சும்மா நச்சுனு இருக்கு-திரைவிமர்சனம்

No comments
ரவுடிகள் தாக்கியதில் விபா கோமாஸ்டேஜை அடைகிறார். பிறகுதான் அவர் மலேசிய கோடீஸ்வரரான டத்தோ வெங்கடேஷ் மகள் என்று தெரிய வருகிறது. சென்னைக்கு படிக்க வந்த இடத்தில் விபா, ஆட்டோ டிரைவரை காதலிப்பதாகவும், அவரை மணந்து கொள்ள தான் மறுத்ததால் ஓடிவந்துவிட்டதாகவும் கூறும் வெங்கடேஷ், அந்த ஆட்டோ டிரைவர் தமன்தான் என்று முடிவு செய்கிறார்.

மகள் காதலை ஏற்பதாகக் கூறி தமனை மலேசியா அழைக்கிறார். தமன், விபாவின் காதலனாகவும், தம்பி ராமையா அவரது சித்தப்பாவாகவும், மகேஷ் நண்பனாகவும் மலேசியா செல்கிறார்கள். அங்கு வெங்கடேஷின் சொத்துக்களை அபகரிக்க நாள் பார்க்கிறார்கள். டத்தோவின் தம்பியாக பவர் சிங் (சீனிவாசன்) வருகிறார். இந்த குழப்பங்களை எப்படி தீர்த்து வைத்து சுபம் போடுகிறார்கள் என்பது மீதி கதை.

தமன் இன்னொரு சாக்லெட் பாய். ஆனாலும் தம்பி ராமையா, சீனிவாசன், அப்புக்குட்டி மூவருக்கும் நடுவில் தன்னையும் காமெடியில் நிலைநிறுத்திக் கொள்கிறார். விபா ஆரம்ப காட்சியிலேயே கோமாவுக்கு சென்று விடுவதால் அவருக்கான காட்சிகள் குறைவு. இறுதியில் அவர்தான் ட்விஸ்ட்டுகளை அவிழ்க்கிறார். இன்னொரு நாயகி அர்ச்சனா, தமனின் ரகசியத்தை தெரிந்து கொள்ள தம்பி ராமையாவை கரெக்ட் பண்ணுவதும், அதற்காக பிளான் போடுவதுமாக காமெடி கோஷ்டியில் சேர்ந்துவிடுகிறார்.

சித்தப்பா, திடீர் காதலன், திடீர் வில்லன் என தம்பி ராமையா ரவுண்ட் கட்டுகிறார். சதா சந்தேகத்தோடே திரிகிறார் அப்புக்குட்டி. சந்தானம் ஸ்டைல் டைமிங் டயலாக்கில் சிரிக்க வைக்கிறார் மகேஷ். எதையும் பளிச்சென்று நம்பும் வெங்கடேஷ் (இயக்குனர்) தன் பங்குக்கு சிரிக்க வைக்கிறார். சீனிவாசன் மலேசிய வில்லனாக வந்து நடித்து கொல்லு கொல்லு என்று கொல்கிறார்.


மலேசியாவின் அழகை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது சி.ஜே.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு. அச்சுவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ரீலுக்கு ஒரு ட்விஸ்ட் வைத்து காமெடி படம் தர முயற்சித்திருக்கிறார் இயக்குனர். ஆனால் ஒவ்வொரு கேரக்டரும் பக்கம் பக்கமாக பேசிக் கொண்டே இருக்கிறார்கள். நடிப்பு என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சீனிவாசனை காமெடியாகவே நடிக்க வைத்திருந்தால் ரசித்திருக்கலாம். அவரை வில்லனாக்கி கதையில் இருக்கும் சீரியஸ் ஏரியாவையும் காமெடியாக்கி இருப்பதால் சிரிக்க முடிந்த அளவு கதையோடு ஒன்றமுடியவில்லை.
தினகரன் விமர்சனக்குழு.

ஆட்டோ ஓட்டுனர்களான தமன், தம்பி ராமையா, மகேஷ் மூன்று பேருக்கும் குறுக்கு வழியில் பணம் சேர்க்க ஆசை. ஒருமுறை ரவுடிக் கூட்டத்திடமிருந்து தப்பும் விபாவை தமன் காப்பாற்ற,

No comments :

Post a Comment