கனவுக் கொட்டகையில் நூற்றாண்டு கனவு பாடல்
ஆர்குச் டாக்கிங் இமேஜஸ் சார்பில் தயாராகும் படம், ‘கனவுக் கொட்டகை’. மயில்சாமி மகன் அன்பு ஹீரோவாக அறிமுகமாகிறார். இசை, என்.ஆர்.ரகுநந்தன். பாடல்கள், மதன் கார்க்கி. இயக்கம், அர்சில் மூர்த்தி. இந்தப் படத்துக்காக, திரைத்துறையில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்கும் விதமாக ‘நூறாண்டு கனவுகள்’ என்ற பாடலை தயாரித்துள்ளனர்.
இந்தப் பாடலை ஜி.வி.பிரகாஷ் குமார் பாடி நடித்துள்ளார்.
இதை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது அர்சில் மூர்த்தி கூறியதாவது: 1990,ல் நடக்கும் கதை. கிராமத்து பின்னணியில், தியேட்டர் ஒன்றில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை தொகுத்து, படமாக உருவாக்குகிறோம்.
காமெடி கதை என்றாலும், சினிமா சம்பந்தப்பட்ட கதையாக இருப்பதால், டைட்டில் பாடலில் சினிமா நூற்றாண்டு பாடலை இடம்பெற வைத்துள்ளோம்.
மதன் கார்க்கி எழுதிய பாடலுக்கு ரகுநந்தன் இசையமைத்தார். இவ்வாறு அவர் கூறினார். அன்பு, டான்ஸ் மாஸ்டர் தம்பி சிவா, மதன் கார்க்கி, ஆர்ட் டைரக்டர் கிரண் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment