நண்பேன்டா... கேங் உருவாக்கும் ஹீரோக்கள்

No comments
ஹீரோக்கள் தங்களுக்குள் நட்பு கேங் உருவாக்குவது இப்போது கோலிவுட்டில் ஃபேஷன். பாலிவுட்டை போல் தமிழ் சினிமாவில் மல்டி ஸ்டார் படங்கள் அதிகம் வெளியாவதில்லை. ஆனால் இந்த குறையை ஆஃப் ஸ்கிரீனில் ஹீரோக்கள் போக்கி வருகிறார்கள். ஜீவா, ஜெயம் ரவி நெருக்கமான நண்பர்களாக உள்ளனர்.

 அதேபோல் ஆர்யா, விஷாலும் நெருக்கமான நட்பில் இருக்கிறார்கள். இந்த நான்கு பேரும் சேர்ந்து தனி நட்பு கேங் உருவாக்கி இரு
க்கிறார்கள். அதில் சிபிராஜ், விஷ்ணு, பிரசன்னா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சினிமாத்தனமான நட்பாக இவர்களின் நட்பு இல்லாததுதான் சிறப்பு.


அதனாலேயே இவர்களின் பிரண்ட்ஷிப் தொடர்கிறது. அதே நேரம், தங்களது துறையில் தமது நண்பர்களை கைதூக்கிவிடவும் இந்த நட்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தங்களால் கால்ஷீட் ஒதுக்க முடியாதபட்சத்தில் குறிப்பிட்ட படத்தை தங்களது நண்பர்களுக்கு கிடைக்க உதவுகிறார்கள். எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்குபடத்தில் ஜீவா, ஜெயம் ரவிதான் நடிப்பதாக இருந்தார்கள். அந்த படம் ஆர்யா கைக்கு மாறியது இப்படித்தான். இப்போது இந்த ஜீவா அன்ட் கோ போல், இன்னொரு இளம் கேங் உருவாகியுள்ளது.

 அதில் விஜய் சேதுபதி, விமல், சிவகார்த்திகேயன், சிவா ஆகியோர் உள்ளனர். ஆனால் ஜீவா கேங் போல் இவர்கள் வெளியே நட்பாக அதிகம் திரிவதில்லை. நிகழ்ச்சிகளுக்கு ஒரே மாதிரி டிரஸ்சிலும் வருவதில்லை. மொத்தத்தில் தங்கள் மச்சான்ஸ் உறவை வெளிக்காட்டிக் கொள்வது இல்லை. அதே சமயம், பட வாய்ப்புகளை கைமாற்றிக்கொள்வதிலும் விட்டுக்கொடுப்பதிலும் நண்பேன்டா வாக இவர்கள் இருக்கிறார்கள்.
No comments :

Post a Comment