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
பத்மகுமார் இயக்கும் இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லையாம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment