உங்களுக்கு பிடித்த கனவுக்கன்னி எங்கே பிறந்தாங்கனு தெரிஞ்சிக்கனுமா?.- படங்கள்

No comments
கடந்த ஆண்டில் டாப் கதாநாயகிகளாக வலம்வந்த நடிகைகள் இன்றும் நமது இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டு தான் உள்ளனர். அந்த வகையில் உங்களுக்கு பிடித்த கனவுக்கன்னிகள் பிறந்த இடங்களை பார்ப்போமா?....

சமந்தா, சென்னை

தமிழ் நாட்டின் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை எல்லா ஆண்களையும் கவர்ந்தவர் சமந்தா. இந்த அழகு தேவதையின் பிறந்த இடம் வேற எதுவும் இல்லைங்க... நம்ம சென்னைதான்!

நயன்தாரா, பெங்களூர்

நடிகை நயன்தாரா வளர்ந்தது என்னவோ கேரளாவின் திருவல்லா என்றாலும் பிறந்தது பெங்களூரில் தான்.

நஸ்ரியா, திருவனந்தபுரம்

கடந்தாண்டில் பல இளசுகளின் தூக்கத்தை கெடுத்த கொலிவுட்டின் குட்டி தேவதை நஸ்ரியா. இவங்க பொறந்தது கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் தாங்க.
ஹன்ஷிகா மோத்வாணி, மும்பை

ரசிகர்களால் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்ஷிகா மோத்வாணி பிறந்தது மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகரான மும்பையில் தான்.
அமலா பால், எர்ணாகுளம்

சிந்து சமவெளியில் கொஞ்சம் சறுக்கினாலும் தொடர்ந்து ஆர்யா, விக்ரம், சித்தார்த், விஜய் என்று முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து இன்று தமிழ் சினிமாவின் டாப் கதாநாயகிகளில் ஒருவராக ஆகிவிட்டார். இந்தத் தலைவாவின் தலைவி பிறந்த இடம் கேரள மாநிலம் எர்ணாகுளம் நகரில்.

அனுஷ்கா ஷெட்டி, மங்களூர்

அருந்ததியாக நம்மை பயமுறித்தினாலும் சூர்யாவின் சிங்கம் படத்தில் கூலாக நடித்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா ஷெட்டி. இந்த தெய்வத்திருமகள் பிறந்த இடம் கர்நாடக மாநிலம் மங்களூரில்.

லக்ஷ்மி மேனன், கொச்சி

முதல் படம் கும்கியாக இருந்தாலும் சுந்தரபாண்டியன் படம் மூலமாக நம்ம பக்கத்து வீட்டு பொண்ணுங்கற இமேஜோட நிறைய பேரு மனசுல லக்ஷ்மி மேனன் இடம் பிடிச்சிட்டாங்க. இவங்க பொறந்த இடம் கேரள மாநிலம் கொச்சி நகரில்.
பிரியங்கா சோப்ரா, ஜம்ஷெட்பூர்

இளைய தளபதியின் தமிழன் படத்தில் அறிமுகமானாலும் இன்று பிரியங்கா சோப்ரா ஹிந்தி திரையுலகின் டாப் கதாநாயகிகளில் ஒருவர். இவர் பிறந்த இடம் ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூர் நகரத்தில்.
சோனாக்ஷி சின்ஹா, பாட்னா

சல்மான்கானின் இமாலய வெற்றிபெற்ற படமான 'தபாங்' படத்தின் கதாநாயகி சோனாக்ஷி சின்ஹா. இவர் ஹிந்தி திரையுலகின் பிரபல நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகளாக பீகார் தலைநகர் பாட்னாவில் பிறந்தார்.

பரினீத்தி சோப்ரா, அம்பாலா

பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் ஒன்று விட்ட தங்கையான பரினீத்தி சோப்ரா இன்றைய மாடர்ன் யூத்களின் ஹாட் ஃபேவரைட். இந்த பூவுலக தேவதை பிறந்த இடம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான அம்பாலாவில்.No comments :

Post a Comment