ஏப்ரல் 11ல் உலகெங்கும் ‘கோச்சடையான்’
சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் திரைப்படம் வரும் ஏப்ரல் 11ம் திகதி உலகெங்கும் வெளியாகிறது.
மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தயாரிப்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிரமாண்ட அதி நவீன திரைப்படமான கோச்சடையான் வரும் ஏப்ரல் 11-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது என்பதை ஈராஸ் நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.
கோச்சடையான் உலக அளவில் அவதார், டின்டின் படங்களுக்குப் பிறகு போட்டோரியலிஸ்டிக் பர்பார்மென்ஸ் கேப்சர் டெக்னாலஜி முறையில் தயாராகும் மூன்றாவது படம் கோச்சடையான்.
நன்மைக்கும், தீமைக்கும் இடையில் நடக்கும் பிரமாண்ட யுத்தமான கோச்சடையானில் இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
தீபிகா படுகோன் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். சரத்குமார், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆஸ்கர், கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள் வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை வெளியிடுவது குறித்து ஈராஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் சுனில் லுல்லா கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையானை வெளியிடுவதில் ஈராஸ் பெருமை கொள்கிறது. இந்தப் படம் உலக சினிமாவில் புதிய சாதனை படைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment