பிளாஸ்டிக் சர்ஜரியா? லட்சுமி மேனன் விளக்கம்
கொலிவுட்டில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் லட்சுமி மேனன்.
இவர் நடித்த கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டிய நாடு என அனைத்து படங்களுமே ஹிட் ஆனதால் சந்தோஷத்தில் திக்குமுக்காடி கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவரது முகத்தில் இருக்கும் சிறிய தழும்பு ஒன்றை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து மறைக்க போகிறார் என்ற பேச்சு நிலவி வந்தது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார் லட்சுமி மேனன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் அழகான பொண்ணு கிடையாது, பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கேன்.
அழகு என்கிற திமிரும் கிடையாது, அழகு குறைவா இருக்கேங்கற தாழ்வு மனப்பான்மையும் கிடையாது.
என் தோற்றத்துக்கு ஏற்ற கதாபாத்திரங்களில் நடிக்கிறேன், முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன், அதுதான் எனது வெற்றிக்கு காரணம்.
முகத்தில் உள்ள தழும்பை பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணப்போறதா சொல்றாங்களாம்.
அப்படி ஒரு எண்ணம் முதல் இருந்திச்சு, இப்போ அந்த ஐடியாவை விட்டுட்டேன்.
ஏனா அந்த தழும்பு அழகா எக்ஸ்ட்ரா அட்ராக்ஷன்னு எல்லோரும் சொல்றாங்க என்று கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment