சிறப்புடன் நிறைவுகண்ட பரிஸ் தமிழ்த்திரைவிழா ! அடுத்த ஆண்டு சிறந்த படத்திற்கு 10 ஆயிரம் யூறோ ! (படங்கள் )

No comments
அடுத்த ஆண்டு சிறந்த ஈழத்தவர் திரைப்படத்திற்கு 10 ஆயிரம் யூறோக்கள் வழங்கப்படும் என்ற முழக்கத்துடன் பரிஸ் தமிழ்த் திரைவிழா ஈழத்தவர் திரைப்படங்களின் சங்கமமாக சிறப்புடன் நிறைவுகண்டுள்ளது.

கடந்த ஓகஸ்ற் 23ம் நாள் முதல் மூன்று நாள் நிகழ்வாக இடம்பெற்றிருந்த இத்திரைவிழாவில், யாழ்பாணம் உட்பட சுவிஸ், அவுஸ்றேலியா, கனடா ஆகிய நாடுகளில் ஈழத்தவர்களால் உருவாக்கப்பட்டிருந்த ஏழு திரைப்படங்கள் காண்பிக்கப்பட்ட்டிருந்ததோடு கருத்தாடல்களும் இடம்பெற்றிருந்தன.

சுவிசில் இருந்து திரைத்துறைக் கலைஞர்கள் உட்பட பிரான்சின் தமிழ்ச்சூழலில் செற்பட்டு வருகின்ற பல்வேறு துறைசார்ந்தவர்கள் பலரும் இந்நிகழ்விற்கு பங்கெடுத்து சிறப்பூட்டியிருந்தனர்.

மூன்று தiலைமுறைகளைக் கண்டு நிற்கும் புலம்பெயர் வாழ்வியல் பயணத்தில் இத்துறைக்கான புதிய தலைமுறையினரின் வரவு நம்பிக்கைகளுக்கு அச்சாணியிட்டுள்ளது என தனது கருத்துரையில் தெரிவித்திருந்த  சுதன்ராஜ் அவர்கள், நாடுகளைக்கடந்து வாழுகின்ற இனங்களின் சமூக-அரசியலை அடிப்படையாக கொண்டு உலக அரசியல் அசைவியக்கத்தில் புதியதொரு பேசு பொருளாக தோற்றம் பெற்றுள்ள 'நாடுகடந்த அரசியல்' எனும் அரசியல் பரிமாணத்தின் சாட்சியமாகவே இத்திரைவிழா அமைந்திருக்கின்றதென தெரிவித்திருந்தார்.

இவ்விழாவினை நடாத்திய தடம் அமைப்பின் பொறுப்பாளர் குணா அவர்கள் ஈழத்தவர்களின் முழுநீளத் திரைப்பட முயற்சிகளை ஊடக்குவிக்கு பொருட்டு அடுத்த ஆண்டு இவ்விழாவில் சிறந்த முழு நீளத்த்திரைப்படத்திற்கு 10 ஆயிரம் யூறோக்கள் வழங்கபடவுள்ளதாக தனது தெரிவித்திருந்தார்.







இந்திரைப்பட விழாவானது முதற்கட்டமாக ஈழத்தவர்களது அனைத்து முழுநீளத் திரைப்படங்களுக்குமான ஓர் திரையிடல் தளத்தினை அமைத்துக் கொடுத்துள்ளமை இதன் சிறப்பு என்பது இங்கு குறிப்பிடதக்கது.

No comments :

Post a Comment