அட்சய பாத்திரம் கொரியா படங்கள்
கொரியாவில் பிறந்த அனைவருமே உலக சினிமாவுக்கு படி அளப்பதற்காகவே கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் போல. இவர்கள் இல்லையென்றால் உலகிலுள்ள எந்த இயக்குநராலும் ஸ்டார்ட் கட் கூட சொல்ல முடியாது. இந்த உண்மையும் அவர்களுக்கு
தெரியுமா என்பதே சந்தேகம்தான்.
ஆனால், நாளை கொரியப் படங்களை இயக்க விருக்கும் இன்றைய கொரிய உதவி இயக்குநர் உட்பட சகல படைப்பாளிகளும் அனைத்து இன, மொழி திரைத்துறையினருக்கும் கதைகளையும், காட்சிகளையும் பல யுகங்களாக தாரை வார்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது மட்டும்
கமர்ஷியல் அம்மன் மீது சத்தியம்.
கொரிய திரையுலகம் மட்டும் இல்லாவிட்டால் மவனே உலகத்தில் என்ன... தமிழ் உட்பட இந்திய மொழிகள் எதிலும் ஒரு படம் கூட உருவாகாது. அந்தளவுக்கு குருதிக்கு பதிலாக அங்குள்ள கதாசிரியர்களின் உடம்பில் கதைகளும், காட்சிகளும் ஓடுகின்றன. அதனால்தான் ஹாலிவுட்டின் பெரியப் பெரிய ஸ்டூடியோக்கள் எல்லாம் கை கட்டி பவ்யமாக கொரிய திரையுலகின் முன்னால் நிற்கின்றன. ரீமேக் ரைட்ஸை வாங்குகின்றன. பிழைக்கத் தெரிந்த புண்ணியவான்கள் கமுக்கமாக தங்கள் மொழிகளில் சுட்டு வசூலை அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.
இப்படிப்பட்ட படி அளக்கும் பிரமன்கள் இந்த ஆண்டு என்ன செய்திருக்கிறார்கள்?
சந்தேகமே இல்லாமல் வைரத்தை வாரி இறைத்திருக்கிறார்கள். எடுப்பதும் எடுக்காததும் அவரவர் விருப்பம். டாப் 10ஐ மட்டும் பார்ப்போமா?
How to Use Guys with Secret Tips. தலைப்பே கதையை சொல்லிவிட்ட
பிறகு குறிப்பு எல்லாம் எதற்கு? ஸ்டைலிஷ் மேக்கிங். பட தொடக்கத்தில் கலர்ஸை பயன்படுத்தியிருக்கிறார்கள் பாருங்கள்... சான்ஸே இல்லை.
காமெடி படமான Man on the Edge விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் ஒருசேர கொண்டாடப்பட்ட படம். படத்தை பார்த்து முடித்ததும் உச்சி முகர்ந்து அருகில் இருப்பவர்களை நீங்கள் முத்தமிடாவிட்டால் உங்களுக்கு ஏதோ கோளாறு என்று அர்த்தம்.
டைரியை வாசிப்பது போல் செல்லும் Nobodys Daughter Haewon இன்னொரு முக்கியமான படம். இதிலுள்ள டுவிஸ்டுகள் இன்னும் பல காலங்களுக்கு செல்லுபடியாகக் கூடியவை. ஃபேமிலி டிராமா. உணர்ச்சிகளின் குவியல். ஆனால், சீட்டில் கட்டிப் போடுபவை.
New World அடிப்படையில் கேங்ஸ்டர் படம். நடித்திருப்பவர்கள் அனைவரும் டாப் மோஸ்ட் நடிகர்கள். எனவே, பட்டையை கிளப்பியிருக்கிறார்கள். சிறையிலிருந்து மாஃபியா லீடரை தப்பிக்க வைக்க வேண்டும். அதை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள், காவல்துறை எப்படி அதை தடுக்கப் போகிறது என்பது பரபர திரைக்கதை.
விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட இன்னொரு ஆக்ஷன் டிராமா, Fists of Legend. சிறைக்கு செல்லும் நான்கு நண்பர்களில் ஒருவருக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கிறது. காரணம், அவனது பெற்றோர் செல்வாக்கு மிக்கவர்கள். மீதி மூன்று பேரும் சிறையிலேயே தங்கள் காலத்தை கழிக்கிறார்கள். இதன்பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் செகண்ட் ஆஃப்.
Killer Toon பக்கா ஹாரர் படம். தொடர் கொலைகளுக்கு காரணமானவர்களை கண்டுபிடிப்பதுதான் லைன். வசூல்? திருப்பதி பெருமாளே கடன் கேட்கும் அளவுக்கு கொட்டியிருக்கிறது.
அதிகம் பேர் பார்த்தவர்களின் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் படம், Miracle in Cell No. 7. ஃபேமிலி டிராமாதான். ஆனால், அதகளம் செய்திருக்கிறார்கள்.
The Berlin File பக்கா ஆக்ஷன் மேளா. ஜனவரியில் ரிலீசான இந்தப் படம், இதோ இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கும் நொடி வரை ரசிக்கப்பட்டு வருகிறது.
முதல் நாள் வசூலில் முதலிடம் பிடித்த படம், Secretly Greatly. ஆரம்ப ஜோர் இறுதி வரை குறையவேயில்லை என்பதுதான் ஹைலைட்.
ரைட், கொரியாவில் ரீமேக் படங்களே எடுக்கப்படுவதில்லையா?
நல்ல கேள்வி. எடுத்திருக்கிறார்கள், எடுத்தும் வருகிறார்கள். ஆனால், ஒரிஜினலை விட ரீமேக் பிரமாதமாக இருக்கும் என்பதுதான் விசேஷம். இதற்கு நல்ல உதாரணம், இந்த ஆண்டு வெற்றிப் பெற்ற படங்களில் ஒன்றாக அமைந்திருக்கும் சிஷீறீபீ ணிஹ்மீs. ஹாங்காங்கில் வெற்றிப் பெற்ற Eye in the Sky என்ற படத்தின் அதிகாரப்பூர்வமான தழுவல் இது.
சுருக்கமாக சொல்வதெனில் இந்த ஆண்டும் கொரியப் படங்கள் மகத்தான சாதனைகளை நிகழ்த்தியிருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் டி.வி.டி. வாங்கிப் பாருங்கள். இல்லையென்றாலும் ஒன்றும் பிரச்னையில்லை. அடுத்தடுத்த வருடங்களில் இந்தப் படங்கள் பக்காவாக தமிழ் உட்பட பல மொழிகள் பேசும். அப்போது பார்த்துக் கொள்ளலாம்!
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment