எமி ஜாக்சனின் மனிதாபிமானம்

No comments
விலங்குகள் மீது அதிக அக்கறை காட்டி வருகிறாராம் ஆங்கில தேவதை எமி ஜாக்சன்.
விலங்குகள் மீது தீராத பற்று கொண்டவர் நடிகை த்ரிஷா. பூனை, நாய் உட்பட ரோட்டில் அனாதையாகத் திரியும் பல விலங்ககளை கைப்பற்றி உரிய இடங்களில் ஒப்படைக்கும் நல்ல செயலை பல வருடங்களாகச் செய்து வருகிறார். இதற்கென்றே தனியாக இருக்கும் அமைப்பான ‘பீட்டா’விலும் (People for the Ethical Treatment of Animals - PETA) நீண்ட நாட்களாக இருக்கிறார் த்ரிஷா.

தற்போது இந்த அமைப்பில் புதிதாக இணைந்திருக்கிறார் ‘ஐ’ பட நாயகி எமி ஜாக்ஸன்.

சமீபத்தில் பரபரப்பான சாலை ஒன்றில் பெட்டிக்குள் வைத்து யாரோ போட்டுச் சென்ற பூனைக்குட்டிகளைக் கைப்பற்றி தானும், சகோதரியும் அதனை வளர்த்து வருகிறார்கள்.

அதோடு, விலங்குகள் மீது அதிக அக்கறை உள்ள எமி தன்னை ‘பீட்டா’வில் இணைத்துக் கொண்டு, சமீபத்தில் ஒரு விழிப்புணர்வு விளம்பரப் படம் ஒன்றிலும் தோன்றியிருக்கிறார்.

அந்த விளம்பரத்தில் ‘‘விலங்குகளுக்கு தேவதையாக இருங்கள், விலங்குகளை வாங்காதீர்கள், அவற்றைத் தத்தெடுங்கள்’’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இதுகுறித்து எமியிடம் கேட்டபோது, ‘‘வழக்கமாக நாய் அல்லது பூனைகளை வாங்க விரும்புபவர்கள் அதற்கென்று உள்ள பெட் ஷாப்களில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து வாங்குகிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது ஒரு தேவையில்லாத செலவுதான். நம் கண் எதிரேயே எவ்வளவோ விலங்குகள் ஆதரவின்றி ரோட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எடுத்து வளர்ப்பதன் மூலம் அவற்றிற்கு ஆதரவு அளித்த மனத்திருப்தியும் கிடைக்கும். பணமும் மிச்சமாகும் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment