விஜய் சேதுபதி தயாரிப்பாளரானார்
பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, புறம்போக்கு படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் மூலம் தயாரிப்பாளராகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், சொந்தப் படம் தயாரிக்கும் ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால், நடிப்பில் பிசியாக இருந்ததால் அந்த திட்டம் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. இப்போதும் பல படங்களில் நடித்து வருகிறேன்.
என்றாலும், இதுதான் படம் தயாரிக்க சரியான தருணம் என்பதால், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தை தயாரிக்கிறேன். ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர்கள் நடிக்கிறார்கள். என்னுடன் கணேஷ் இணைந்து தயாரிக்கிறார். பொய் படத்தின் ஒளிப்பதிவாளர் பிஜூ விஸ்வநாத் எழுதி இயக்கி ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment