ராணி முகர்ஜிக்கு கல்யாணம்!

No comments
திருமண பந்தத்தில் இணையப் போகிறார் பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. இந்தி நடிகை ராணி முகர்ஜியும், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

 இருவரும் அடிக்கடி வெளிநாடுகளிலும் ஒன்றாக சுற்றி விட்டு வந்தார்கள். இருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்பட்டது. தற்போது திருமண திகதியும் முடிவாகியுள்ளது. பிப்ரவரி மாதம் 10ம் திகதி திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

முகூர்த்தம் ஜோத்பூரில் உள்ள உமைத்பவன் மாளிகையில் நடக்கிறது. இரண்டு வாரங்கள் திருமண சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளனர். திருமணத்தை உறவினர்களை மட்டுமே அழைத்து ரகசியமாக நடத்த முடிவு செய்துள்ளார்களாம் மேலும் இந்தி நடிகர், நடிகைகளில் நெருக்கமான சிலரை மட்டுமே அழைக்க திட்டமிட்டு உள்ளனர்.

No comments :

Post a Comment