பெரிய நடிகை ஆவதற்கு பிளான் பண்ணுவது வேஸ்ட் : இலியானா
பெரிய நடிகையாக வேண்டும் என்று திட்டம் வகுத்து நடிப்பது வேலைக்கு ஆகாது என்றார் இலியானா, இது பற்றி இலியானா கூறியதாவது: இந்தி படங்களில் நடிக்க சென்றதால் மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க மாட்டீர்களா? என்கிறார்கள்.இதே கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். தென்னிந்திய படங்களில் 6 வருடம் தொடர்ந்து நடித்திருக்கிறேன். இது எனக்கும் மிக நெருக்கமான இடம். எனக்கு மாற்றம் தேவைப்பட்டது.
தென்னிந்தியாவில் என்ன நிலை அடையவேண்டுமோ அதை அடைந்திருக்கிறேன். தற்போது எனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்த விரும்புகிறேன். பிராந்திய படங்களில் நடிப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. பாலிவுட்டில் நிறைய தென்னிந்திய நடிகைகள் போட்டியில் இருப்பதால் பாதிப்பா? என்கிறார்கள்.
பெரிய நடிகை ஆவதற்கு எந்த திட்டமும் வகுத்து வைக்கப்படவில்லை. திட்டத்தோட வந்த சிலர் காணாமல்போய் இருக்கிறார்கள். சினிமா ஒவ்வொரு நாளும் ஆச்சரியத்தை அளிக்கிறது. திட்டம் வகுத்து செயல்படுவதெல்லாம் வேலைக்கு ஆகாது.
என்னை நான் நம்புகிறேன். எது திருப்தி அளிக்குமோ அதைத்தான் செய்கிறேன். இதுவரை அது எனக்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. எதிர்காலத்திலும் அதைத்தான் செய்வேன்.
இந்தியை பொறுத்தவரை பர்பி படம் மட்டும்தான் நடித்திருக்கிறேன். ஒரு புதுமுகம் என்ற இடத்தில்தான் இருக்கிறேன். இவ்வாறு இலியானா கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment