எனது திருமண பந்தம்: மனம் திறக்கிறார் மைனா
பெற்றோர் பார்க்கின்ற மாப்பிள்ளையை மணம் முடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் அமலா பால்.
தமிழில் கிராமத்து கதையை அடிப்படையாக கொண்டு நடித்த மைனா படம் மூலம் ரசகிகர்களை சென்றடைந்தார் அமலாபால்.
அதனை தொடர்ந்து ஆர்யா, விக்ரம், விஜய் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
தற்போது தமிழில் நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி, மலையாளத்தில் ஒரு இந்தியன் பிரணயக்கதா, லைலா ஒ லைலா மற்றும் தெலுங்கில் ஒரு படம் என தன் கைவசம் 5 படங்களை வைத்திருக்கின்றார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் அளித்துள்ள பேட்டியில், தமிழ் படத்தில் நான் நடித்த முதல் படம் கிராமத்து கதையை அடிப்படையாக கொண்டு இருந்தது. அதற்காக நான் அதிகமாக மகிழ்ச்சி அடைந்தேன். அதனை தொடர்ந்து கிராமத்து வேடங்களில் நடிப்பதற்கு பல வாய்ப்புகள் வந்தன. ஆனால், ஒரே மாதிரியான வேடங்களில் நடிக்க நான் விரும்பவில்லை.
மேலும் வரலாற்று படம் ஒன்றில் நடித்து விட வேண்டும் என்பதே எனது கனவாக உள்ளது. தற்போது எனக்கு 22வயது தான் ஆகின்றது எனவே தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை, அவ்வாறு திருமணம் செய்தால் எனக்கு தெரிந்த ஒரு நபரையே மணம்முடிப்போன் என்றும் பெற்றோர் பார்த்து நடக்கும் திருமணமாக இருக்காது என கூறியுள்ளார் அமலா பால்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment