சூர்யாவின் அடுத்த படம் எஸ்கிமோ காதல்?

No comments
சூது கவ்வும் இயக்குனரின் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருக்குமரன் என்டர்டெய்மெண்ட் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் சூது கவ்வும்.

குறும்பட இயக்குனர் நலன் குமரசாமி இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படத்தின் இயக்குனர் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை விடுத்துள்ளார். இந்த படத்தையும் திருக்குமரன் என்டர்டெய்மெண்ட் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாம்.

இப்படத்திற்கு எஸ்கிமோ காதல் என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் இப்படத்தை பற்றிய ஏனைய தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இதே நலன் இயக்கத்தில் தான் சூர்யா நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா அடிக்கப்பட்டது.

ஆனால் அது இந்த படத்தில் தானா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சூர்யா தற்போது கௌதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' மற்றும் லிங்குசாமியின் பெயரிடப்படாத ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment